மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500!

நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு  லிட்டர் ரூ 1,500!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500!

புறா பாண்டி

‘‘கத்திரியில் காய்ப்புழுத் தாக்குதல் உள்ளன. இதற்கு அக்னி அஸ்திரம் பயன்படுத்தலாமா? இதைத்

நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு  லிட்டர் ரூ 1,500!

தயாரிப்பது எப்படி?’’

எஸ்.குணா, தலைவாசல்.

ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் தன்னுடைய பயிற்சி வகுப்புகளில் தந்திருக்கும் விளக்கங்களே இந்தக் கேள்விக்குப் பதிலாக இங்கே இடம் பிடிக்கின்றன.

‘‘காய்ப்புழு, தண்டுத் துளைப்பான்... போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்தவும், வாழையில் வாடல் நோயை விரட்டவும், அக்னி அஸ்திரத்தைப் பயன்படுத்தலாம். நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர், புகையிலை, பச்சை மிளகாய், வேம்பு இலைகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்த தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.

நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு  லிட்டர் ரூ 1,500!

தேவையான பொருட்கள்:

புகையிலை - அரை கிலோ,

பச்சை மிளகாய் - அரை கிலோ,

வேம்பு இலை - 5 கிலோ

பசுமாட்டுச் சிறுநீர் (கோமியம்) - 15 லிட்டர்

மண்பானை.

தயாரிக்கும் முறை:

நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு  லிட்டர் ரூ 1,500!



மேற்கண்டவற்றை மண்பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது, வேறு பாத்திரங்கள் பயன்படுத்தினால் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு அக்னி அஸ்திரம் பலமிழக்கக் கூடும்) போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும். நான்கு முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்கவேண்டும். இறக்கியபிறகு, பானையின் வாயில் துணியைக் கொண்டு கட்டி 48 மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும். நீரின் மேல் ஓர் ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கிவிட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம். பூச்சிகளை விரட்ட 200 லிட்டர் நீரில் 6 லிட்டர் அக்னி அஸ்திரத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். வாடல் நோயைத் தடுக்க, கன்று நடவு செய்தவுடன் மாதம் ஒரு முறை அக்னி அஸ்திரத்தை இலை வழியாகத் தெளிக்க வேண்டும். இப்படி நான்கு மாதம் தெளித்து வந்தால் வாடல் நோய் அண்டாது.’’

‘‘பால் பண்ணை வைக்க விரும்புகிறோம். வங்கிக் கடன் கிடைக்குமா?’’

நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு  லிட்டர் ரூ 1,500!


 
சிவ. ஜெய்சங்கர், கரியாப்பட்டினம்.

பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் மேலாளரும், கால்நடை மருத்துவருமான ஓ.ஹென்றி ஃபிரான்சிஸ் பதில் சொல்கிறார்.

‘‘தமிழ்நாட்டில் பால் பண்ணையை முழு நேரத்தொழிலாகச் செய்ய விரும்புபவர்களுக்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கடன் உதவி வழங்கி வருகின்றன. குறிப்பாக, எஸ்.பி.ஐ என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் ‘டெய்ரி பிளஸ்’ என்ற திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு மாடுகள் கொண்ட சிறிய பால் பண்ணை முதல், நூற்றுக்கணக்கான மாடுகள் கொண்ட பெரிய அளவு பால் பண்ணை அமைப்பது வரையிலும் கடன் உதவி பெறலாம்.

கடன் பெறும் விவசாயிகள், கடன் தொகைக்கு ஈடாக, சொத்து அடமானம் வழங்க வேண்டும். பால் பண்ணை அமைக்கக் கடன் கொடுக்கும்போது, ஒரே நேரத்தில் முழுத்தொகையும் வழங்க மாட்டார்கள். உதாரணத்துக்கு 10 மாடுகள் கொண்ட பண்ணை தொடங்க     விண்ணப்பித்தால், முதலில் 5 மாடுகளுக்குக் கடன் கொடுப்பார்கள். அடுத்து, ஆறு மாதம் கழித்து, 5 மாடுகளுக்குக் கடன் கொடுப்பார்கள். இதற்குக் காரணம், பண்ணையில் உள்ள மாடுகள் கறவையில் இருந்தால், ஆண்டு முழுக்க வருமானம் கிடைக்கும். அப்போதுதான் தவணையை ஒழுங்காகச் செலுத்த முடியும் என்பதுதான்.

நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு  லிட்டர் ரூ 1,500!

10 மாடுகளுக்கு, ஓர் ஏக்கர் அளவில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய வேண்டும். உங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் பாலைக் கொள்முதல் செய்வதற்காக ஆவின் அல்லது தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். வாய்ப்பு இருந்தால், நீங்களேகூட நேரடியாக விற்பனையில் ஈடுபடலாம்.’’

‘‘கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் பசுமை விகடன் சார்பில் நடைபெற்ற ‘வீட்டுக்குள் மெடிக்கல் ஷாப்’ கருத்தரங்கில் கலந்துகொண்டோம்.

அப்போது, இலவசமாக வழங்கப்பட்ட இரண்டு நோனி மரக்கன்றுகளைத் தோட்டத்தில் நடவு செய்தோம். இப்போது, இரண்டு செடிகளும் காய்த்துள்ளன. இதிலிருந்து ஜூஸ் தயாரித்துப் பயன்படுத்துவது எப்படி?’’

கே.பிரியா, காஞ்சிபுரம்.

நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு  லிட்டர் ரூ 1,500!



தூத்துக்குடி மாவட்டம், காளாம்பட்டியைச் சேர்ந்த மூத்த வேளாண் வல்லுநரும், முன்னோடி நோனி விவசாயியுமான சீனிவாசன் பதில் சொல்கிறார்.

‘‘உலகம் முழுவதும் கொண்டாடும்,  இந்த நோனியை தமிழ்நாட்டில் பரவலாக்கிய, பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுக்கும், உங்கள் வீடுகளில் நோனிச் செடிகள் வளர பாலம் அமைத்துக் கொடுத்த பசுமை விகடனுக்கும் நன்றி. தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சணத்தி வகையைச் சார்ந்தது ‘வெண் நுணா’ என்னும் ‘நோனி’ மரம். ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நோனிப் பழங்களின் பழச்சாறுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலைநாடுகளில் வரவேற்பு அதிகம்.

 இதைச் சாகுபடி செய்வதும் எளிது. அதை விட எளிமையானது இதன் ஜூஸ் தயாரிப்பது. தற்போது எங்கள் தோட்டத்தில் நோனியைச் சாகுபடி செய்துள்ளோம். பொதுவாக ஒன்றரை வயது முதலே, நோனி காய்க்கத் தொடங்கும். நோனி மரத்தில் பழுக்காது. எனவே, நாம்தான் பழுக்க வைத்துப் பயன்படுத்த வேண்டும். நோனிக் காய்கள் முதலில் மஞ்சள் நிறமாக இருக்கும். பிறகு, வெண்மை நிறத்துக்கு மாறும். காயைத் தொட்டுப்பார்த்தால் கெட்டியாக இருக்கும். இதுவே அறுவடை செய்ய ஏற்ற நேரம். அறுவடை செய்த நோனியை தண்ணீரில் அலசி, நிழலில் காய வைக்கவும்.

அடுத்து, பாத்திரக் கடைகளில் அப்பளக் கூடை என்று விற்பார்கள். அதில் கூட நோனியைப் போட்டு, பழுக்க வைக்கலாம். இறுக்கமாக மூடும் வசதி கொண்ட பாத்திரம் இருந்தாலும்கூடப் போதும். 10 நாட்களில் நோனி பழுத்து, சாறு இறங்கிவிடும். இதை வடிக்கட்டி வைத்து, அதிகபட்சம் ஓர் ஆண்டு வரைகூடப் பயன்படுத்தலாம். காலை வெறும் வயிற்றில் 15 மில்லி நோனிச் சாறுடன் 100 மில்லி தண்ணீர் கலந்து, கொஞ்சம், கொஞ்சமாக அருந்த வேண்டும். இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன்பு, இதே அளவு குடிக்கலாம். ஆக, நாள் ஒன்றுக்கு 30 மில்லி குடித்தால் போதும். ஒரு சிலருக்கு நோனிச் சாறு ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ளாது. அதாவது, நோனிச் சாற்றைக் குடித்தால், வயிற்றுப் போக்கு,  உடம்பு நமச்சல் எடுக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், நோனிச் சாற்றைக் குடிப்பதை ஒரு வார காலத்துக்கு நிறுத்தவும். பின்பு, மீண்டும் குடித்துப்பார்க்கலாம்.

நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு  லிட்டர் ரூ 1,500!

கடந்த 5 ஆண்டுகளாக நோனிச்சாற்றைக் குடித்து வருகிறேன். இதனால், இந்த 84 வயதிலும், வயலில் இறங்கிக் களை கொத்துகிறேன், மண் வெட்டி பிடித்து வேலை செய்கிறேன். இந்த வயதிலும் சுறு சுறுப்பாக இருப்பதற்கு நோனிச்சாறுதான் மூலக் காரணம். நோனிச் சாற்றைக் குடிக்கத் தொடங்கினால், நோய் நொடிகள் எட்டிப்பார்க்காது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நோனிச் செடிகள் வளர்ப்பது அவசியம். அதுவும், கடுமையான உடல் உழைப்பாளிகளான விவசாயிகள், தங்கள் நிலத்தில் நோனி மரங்களை வளர்த்து, ஆரோக்கியத்தைக் காப்பது அவசியம். வந்த நோயை போக்கும், வரும் நோயைத் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு. மேலும், கோவைக்கு அருகிலுள்ள, சூலூர்ப் பகுதியில் வேலுச்சாமி என்பவரும், இயற்கை முறையில் நோனி சாகுபடி செய்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகள் வயது கொண்ட 40 செடிகளிலிருந்து, மாதம் 40 லிட்டர் நோனிச் சாறு எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

தற்போது நோனிப் பழச்சாறு 400 ரூபாய் தொடங்கி 1,500 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. நோனி ஆண்டு முழுவதும் காய்க்கும் தன்மை கொண்டது. 5 கிலோ பழத்திலிருந்து 1 லிட்டர் சாறு கிடைக்கும். நோனியை முற்றிலும் இயற்கை உரங்கள் மூலமே வளர்க்க முடியும். இவ்வளவு தகவல்களைச் சொல்வதால், என்னை நோனிக் கன்றுகள் விற்கும் வியாபாரி என்று நினைத்துவிட வேண்டாம். நான் முழு நேர விவசாயி. இந்த அற்புதமான நோனிச் சாகுபடி குறித்த தகவல்கள் தேவைப்பட்டால், என்னைத் தொடர்பு கொள்ளவும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 82205 53461.

நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு  லிட்டர் ரூ 1,500!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.