மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்...  நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

புறாபாண்டி

‘‘எங்கள் வீட்டில் முள் சீத்தா என்ற அரிய மரத்தை வளர்த்து வருகிறோம். இந்த மரம் எப்போது காய்க்கும், இதன் பலன்கள் பற்றிச் சொல்லுங்கள்?’’

எம்.ராஜமாணிக்கம், மேட்டுப்பாளையம்.
 
டலூர் மாவட்டம், விருத்தாசலம் மண்டல வேளாண் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் அனீசாராணி பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்...  நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

‘‘தற்போது, முள் சீத்தா குறித்த விழிப்பு உணர்வு வேகமாகப் பரவி வருகிறது. மருத்துவக் குணம் கொண்ட முள் சீத்தாவின் தாயகம், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா. தட்பவெப்ப நாடுகளில் பரவலாகக் காணப்படும். இயற்கையாகவே தமிழ்நாட்டில் உள்ள தோட்டங்களிலும் வேலிகளிலும் ஆற்றுப் படுகைகளிலும் வளர்ந்து நிற்கின்றன. சிறிது இனிப்பும் துவர்ப்பும் கலந்து, அன்னாசிப்பழம் போன்று சுவையும் மணமும் கொண்டது. வெண்மையான தோற்றத்தில் சதைப்பற்றுடன் இருக்கும். முள்ளு சீத்தா மரம் அமேசான் காடுகளில் வளர்ந்தபோது இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் அங்குள்ள பழங்குடி மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளாகப் பயன்படுத்திக் குணம் கண்டுள்ளனர். முக்கியமாக இதன் இலை, பழம் ஆகியவற்றைப் பக்குவப்படுத்தி உணவாக சாப்பிடும் வகையில் தயார் செய்து பயன்படுத்தியுள்ளார்கள்.

நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்...  நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரப்பிச் சிகிச்சையில் முடி கொட்டி, உடல் மெலிந்து எடை குறைகிறது. ஆனால் இந்த முள் சீத்தாப் பழத்தில் புற்றுநோய் செல்களைக் கொல்வதில் 10,000 மடங்கு அதிகச் சக்தி உள்ளது. இதனால் முடி உதிர்வதில்லை, எடையும் குறைவதில்லை. இதில் உள்ள ‘அஸிட்டோஜெனின்ஸ்’ எனும் மூலப்பொருள்தான் புற்றுநோயைக் குணப்படுத்த முக்கியக் காரணம். இலை, தண்டு, வேர், பட்டை, பழம் அனைத்திலும் மூலப்பொருள் வியாபித்துள்ளது. மேலும் முள் சீத்தா 12 வகையான புற்றுநோய்களைக் குணப்படுத்தவல்லது என்று கண்டுபிடித்துள்ளனர்.

நடவு செய்த 3-4 ஆண்டுகளில் மகசூல் கொடுக்கும். இதன் பழத்தைத்தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. இலையிலும் மருத்துவத்தன்மை உள்ளது. இதை டீ தூளில் தினமும் கலந்து குடித்தால், புற்றுநோய் எட்டிக்கூட பார்க்காது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மக்கள், முள் சீத்தா மரத்தை வளர்த்தும் அதை உண்டும் வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள பெரிய பழக் கடைகளில் முள் சீத்தாப் பழங்கள் விற்பனைக்கும் கிடைக்கின்றன.”

‘‘நம் முன்னோர்கள் நிலத்தடி நீர் ஊற்றைக் கண்டுபிடிக்க, பல நுட்பங்களைப் பயன்பத்தியதாக வாட்ஸ் அப்பில் படித்தேன். அது உண்மையா?’’


எம்.சசிகலா, திண்டுக்கல்.

நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்...  நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சி செய்து வரும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரை.வேலுசாமி பதில் சொல்கிறார்.

‘‘சித்தர்களை, ‘மந்திரம், மருத்துவம் கற்றவர்கள்’ என்றே பெரும்பாலும் அறிந்து வந்துள்ளோம். ஆனால், சித்தர்கள்தான், தமிழ் மண்ணின் முதல் விஞ்ஞானிகள். விவசாயம் உட்பட, அவர்கள் தொடாத துறைகளே இல்லை. ‘நீர் வளம் இருந்தால் மட்டுமே, விவசாயம் செழிக்க முடியும். மழைநீரைச் சேமித்து, ஏரி குளங்கள் மூலம் பாசனம் செய்தாலும், மழை பொய்க்கும்போது, சேமித்து வைத்த பணத்தை எடுத்துச் செலவு செய்வது போல, நிலத்தடி நீரை கவனமாகச் செலவழிக்க வேண்டும்’ என்கிறார்கள், சித்தர் பெருமக்கள்.

நீரூற்றுக் கண்டுபிடிக்கும் முறைகளைப் பண்டிதர்கள் முதல் பாமர மக்கள் வரை யாவரும், எளிதாக உணர்ந்து செயல்படும் வகையில் தெளிவாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். ‘புற்று கண்ட இடத்தில் கிணறு வெட்டு’ என்பது பரவலாக அறிந்த செய்தி. ஒரு மரத்தின் கிளைகள் அனைத்தும், மேலே நோக்கிச் செல்ல, ஒரே ஒரு கிளை மட்டும் கீழ் நோக்கி இருந்தால், ‘நிச்சயம் அந்த இடத்தில் நீரூற்று இருக்கும்’ என்கிறார்கள். அவர்கள் அருளிய சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

கிணறு வெட்டுவதற்காகத் தேர்வு செய்த இடத்தில், மலரும் நிலையில் உள்ள மல்லிகை மொட்டுகளை ஒரு கிலோ அளவுக்கு மாலை நேரத்தில் தரையில் குவியலாகக் கொட்டி, கூடையைப் போட்டு மூடவேண்டும். மறுநாள் காலையில் அந்த மல்லிகை மொட்டுகள் நன்றாக மலர்ந்திருந்தால், ‘அந்த இடத்தில் நீரூற்று உள்ளது. வாடிவிட்டால், நீரூற்று இல்லை’ என்று அர்த்தம்.

இதேபோல, ஒரு கைப்பிடி ஆமணக்கு விதையை நிலத்தில் குவியலாகக் கொட்டி, மூடி வைத்து... காலையில் கூடையைத் திறந்து பார்க்கும்போது, விதைகள் சிதறி இருந்தால், ‘அந்த இடத்தில் நீரூற்று உள்ளது’ என்றும், குவியல் கலையாமல் இருந்தால், ‘நீரூற்றுக் கிடையாது’ என்றும் சித்தர்களின் ஜால வித்தைச் சூத்திரங்கள் சொல்கின்றன. சித்தர்கள் சொல்லி வைத்த இந்த நுட்பங்களை, பரிசோதனை செய்து பார்த்தபோது, நல்ல பலன்கள் கிடைத்துள்ளன.’’

தொடர்புக்கு, செல்போன்: 98655 24179.

‘‘பயிர்களுக்குத் தேவையான பேரூட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை எப்படிக் கொடுப்பது?’’

ஜெ.ரங்கராஜன், சமயநல்லூர்.

நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்...  நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ‘ஜீரோபட்ஜெட்’ பிதாமகர் சுபாஷ் பாலேக்கர், பதில் சொல்கிறார்.
 
‘‘ஜீரோபட்ஜெட் முறையில் சாகுபடி செய்யும்போது, பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் எனத் தனியாக எதையும் கொடுக்க வேண்டாம். மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றல் நாட்டுமாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு. இந்தச் சாணத்தை மண்ணின் மீது வைத்துவிட்டாலே போதும். காதலியைப் பிரிந்த காதலன் தேடிவருவது போல, நாட்டு மண்புழுக்கள் மேலே வந்துவிடும். நம் பயிருக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளைச் சாப்பிடும். நிலத்தில் கீழே, மேலே என்று மாற்றி மாற்றிச் சென்றுகொண்டே இருக்கும். பொழிகின்ற மழை நீர், இதன் காரணமாக உங்கள் நிலத்தில் இறங்கி நீர்மட்டம் உயரும். பயிருக்கு வேண்டிய சத்தான உரத்தை ஒரு பக்கம் கொடுப்பது மட்டுமில்லாமல், நீர்ச்சேமிப்புக்கும் அவை உதவுகின்றன.

நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்...  நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

மண்புழுக்களின் உடல்மீது நீர் பட்டால் அதுவும் உரமாக மாறிவிடும். இதை ‘வெர்மி வாஷ்’ என்று சொல்கிறார்கள். பயிர்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் திறனும், அதிகமாகக் காய் பிடிக்க வைக்கும் தன்மையும் இந்த ‘வெர்மி வாஷு’க்கு உண்டு.

மண்ணில் இயற்கையாகவே உள்ள சத்துக்களை மண்புழுக்கள் மேலே கொண்டு வந்து சேர்க்கின்றன. சுமார் 15 அடி ஆழம் வரை அவை சர்வசாதாரணமாகச் சென்று வருகின்றன. 7 அடி ஆழத்தில் தழைச்சத்து உள்ளது. 9 அடியில் பாஸ்பரஸ் இருக்கிறது. 11 அடியில் சாம்பல் சத்து கிடைக்கிறது. மேலும் 6 அடியில் கால்சியம், 8 அடியில் இரும்பு, 10 அடியில் கந்தகம் எனச் சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை மேலே கொண்டு வந்து சேர்க்கின்ற உன்னதப் பணியினை இந்த மண்புழுக்கள் செய்கின்றன என்றால் அதைவிட நமக்கு வேறு யார் நண்பனாக இருக்கமுடியும்?

ஒரு சதுர அடி நிலத்தில் நான்கு மண்புழுக்கள் இருந்தால், ஒரு ஏக்கரில் 2 லட்சம் எண்ணிக்கையில் மண்புழுக்கள் இருக்கும். இந்தளவு இருந்தாலேபோதும், உங்கள் மண் மறுபடியும் வளமுள்ளதாக மாறிவிடும். ஏக்கருக்கு 200 டன் கரும்பு, 120 குவிண்டால் நெல், 120 குவிண்டால் கோதுமை, 120 குவிண்டால் கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானியங்கள், 40 முதல் 80 டன் வரை காய்கறி, பழங்கள் என்று எல்லாமும் விளைந்து கொழிக்கும்.

நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்...  நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

மண்புழுக்களை அதிகமாகப் பெருக்க வேண்டும் என்றால் நாட்டுப் பசுமாடு அவசியம். ஏறத்தாழ நாட்டு மண்புழுவும், நாட்டுப் பசுமாடும் நகமும் சதையும் போல, நாட்டுமாட்டுச் சாணத்தில் மட்டுமே மண்புழுக்கள் அதிக அளவில் பெருகும் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன். இதனால்தான், ஜீரோபட்ஜெட்டில், ஜீவாமிர்தம் உள்ளிட்டவை தயார் செய்ய, நாட்டு மாட்டின் பொருட்களைப் பயன்படுத்தச் சொல்கிறேன்.’’

நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்...  நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.