மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!

மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

மிழ்நாட்டைப் பூர்வீகமா கொண்ட அந்த நண்பர், வட இந்தியாவுல மருத்துவ விஞ்ஞானியா இருக்காரு. கொய்யா சம்பந்தமான தகவலை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியிருந்தாரு. அதைப் படிக்கப் படிக்க ஆச்சர்யமாவும் அருமையாவும் இருந்துச்சு. இதோ அந்தத் தகவல்...

‘‘விலை குறைவாகவும், தெருவிலுள்ள கடைகளில் கிடைப்பதால் கொய்யாப்பழத்தைக் கேவலமாகவும் நினைக்கிறோம். ஆனால், ‘இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூட்ரிஷன்’ என்கிற அமைப்பு அதிகச் சத்துகள் கொண்ட பழங்கள் பட்டியலில் கொய்யாவுக்குத்தான் முதலிடம் கொடுத்துள்ளது. கொய்யாப் பழத்தில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது, ஒரேயொரு கொய்யாப்பழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கொய்யாப்பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும். இதில் முக்கிய உயிர்ச்சத்துகளும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன.

மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!

கொய்யா மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, அதன் இலை, பட்டை என அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவையாகும். கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘பி’ மற்றும் ‘சி’ ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன. கொய்யாப்பழத்தில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தைச் சாப்பிடலாம்.

கொய்யாப்பழத்தை நறுக்கிச் சாப்பிடுவதைவிட, அப்படியே கடித்துச் சாப்பிட்டால், பற்களும் ஈறுகளும் வலுவடையும். ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, சிறிது நேரம் கழித்து அந்தத் தண்ணீரில் வாயைக் கொப்பளித்தால், வலி மற்றும் ஈறு வீக்கம் குறையும். மழைக்காலத்தில் பெரும்பாலானோருக்கு இருமல் மற்றும் தொண்டைப்புண் வரக்கூடும். இப்படி பாதிக்கப்படுபவர்கள் கொய்யா இலைகளைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, வாயைக் கொப்பளித்தால் விரைவில் குணமாகும்.

மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!

ரத்தச்சோகை இருப்பவர்களும் கொய்யாப்பழத்தைத் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். மது போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்திலிருந்து விடுபட கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் மதுவின் மீதுள்ள மோகம் குறையும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொய்யாப்பழத்தில் லைகோபைன், கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன. இவை புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கும் குணம் கொண்டவை.

உடலில் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ள பொட்டாசியம் அவசியமானது. கொய்யாப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. எனவே, இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராகும். இந்தப் பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால், கண்களில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கும். கொய்யாப்பழத்தின் தோலில்தான் அதிகச் சத்துகள் உள்ளன. எனவே, இதன் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் நீக்காமல் சாப்பிட்டால், முகத்துக்குப் பொலிவும், அழகும் தருவதோடு, தோல் வறட்சியை நீக்கும். சரி... இவ்வளவு நல்ல விஷயம் உள்ள பழத்தை இஷ்டத்துக்கும் சாப்பிடக்கூடாது. ஒரு நாளைக்கு 2 கொய்யாப்பழங்கள் சாப்பிடுவதுதான் நல்லது. இந்தளவுக்கு மேலே சென்றால், பித்தம் அதிகரித்து வாந்தி, மயக்கம் ஏற்படக்கூடும்.

மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!

கொய்யா, இந்தியா முழுக்கச் சாகுபடி செய்யும் முக்கியப் பயிர். ஆனால், அதை நம் விவசாயிகள் குறிப்பாக டெல்டா பகுதியிலுள்ள விவசாயிகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.வங்க தேசத்தின்(பங்களாதேஷ்) தெற்குப் பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் ஆறு, கால்வாய்கள் உள்ள பகுதியில்தான், கொய்யாவை அதிகம் சாகுபடி செய்கிறார்கள். உயரமான வரப்புகளில் கொய்யாவைப் பயிரிட்டுள்ளார்கள். கீழே தண்ணீர் நிற்கிறது. ஆக, வயலில் தண்ணீர் நின்றாலும் சரியாகச் சாகுபடி செய்தால் கொய்யாவில் நல்ல விளைச்சல் எடுக்க முடியும்.

வங்கதேசத்தின் ஜாலோகாட்டி (Jhalokati) மாவட்டத்தில் கிர்டிபஷா கால்வாய் (Kirtipasha Canal) பகுதியில் மிதக்கும் கொய்யாச் சந்தை உள்ளது. அதாவது, கொய்யாப் பழத்தைச் சிறிய படகுகளில் வைத்து விற்பனை செய்கிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் படகுகளில் சென்றுதான் கொய்யாவை அறுவடை செய்கிறார்கள். நிலம் முழுக்க நீர் இருந்தாலும், கொய்யாப் பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. மேலும், வறட்சியினையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது கொய்யா.  தமிழ்நாட்டிலுள்ள காவிரி டெல்டாவிலும்கூட பரிசோதனை முயற்சியாக, இப்படி கொய்யா பயிரிட்டுப் பார்க்கலாம்தானே?’’னு வேண்டுகோளும் விடுத்திருந்தார்.