மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன?”

நீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன?”
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன?”

புறா பாண்டி

‘‘வாட்ஸ்அப்பில் நாக்பூர் பகுதியில் கோ-விஞ்ஞான் கேந்திரா என்ற அமைப்பில் இயற்கை விபூதி தயாரிக்கப்படுவதாகப் படித்தோம். விபூதி, பல்பொடி போன்றவை தயாரிக்க இங்கு பயிற்சி கொடுக்கிறார்களா?’’

கே.லலிதா, மதுராந்தகம்.   

நீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன?”


மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள கோ-விஞ்ஞான் கேந்திராவைச் சேர்ந்த சுனில் மான்சின்ஹா பதில் சொல்கிறார்.    

‘‘நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவலபூர் கிராமத்தில்தான் கோ-விஞ்ஞான் கேந்திராவின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் உள்ளது.

22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் சுமார் 400 மாடுகள் உள்ளன. சாகிவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படும் நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன.

பால் கொடுக்கும் மாடுகள் மட்டுமல்ல, பால் வற்றிய மற்றும் பயன்படாது என்று கைவிடப்பட்ட மாடுகளின் பொருள்கள் மூலமாக விபூதி, பற்பொடி, அர்க் போன்றவற்றைத் தயாரித்து வருகிறோம். இதில் இயற்கை விபூதி தயாரிக்க நாட்டுப்பசு மாட்டின் சாணம்தான் பயன்படுத்தப்படுகிறது. 20 கிலோ சாணத்தைக் கல், மண் இல்லாமல் சுத்தப்படுத்தி, சின்னச் சின்ன வடைபோலத் தட்டி, ஒரு வாரம் வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்த வறட்டியைத் துணியில் மூட்டையாகக் கட்டி, பூச்சிகள் தாக்காத அளவுக்கு உயரமான இடத்தில் கட்டித் தொங்கவிட வேண்டும்.

நீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன?”மூன்று மாதங்களுக்குப் பிறகு, 10 அடிக்கு 10 அடி அளவில் செங்கற்களைப் பரப்பி, அதன்மீது நெல் கருக்காவைப் (பதர்) பரப்ப வேண்டும். பிறகு, காயவைத்த சாணத்தைத் தண்ணீரில் நனைத்து, செங்கற்கள் மீது பரப்பி, மீண்டும் கருக்காவைப் பரப்ப வேண்டும். இப்படிக் கருக்கா, வறட்டி என்று மாற்றி மாற்றி பரப்பிக் கோபுரம்போலப் பத்து அடுக்குகளாக உருவாக்க வேண்டும். அதன் உச்சியில் திருநீற்றுப் பச்சிலைச் செடியை வைத்துச் சிறிய சூடத்தை எரித்து, மூட்டம் போட வேண்டும். தீ எரியாமல் புகையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மூன்று நாள்கள் வரை இப்படிப் புகைந்து கொண்டிருக்கும். நன்கு வெந்த நிலையில் கெட்டியான விபூதி கிடைக்கும்.

நீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன?”

இதை நன்கு இடித்துத் தூளாக்கி, இரவு நேரத்தில் மூன்று நாள்கள் பரப்பி வைத்து, நன்கு சலித்துப் பயன்படுத்தலாம். 20 கிலோ சாணத்திலிருந்து 2 கிலோ விபூதி கிடைக்கும். ஒரு கிலோ விபூதி குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

பசுவின் சிறுநீர், சாணம், பால், நெய் போன்றவற்றைப் பயன்படுத்திச் சோப்பு, பல்பொடி, திருநீறு, வாசனை பவுடர் எனப் பலவிதமான பொருள்களைத் தயாரிக்க முடியும். இவற்றுக்கான தேவையும் அதிகமாக உள்ளது. பசுவின் சிறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் ‘அர்க்’ என்ற பொருள் உலகளவில் பிரசித்தி பெற்றது. இதைத் தினமும் குடித்துவந்தால் கொடிய நோய்களும் குணமாகும்.

பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி போன்ற விவசாயத்துக்குத் தேவையான பொருள்களையும் தயாரிக்கலாம். எங்கள் ஆய்வில் ஒரு பசுவின் மூலம் மாதந்தோறும் ஆயிரம்  ரூபாய்க்குமேல் வருமானம் பெறமுடியும் என்பதைக் கண்டறிந்துள்ளோம்.     

நீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன?”

பசுவின் பொருள்கள் தயாரிக்க இந்த மையத்தில் சூழ்நிலைக்குத் தக்கபடி கட்டணம் மற்றும் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகின்றன. தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. எங்கள் மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் தமிழ்நாட்டிலும் உள்ளனர். இவர்களிடமும் பசுப்பொருள்கள் தயாரிப்புக் குறித்த பயிற்சியைப் பெறலாம்.”

தொடர்புக்கு: அலுவலக முகவரி

Go-Vigyan Anusandhan Kendra, Kamadhenu Bhavan, Pt. Baccharaj Vyas Square, Chitar Oli, Mahal, Nagpur-440 002, Maharastra. தொலைபேசி: 0712 2772273, 2734182.

‘‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் ஆராய்ச்சி மையங்களின் முகவரியைச் சொல்லவும்?’’

எஸ்.சிதம்பரம், வந்தவாசி.

‘‘கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் பல மாவட்டங்களில் உள்ளன. இங்கு விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நெல், பயறு வகைகளில் உளுந்து, பாசிப்பயறு மற்றும் தீவன விதைகள் ஆராய்ச்சி நிலையங்களில் இருப்புக்குத் தக்கபடி விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இம்மையங்களில் முன்பதிவு செய்தும் விதைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த விதைகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டுவரும் ஆராய்ச்சி நிலையங்களில் கண்டறிந்த ரகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.’’

விதைகள் கிடைக்கும் இடங்கள்

1. நெல்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
பவானிசாகர்-638451, ஈரோடு மாவட்டம்.
தொலைபேசி: 04295 240244.

2. பயறு வகைகள்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மண்டல ஆராய்ச்சி நிலையம்
அருப்புக்கோட்டை-626107.
தொலைபேசி: 04566 220562.

3. பாசிப்பயறு
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிலையம், கிள்ளிக்குளம்-628252.
தூத்துக்குடி மாவட்டம்.
தொலைபேசி: 04630 261226.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
திண்டிவனம்-604002.
தொலைபேசி: 04147 250001.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
வைகை அணை-625512.
தொலைபேசி: 04546 292615.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
மண்டல ஆராய்ச்சி நிலையம்,
பையூர்-635112.
தொலைபேசி: 04343 290600.

4. தீவனப் பயிர்கள்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
தீவனப்பயிர்கள் துறை, தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-641003.
தொலைபேசி: 0422 6611228.

5. காய்கறி விதைகள்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
காய்கறி ஆராய்ச்சி நிலையம்,
பாலூர், கடலூர் மாவட்டம்.
தொலைபேசி: 0414 2212538.

நீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன?”

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.