மகசூல்
நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

இயற்கை சான்றிதழ் பயிற்சி

கரூர் மாவட்டம், கடவூர் தாலூகா, சேவாப்பூர், இன்பசேவா சங்கம் நடத்தும் ‘இயற்கை உயிராற்றல் வேளாண்மைச் சான்றிதழ் பயிற்சி’ அக்டோபர் 2-ம் தேதி முதல் துவங்க உள்ளது. இப்பயிற்சியில் இடுபொருள் தயாரிப்பு, கால்நடைப் பராமரிப்பு, நீர் மேலாண்மை, விதை உற்பத்தி உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படும். 25 வயதிற்குட்பட்ட 12-ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கட்டணம் இலவசம்.

தொடர்புக்கு, செல்போன்: 96597 17708.

கால்நடை மூலிகை வைத்தியம்


மதுரை, தமுக்கம் மைதானத்தில் சேவா மற்றும் தானம் அறக்கட்டளை இணைந்து செப்டம்பர் 23-ம் தேதி ‘கால்நடை மூலிகை வைத்தியம் மற்றும் பாரம்பர்ய கால்நடை இனங்களைப் பாதுகாத்தல்’, 23-ம் தேதி ‘இயற்கை வேளாண்மை மற்றும் விவசாயிகளின் கண்டுபிடிப்புகள்’ ஆகிய பயிற்சிகளை நடத்த உள்ளன.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2380082, செல்போன்: 95979 60409

நாட்டுக்கோழி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 26-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது.

தொடர்புக்கு, தொலைபேசி: 04563 220244.

நாட்டுமாடு வளர்ப்பு


சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 13-ம் தேதி ‘நாட்டுமாடு வளர்ப்பு’, 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408. 

கூட்டுமீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 14, 15-ம் தேதிகளில் ‘நிலக்கடலையில் பூச்சி மேலாண்மை’, 20, 21-ம் தேதிகளில் ‘ஊறுகாய் தயாரித்தல்’, 20, 21-ம் தேதிகளில் ‘கூட்டு மீன் வளர்ப்பு’, 26, 27-ம் தேதிகளில் ‘தென்னைச் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

கொடுவா மீன் உற்பத்தி

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 18-ம் தேதி ‘கொடுவா மீன் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கம்’, 19-ம் தேதி ‘விதை உரக்கட்டுப்பாடு தொழில்நுட்பம் மூலம் எளிய பயிர்கள் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
 
தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345. 

மாடித்தோட்டம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் செப்டம்பர் 14-ம் தேதி ‘இயற்கை விவசாயம்’, 19-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 20, 21-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த முறையில் கால்நடைப் பண்ணைகள் அமைத்தல்’, 26-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 99448 09246.

தீவனம் தயாரிப்பு!

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 19-ம் தேதி ‘கறவை மாடுகளில் இனவிருத்தித் திறனை அதிகரிக்கும் அடர் தீவனத் தயாரிப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,  தொலைபேசி: 04142 290249.

கட்டணப் பயிற்சிகள்

மாடித்தோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் செப்டம்பர் 23-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

நாட்டுக்கோழி வளர்ப்பு

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள கிரீட் வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 16-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி கட்டணம் ரூ 100.

தொடர்புக்கு, செல்போன்: 96559 26547.

தேனீ வளர்ப்பு


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் செப்டம்பர் 21-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’, 22-ம் தேதி ‘தீவன உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’, 26-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 27-ம் தேதி ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ 100.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

இயற்கை வேளாண் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், ஒடுகம்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிப் பண்ணையில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வாரம் மூன்று நாள்கள் இயற்கை வேளாண்மைப் பயிற்சி நடைபெற உள்ளது.

செப்டம்பர் 22, 23, 24-ம் தேதிகளில் ‘உயிர்ச்சூழல் வேளாண்மைப் பயிற்சி’ நடைபெற உள்ளது. இயற்கை வேளாண்மை முறையில் விதை முதல் அறுவடை வரை பயிற்சி தரப்படும். முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. பயிற்சிக் கட்டணம் ரூ 450. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: 98424 33187,  0431 331879

அறிவிப்பு

‘த
ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.