மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்?’’

நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய  இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்?’’
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்?’’

புறாபாண்டி

‘‘சிறுதானியங்களைப் பயன்படுத்தி பிஸ்கட், ரொட்டி போன்ற மதிப்புக்கூட்டிய பொருள்களைத் தயாரிக்க விரும்புகிறோம். சிறு தானியத்தை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் குறித்த விவரம் எங்கு கிடைக்கும்?’’

கே.பார்வதி, திருவள்ளூர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறு தானிய மகத்துவ மைய விஞ்ஞானி முனைவர்

நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய  இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்?’’

மோ.சண்முகப்பிரியா பதில் சொல்கிறார்.

‘‘கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படும் தீவிரச் சிறுதானியச் சாகுபடி திட்டம் மற்றும் ஊட்டச்சத்தினை உறுதிப்படுத்தும் திட்டம்மூலம் மதிப்புக்கூட்டலுக்கான இயந்திரத் தொகுப்புகளை உழவர்களின் செயல் விளக்கத்திற்காகத் திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில் உள்ள சிறுதானிய மகத்துவ மையத்திற்கு வழங்கியுள்ளது. இந்தத் தொகுப்பில் சிறுதானியக் கல் மற்றும் தூசி நீக்கும் இயந்திரம்,  தானியம் வறுக்கும் இயந்திரம், உமி நீக்கும் இயந்திரம், சிறுதானிய மாவு அரைக்கும் இயந்திரம், மாவு சலிக்கும் இயந்திரம் மற்றும் மாவு கலக்கும் இயந்திரம் போன்றவை உள்ளன.

சிறுதானியக் கல் மற்றும் தூசி நீக்கும் இயந்திரம்

அறுவடை செய்த சிறுதானியங்களை இவ்வியந்திரத்தில் கொட்டினால் அதில் உள்ள சிறு சிறு கற்கள், மண் மற்றும் தூசிகளை இவ்வியந்திரம் அகற்றுகிறது. ஒரு மணி நேரத்துக்கு 500 கிலோ வரை சுத்தம் செய்யும் திறன் கொண்டது.

சிறுதானியம் வறுக்கும் இயந்திரம்

சிறுதானியங்களை வறுக்கும் இயந்திரம் கொண்டு உலர்ந்த தானியத்தை, ஒரே நேரத்தில் 15 கிலோ வறுக்கலாம். இப்படி வறுத்த தானியங்களை அரிசியாக்கும்போது அவை மணமாக இருக்கும்.

உமி நீக்கும் இயந்திரம்

சிறுதானிய உமி நீக்கும் இயந்திரத்தின் மூலம், ஒரு மணிநேரத்தில் 100 கிலோ சிறுதானியத்தை உமி நீக்கலாம். ஒரே நேரத்தில் 15 கிலோ வரை இவ்வியந்திரத்தைக்கொண்டு உமியை நீக்க முடியும்.

மாவு அரைக்கும் இயந்திரம்

சிறுதானிய அரிசியிலிருந்து சத்து மாவு, தோசை மாவு, அடை மிக்ஸ் போன்றவைகளைத் தயாரிக்கச் சிறுதானிய அரிசியை அரைக்க வேண்டும். இவ்வியந்திரம் ஒரு மணி நேரத்தில் 30 கிலோ சிறுதானிய அரிசியை மாவாக்கும் திறன் கொண்டது.

நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய  இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்?’’

மாவு கலக்கும் இயந்திரம்

ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுதானிய மாவு வகைகளைக் கலந்து ஊட்டச்சத்து மாவு, பிஸ்கட் போன்றவற்றைத் தயாரிக்கலாம். இவ்வியந்திரத்தின் மூலம் ஒரே நேரத்தில் 10 கிலோ சிறுதானிய மாவு வகைகளைக் கலக்கலாம்.

மாவு சலிக்கும் இயந்திரம்

இந்த இயந்திரத்தின்மூலம் அரைத்த சிறுதானிய மாவைச் சலித்துக் கொள்ளலாம். உதாரணமாகச் சிறுதானிய பிஸ்கட், ரவை, புட்டு போன்ற பதார்த்தங்களுக்கு ஏற்றவாறு இயந்திரச் சல்லடையை மாற்றி, அரைத்த சிறுதானிய மாவைச் சலித்துக்கொள்ளலாம். மாவு சலிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 400 கிலோ மாவைச் சலிக்க முடியும்.

சிறுதானிய மதிப்புக்கூட்டலுக்கான இயந்திரங்களின் செயல்விளக்கத்தைச் சிறுதானிய மகத்துவ மையத்தில் நேரில் பார்த்து அறிந்துகொள்ளலாம். இந்தச் சிறுதானிய மதிப்புக்கூட்டல் இயந்திரங்களை எங்கே வாங்கலாம் என்ற வழிகாட்டலும் மையத்தில் கிடைக்கும்.’’

தொடர்புக்கு: சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை.

தொலைபேசி: 0417 5298001.

‘‘பால்வளம் மிக்க சாஹிவால், கிர் போன்ற நாட்டு மாடுகளின் விந்தணுக் குச்சிகள் எங்கு கிடைக்கும்?’’

எம்.பழனிச்சாமி, ஓமலூர்


இந்தத் துறையில் அனுபவம் பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்அருள்சந்திரன் பதில் சொல்கிறார்.

‘‘பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டு மாடுகளின் விந்தணுக் குச்சிகள் கிடைப்பது அரிதாக இருந்தது. பல மாதங்கள் காத்திருக்கும் நிலைகூட இருந்தது. ஆனால், தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நாட்டு மாடுகளின் விந்தணுக் குச்சிகள் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகினால், உரிய ஏற்பாடுகள் செய்வார். சாஹிவால், கிர், தார்பார்க்கர்... போன்ற நம் நாட்டு இன மாடுகள் தமிழ்நாட்டின் காலநிலையில் நன்றாக வளரும் தன்மை கொண்டவை. இந்த இன மாடுகள் ஒருநாளைக்கு அதிகபட்சம் 15 லிட்டர் வரை பால் கொடுக்கும். இவற்றுக்கு நோய் தொற்றும் ஏற்படாது. இந்த இனங்களின் உயிர் அணுக்களை, தமிழகத்தைச் சேர்ந்த நாட்டு மாடுகளான காங்கேயம், உம்பளச்சேரி போன்ற பசுக்களில் கருவூட்டல் செய்யலாம். இதன்மூலம் பிறக்கும் கன்றுகளுக்கும் கூடுதல் பால் கொடுக்கும் திறன் இருக்கும். அதிகப் பால் கொடுக்கும் வெளிநாட்டு இனங்களுடனும் கருவூட்டல் செய்து நோய் தாக்காத வலுவான கன்றுகளை உருவாக்க முடியும்.

நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய  இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்?’’
நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய  இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்?’’

கேரளாவில் ‘கேரளா கால்நடை வளர்ச்சி முகமை’ என்ற அரசு அமைப்பு சாஹிவால், கிர் போன்ற மாடுகளின் விந்தணுக்களைக் குச்சி (ஸ்ட்ரா) வடிவில் குறைந்த விலைக்குக் கொடுத்துவருகிறது. அரசு மற்றும் தனியார் அமைப்புகளிலும் நாட்டு மாடுகளின் விந்தணுக் குச்சிகள் கிடைக்கின்றன.’’

தொடர்புக்கு: செல்போன்: 94433 66336.

‘‘காயர் போர்டு முகவரி வேண்டும்?’’

ஆர்.குணசேகரன், பேராவூரணி.


“கேரள மாநிலம், கொச்சியில் ‘காயர் போர்டு’ என்று அழைப்படும், ‘கயிறு வாரியம்’ உள்ளது. தென்னை நார்மூலம் கயிறு, படுக்கை, கால்மிதி, மெத்தை, அழகுசாதனப் பொருள்கள்... போன்றவற்றை உற்பத்தி செய்ய இந்த வாரியம் உதவிவருகிறது.’’

தொடர்புக்கு: COIR BOARD
‘Coir House’ M.G. Road, Ernakulam,
Kochi - 682 016. Kerala, 
Phone: 0484 2351807, 2351788, 2351954.

நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய  இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்?’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.