மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’

மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’

மாத்தியோசிஓவியம்: ஹரன்

யிலில் பகல் நேரப்பயணம், பல அனுபவங்களைக் கொடுக்கும். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து, புதுடெல்லிக்கு 10 மணி நேர ரயில் பயணம் அமைஞ்சது. கலர் கலராக டர்பன் கட்டிய சர்தாஜிகளும், காலை 7 மணிக்கே சூடாகச் சப்பாத்தி வித்தபடி செல்லும் வியாபாரிகளுமாகப் பயணம் ஜோரா ஆரம்பிச்சது. என்னோட நல்ல காலம், ஒரு விவசாயக் குழு  பக்கத்து இருக்கையில உட்கார்ந்திருந்தாங்க. அமிர்தசரஸ்ல நடந்த விவசாய நிகழ்ச்சியில கலந்துகிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பிக்கிட்டிருந்தாங்க. அந்தக் குழுவுல ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார்னு பல மாநில விவசாயிங்க இருந்தாங்க.

உத்தரப் பிரதேச விவசாயி ஒரு விஷயத்தைச் சொல்லிப் பேச்சுக் கச்சேரியை ஆரம்பிச்சாரு....

‘‘எங்க உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல மாம்பழ ஆராய்ச்சியாளரான ஹாஜி கலீமுல்லா, விதவிதமான புதிய மாம்பழ ரகங்களை உருவாக்கியதற்காக ‘பத்மஸ்ரீ’ விருது வாங்கினார். ஒரே மரத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்களை ஒட்டுக்கட்டி அசத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களைக் கௌரவிக்கும் விதத்தில் அவர்களின் பெயர்களை, தான் உருவாக்கிய மாம்பழ ரகங்களுக்குச் சூட்டியுள்ளார். சமீபத்தில்கூடத் தான் கண்டுபிடித்துள்ள மாம்பழ ரகத்துக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயரை வைத்துள்ளார். இவரைப் போலவே, ராஜஸ்தான் மாநிலத்திலும் ஒரு சாதனை விவசாயி உள்ளார்.

மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டம், கிர்தார்புரா கிராமத்து விவசாயி கிஷன் சுமன், ‘மா’வில் புதிய ரகம் கண்டுபிடித்துள்ளார். இரண்டாம் வகுப்பு வரையிலுமே படித்துள்ள கிஷன் சுமன், விவசாயத்தின் மீதான காதலும் புதிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற தூண்டுதலும், இவரைச் சாதனையாளராக உருவாக்கியுள்ளது.

தன்னோட தோட்டத்தில் உள்ள ஒரு மா மரம் ஜனவரி - பிப்ரவரி, ஜூன் - ஜூலை மற்றும் செப்டம்பர் - அக்டோபர் வரையிலான மூன்று பருவ காலத்தில் பூ பூப்பதைக் கவனித்து, அந்த மரத்திலிருந்து 5 ஒட்டுக்கன்றுகளை உருவாக்கியுள்ளார். இந்த ஒட்டுக்கன்றுகளும் மூன்று பருவத்தில் காய்த்துக் குலுங்குகின்றன. வேளாண் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிலையங்களின் விஞ்ஞானிகள் போட்டி போட்டுக் கொண்டு, கிஷன் சுமன் தோட்டத்துக்குப் படையெடுத்துக்கொண்டுள்ளார்கள். அதைப் பார்க்கும்போது, ஒரு பக்கம் சந்தோஷமாகவும் மறுபக்கம் பயமாகவும் இருந்தது. இந்த விஞ்ஞானிகள் உதவிசெய்கிறேன் என்கிற பெயரில், அந்த எளிய விவசாயி கண்டுபிடிப்பைத் தனது அரிய கண்டுபிடிப்பு என எழுதி ‘டாக்டர்’ பட்டம் வாங்காமல் இருந்தால் சரிதான்...’’ என்று சொல்லி முடிக்கும்போது, குபீர் சிரிப்பலைகள் ரயில் பெட்டியில் எதிரொலிச்சுது.

சூடாக டீ குடித்தப்படியே ஹரியானா மாநில விவசாயி பேச ஆரம்பிச்சார். ‘‘ரஜினி காந்த்போல, வர முடியாது. தன்னை நம்பியவர்களை, ரஜினி காந்த் கைவிட்டது கிடையாது’’னு சொல்லிக்கிட்டிருந்தாரு. நம்ம ஊரு சூப்பர் ஸ்டார் புகழ் வட மாநிலம் வரையிலும் பரவியிருக்கேன்னு நினைச்சேன். ஆனா, அந்த விவசாயி சொன்னது, சினிமா நடிகர் ரஜினி காந்தைப் பத்திச் சொல்லலைன்னு, கொஞ்சம் நேரம் கழிச்சுத்தான் புரிஞ்சது. அந்த விவசாயி, ரஜினி காந்த்னு சொன்னது, சம்பங்கி மலரைத்தான். சம்பங்கியை, வட மாநிலங்கள்ல, ‘ரஜினி காந்த், ரஜினி காந்தா’’னு பல பேருல அழைக்கிறாங்க.

மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’

‘‘மெக்சிகன் சிங்கிள், சிருங்கார், பிரஜ்வல், பியர்ல் டபுள், சுவாசினி, வைபவ் ஆகிய ரகங்கள் இருந்தாலும், பிரஜ்வல் ரகம் அதிக மகசூல் தருகின்றது. பூங்கொத்தில் மொட்டுகள் அதிகமாகவும் பூக்கள் நீளமாகவும் காணப்படும். பிரஜ்வல் சம்பங்கி ரகத்தைக் கர்நாடக மாநிலம் காசர்கட்டாவிலிருக்கும் இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில்தான் உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். நாட்டு ரகத்தைக் காட்டிலும் பெரிய பூக்களாக இருப்பதால் மலர் கொத்துகளில் பயன்படுத்தவும், சென்ட் எடுக்கவும் இந்த ரகம்தான் சிறந்தது.

மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் சம்பங்கிச் சாகுபடி செய்யத் தொடங்கிய விவசாயிகள், நல்ல வசதியுடன் வாழ்கிறார்கள். இவ்வளவுக்கும் ஏக்கர் கணக்கில்கூட, சாகுபடி செய்வதில்லை. 30 சென்ட், 50 சென்ட் எனக் குறைந்த நிலப்பரப்பில், ரஜினி காந்த்தைச் சாகுபடி செய்து லாபம் எடுத்து வருகிறார்கள்’’னு அந்த விவசாயி, சொல்லி முடிக்கும்போது, பக்கத்தில் இருந்த விவசாயிகள் முகத்துல ஆச்சர்யமும் நாமும் அதைச் சாகுபடி செய்யணும்ங்கிற ஏக்கமும் தெரிஞ்சது.