மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள் இலவசம்!

நீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள்  இலவசம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள் இலவசம்!

புறாபாண்டி, ஓவியம்: ஹரன்

‘‘சைக்கிள் பெடல் மூலம் இயங்கும் சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம் உள்ளதை வாட்ஸ் அப்பில்

நீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள்  இலவசம்!

படித்தேன். இதன் விவரம் சொல்லுங்கள்?’’

கே.பார்வதி, திருவள்ளூர்.


கர்நாடக மாநிலம், மைசூருவில் செயல்பட்டு வரும் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலைய மூத்த முதன்மை விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் பதில் சொல்கிறார்.

‘‘வேளாண் விளை பொருள்களுக்கான அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்புக் கூட்டும் வழிமுறைகள், மதிப்புக் கூட்டும் கருவிகள், புதிய உணவுத் தானியப் பயிர்களை அறிமுகப் படுத்துதல், ஆலோசனைகள்... எனப் பல்வேறு வகையில் விவசாயிகளுக்கு உதவும் விதமாக இந்த நிலையம் இயங்கிவருகிறது.

நீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள்  இலவசம்!

இதோடு பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. எங்கள் நிலையத்தில் சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம் (Pedal Powered Millet Mill) உருவாக்கப்பட்டுள்ளது.  ஒருவர் சைக்கிள் மீது ஏறி பெடலைச் சுற்றினால் வரகு, சாமை... உள்ளிட்ட சிறுதானியங்களின் தோல் நீங்கி, அரிசி கிடைக்கும்.

தற்போது, இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் முடிவடைந்து, பயன்பாட்டுக்கு இயந்திரம் வந்துவிட்டது. எங்கள் மையத்துக்கு வரும் பார்வையாளர்கள், இந்தத் தோல் நீக்கும் இயந்திரத்தைப் பார்வையிடலாம். அரசு நிறுவனம் என்பதால், இதை நாங்கள் நேரடியாக விற்பனை செய்யமுடியாது. ஆனால், இந்த இயந்திரத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்பம், வரைபடம் உள்ளிட்ட தகவல்களை, எங்கள் இணையதளத்தில்

நீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள்  இலவசம்!

வெளியிட்டுள்ளோம். இதை இலவசமாகவே தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த இயந்திரத்தை உருவாக்க சுமார் 17 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதை உருவாக்கி விற்பனை செய்ய விரும்புபவர்கள் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்ய வாய்ப்புகள் உண்டு.

மேலும், எங்கள் நிலையத்தின் சார்பில், இனிப்பு நெல்லி (Amla Candy), உடனடி இட்லி மாவு, உடனடி தோசை மாவு, மஞ்சள் பாலிஷ், அப்பளம் தயாரிக்கும் இயந்திரம், சைக்கிள் பெடல் மூலம் இயங்கும் சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம் (Pedal Operated Millet Dehuller) போன்ற 15 தொழில்நுட்பங்களை இலவசமாக வெளியிட்டுள்ளோம்.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பெற விரும்புபவர்கள், www.cftri.com என்ற இணையதளத்துக்குள் சென்றால், முகப்பு பக்கத்தின் கீழ்  சயின்ஸ்&டெக் சர்வீஸ் என்ற பிரிவில்  ஃப்ரீ டெக்னாலஜிஸ் இருக்கும். இதை க்ளிக் செய்து வரும் பக்கத்தில் உங்கள் இ.மெயில் முகவரியைப் பதிவு செய்தால், 15 தொழில்நுட்பங்களின் விவரங்கள் உள்ள பக்கம் திறந்துகொள்ளும்.

நீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள்  இலவசம்!

இதில் தேவையான தொழில்நுட்பத் தகவல்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பலன் பெற விரும்புபவர்கள், இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய அளவில், இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன் படுத்துபவர்களில் கர்நாடக மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.’’

தொடர்புக்கு, CFTRI, Mysore-570020,
Telephone: 0821 2515910,
E-mail: sri@cftri.res.in, Website: www.cftri.com


‘‘பனை மரம் வளர்க்க விரும்புகிறேன். அதுகுறித்த தகவல்களைச் சொல்லவும். எங்காவது ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்துள்ளார்களா?’’

கே.ரகுராமன், கரந்தை.


கோயம்புத்தூரைச் சேர்ந்த பனை வளர்ப்பு ஆர்வலர் ரா.சு.கௌதம் பிரசாத் பதில் சொல்கிறார்.

‘‘தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்தவரை யாரும்  ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்யவில்லை. ஆனால், இலங்கையில் சாகுபடி செய்துள்ளார்கள். பனைமரத்திலிருந்து அருமருந்தும் ஆரோக்கிய குளிர்பானமுமான நுங்கு, தெளுவு (பதனீர்), கள் ஆகியவை கிடைக்கிறது. பதனீரைக் காய்ச்சிக் கருப்பட்டி (பனைவெல்லம்),  பனங்கற்கண்டு தயாரிக்கலாம். ஓலை, நார் என வேர் முதல் நுனி வரை பலன்களை அள்ளித் தரும் பனை, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்தது. தற்போது வெறும் 5 கோடி பனைமரங்கள்தான் உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன.

நீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள்  இலவசம்!

1970-களிலிருந்து 40 ஆண்டுகளில் எவ்வளவு பனை மரங்கள் குறைந்தனவோ, அவற்றில் பாதியளவு மரங்கள் கடந்த 4 ஆண்டுகளில் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பனையின் வேர்கள் பரவலாகச் செல்லாமல் கீழ்நோக்கி செல்லும் மண் அரிப்பு, சரிவு போன்றவற்றைத் தடுப்பதோடு மண்ணில் விழும் நீரை, நேரிடையாக நிலத்தடிக்குக் கொண்டு செல்லும் தன்மை கொண்டது. இதனால்தான் நம் முன்னோர்கள் ஆறு, ஏரி, குளம் போன்ற அனைத்து நீர்நிலைப் பகுதிகளிலும் அதனை வைத்தனர்.

நிலத்தின் எல்லைகளுக்கு உறுதியான வேலியாகவும் பனை பயன்படும். சாலை மற்றும் பாலங்கள் அருகே பனை இருந்தால் மண் அரிப்பை வெகுவாகத் தடுக்கும். யானைகள் போன்ற வனவிலங்குகள் வராமல் தடுக்க இயற்கை அரணாகப் பனை மரங்கள் இருக்கும். யானையால் பிடுங்கவோ உடைக்கவோ முடியாது. பனை உள்ள இடத்தில் இடி மின்னல் இறங்கினால், பனை தன் உயிரைத் தந்து தாங்கிக் கொள்ளும். சுனாமி தாக்கியபோதும் பனை கம்பீரமாக நின்று கடலோரத்தின் காவல் அரணாக நின்றது. இலங்கையில் இருப்பதுபோல இங்கும் கடுமையான சட்டங்கள் வகுத்துப் பனைமரங்களைக் காக்க வேண்டும். வெள்ளை சர்க்கரைக்குப் பதில் பனங்கற்கண்டு மற்றும் கருப்பட்டி பயன்படுத்த அரசு ஊக்கப்படுத்த வேண்டும். பனங்கற்கண்டு மற்றும் கருப்பட்டியில் பல விட்டமின், மினரல் சத்துகளும் உள்ளன. அவை இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும்.

நீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள்  இலவசம்!

ஒரு காலத்தில் பனை மரங்களை நம் முன்னோர்கள், தெய்வம்போல மதித்துப் போற்றினார்கள். இதனால், பனை மரங்கள் பல்கிப் பெருகின.

இப்போது, மீண்டும் பனை வளர்ப்புக் குறித்த விழிப்பு உணர்வு வளர்ந்து வருகிறது. நம் அண்டை நாடான இலங்கை, பனை வளர்ப்பிலும், பனைப்பொருள்கள் விற்பனையிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் பனை மரங்களுக்கும், பனைப்பொருள்களுக்கும் மவுசு கூடும் நல்ல நாள் உருவாகும் என நம்புகிறோம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 94435 41691.

15 இலவசத் தொழில்நுட்பங்கள்

(Free Technologies)

 சி.எஃப்.டி.ஆர்.ஐ (CSIR - CENTRAL FOOD TECHNOLOGICAL RESEARCH INSTITUTE)

1. நெல்லி கேண்டி (Amla Candy)

2. ராகி பிரட் (Composite Ragi Bread)

3. ஃப்ரூட் ஸ்பிரெட்ஸ் (Fruit Spreads)

4. ஜிஞ்சர் டி ஹைட்ரேஷன்   (Ginger Dehydration) 

5. கிரீன் சில்லி சாஸ்  (Green Chilli Sauce)

6. புரோட்டீன் என்ரிச்சிடு பன்  (Protein Enriched Buns)

7. ரெடி டூ யூஸ் தோசை மாவு   (Ready-to-use Dosa Batter)

8. ரெடி டூ யூஸ் இட்லி மாவு   (Ready-to-use Idli Batter)

9. மஞ்சள் பாலீஷிங் (Turmeric Polishing)

10. சிரல் ஃபிளேக்ஸ் ரைஸ்    (Cereal Flakes Rice)

11. சுத்திகரிக்கப்பட்ட சிறுதானியங்கள்    (Refining of Millets)

12. ரைஸ் மில்க் மிக்‌ஸ் (Rice Milk Mix)

13. கை மூலம் இயங்கும் அப்பளம் இயந்திரம் (Hand Operated Papad Press)

14. கால் மூலம் இயங்கும் அப்பளம் இயந்திரம் (Leg operated papad press)

15. சைக்கிள் பெடல் மூலம் இயங்கும் சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம் (Pedal Operated Millet Dehuller)

நீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள்  இலவசம்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.