மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்!

மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்!

மாத்தியோசிஓவியம்: ஹரன்

ண்பர் ஒருத்தர் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்னு சமூக ஊடகங்கள்ல தீவிரமா செயல்படக்கூடியவர். கொஞ்ச நாளா, அவர்கிட்டயிருந்து எந்தச் செய்தியும் வரல. என்னான்னு விசாரிச்சேன். ‘‘சமூக ஊடகம் வந்த பிறகு, கருத்துப் பரிமாற்றம், தகவல் தொடர்புனு நல்ல விஷயமும் நடந்திருக்கு. அதே நேரத்துல, அடுத்தவங்களோட உழைப்பு, அறிவைச் சுரண்டுறதும் அதிகமா நடக்குது. சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது, அதை எழுதின ஆசிரியர் பெயர் இருக்காது. சில நூல்களில் சமணர்கள்னு மொட்டையா சொல்லியிருப்பாங்க. ஏன் நூல் ஆசிரியர் பெயர் இல்லைன்னா, அதை மூல நூல்ல இருந்து பிரதி எடுத்த புண்ணியவான், ஆசிரியர் பெயரை எடுத்துட்டு எழுதியிருக்க வாய்ப்பு உள்ளதுனு அறிஞர்கள் சொல்றாங்க.

மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்!

இப்படித்தான் இருக்குது சமூக ஊடகங்கள்ல வர்ற தகவல்கள். அதை யார் எழுதினாங்க, எதுக்காக எழுதினாங்க?னு தெரியாது. ஆனா, அந்தத் தகவல் உலகம் முழுக்கச் சுத்திக்கிட்டே இருக்குது. அதை எழுதினவங்க பேரு இல்லாம இருந்தா, அந்தத் தகவல் மேல நம்பிக்கை வராதுங்கிறதுதான் என்னோட அனுபவம். இப்பகூடப் பாருங்க, ‘பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளைக் கொடுக்கும் தாவர இலைகள்’னு, ஒரு நல்ல செய்தி வாட்ஸ்அப் குழுவுல சுத்திக்கிட்டிருக்கு. அதிலும்கூட, அதை எழுதியவரோட பேரு இல்லாம இருக்கு. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன்’’னு ஆர்வமா கேட்டாரு.

சுமார் இருபது வருஷத்துக்கு முன்னாடி, திருச்சி லீசா (குடும்பம்) அமைப்பு, தமிழ்நாடு முழுக்க இயற்கை விவசாயத்தைப் பரப்புர நோக்கத்துல, பல பகுதிகள்ல கூட்டம் போட்டு, இயற்கை விவசாய விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்தினாங்க. அந்த அமைப்புல இருந்த ‘அண்ணாச்சி’தான் பிற்காலத்துல ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்னு புகழ் பெற்றாரு.

அப்படியொரு இயற்கை விவசாய விழிப்பு உணர்வு பயிற்சி, சேலம் மாவட்டம், ஓமலூர் பக்கத்துல உள்ள பண்ணைப்பட்டி கிராமத்துல நடந்துச்சு. அப்போ, கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து, ரெண்டு விஞ்ஞானிங்க வந்திருந்தாங்க. அதுல ஒருத்தர் பேரு மஞ்சுநாத். இவர்தான் பயிர் வளர்ச்சிக்குப் பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துகள் முக்கியம். அதைக் கடையில போய் வாங்க வேணாம். உங்க பண்ணையிலேயே அதை எடுத்துக்கலாம்னு சொன்னாரு.

மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்!

மூணு நாள் பயிற்சியில, ஒவ்வொரு இலை தழைகளையும் பறிச்சிக்கிட்டு வந்து, அதிலுள்ள நுண்ணூட்டச் சத்துகளைப் பாடமா நடத்துனாரு. இலை தழையில உள்ள சத்துகள் சம்பந்தமா, தான் ஆராய்ச்சி செய்திருந்தாலும் விவசாயிகள்தான், இதைச் செயல்படுத்திப் பார்த்து உறுதி செய்தாங்க. அதனால, இலை தழைகள்ல உள்ள நுண்ணூட்டச்சத்துகளைக் கண்டறிஞ்ச பெருமை, விவசாயிகளைத்தான் சேரும்னு பெருந்தன்மையா சொன்னாரு. இந்தத் தகவல், சில இதழ்கள்லயும், புத்தகங்கள்லயும் கூட வெளிவந்துச்சு. அதோட மறுவடிவம்தான் வாட்ஸ்அப் தகவலா சுத்திக்கிட்டிருக்குனு, அந்த நண்பருக்கு இயற்கை விவசாய வரலாற்றைச் சொன்னேன்.

நிலத்துல மூக்குப்பொடி அளவுக்கு நுண்ணூட்டச்சத்து இல்லைன்னாகூட, மகசூல் பாதிப்பு ஏற்படும். இலை தழையில இவ்வளவு சத்து இருக்குன்னு தெரிஞ்சதாலத்தான் நம்ம முன்னோருங்க, இதை வயலுக்குப் போட்டாங்க. பலவிதமான சத்துகள் உள்ள தழைகளைச் சாப்பிட்ட ஆடு, மாடுகளோட கழிவை நிலத்துல போட்டுப் பயிர் செய்தாங்க. அதனாலத்தான், அந்தக் காலத்துல நுண்ணூட்டச்சத்துப் பற்றாக்குறை மண்ணுக்கு வரமா இருந்திருக்கு.