மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்!

மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்!

மாத்தியோசிஓவியம்: வேல்

பாஸ்கர் சாவே, குஜராத் மாநிலத்தோட நம்மாழ்வார்னு சொல்லலாம். இந்திய அளவுல இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துட்டுப் போனவர்கள்ல முன்னோடி. சில வருஷங்களுக்கு முன் குஜராத் மாநிலத்துக்குப் போயிருந்த சமயத்துல, பாஸ்கர் சாவே (2015-ம் ஆண்டு இயற்கையுடன் கலந்துவிட்டார்.) பத்தி, அந்த மாநில விவசாயிங்க, உருகி உருகி பேசினாங்க. ‘‘உங்கள் ஊர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, பாஸ்கர் சாவேஜி, பெரிய லெட்டர் எழுதியிருந்தார். அதைப் படித்திருக்கிறீர்களா’’ என்று கேட்டுவிட்டு, அந்தக் கடிதத்தின் நகலைக் கையில திணிச்சாரு குஜராத் நண்பர் கபில் ஷா. ஏராளமான தகவல் அடங்கிய அந்தக் கடிதம், இன்னைக்கும்கூட அதில் சொல்லப்பட்டுள்ள விஷயம் பொருத்தமா இருக்கு. நம்ம ஜூனியர் கோவணாண்டி கணக்காகக் கிழி கிழின்னு கிழிச்சிருக்காரு...

மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்!

‘‘அன்புள்ள சுவாமிநாதன்ஜி,

அடியேன் 84 வயதான இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயி. அறுபது வருடங்களுக்கு மேலாக விதவிதமான உணவுப் பயிர்களைச் சாகுபடிச் செய்த அனுபவம் கொண்டவன். இத்தனை வருடங்களில் நான் பலவிதமான வேளாண்மை உத்திகளை ரசாயன விவசாயத்தின் கொடுமைகளை, கழனியில் செய்துப் பார்த்துப் பாதிக்கப்பட்ட பாவிகளில் நானும் ஒருவன். 

அந்த அனுபவத்தால்தான் இயற்கையோடு ஒத்திசைந்த இயற்கை வேளாண்மை மட்டுமே இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் ஏற்றது என்கிறேன். அய்யா சுவாமிநாதன், நீங்கள் ‘இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை’ என்று கருதப்படுகிறீர்கள். இந்தப் பசுமைப் புரட்சி ரசாயன இடுபொருளைப் பெரு வெள்ளம்போல் இந்தியாவுக்குள் வரவழைத்தது. இதனால்தான், நம் இந்திய விவசாயிகளின் வாழ்வு துன்பநிலைக்குச் சென்றுள்ளது. நம்முடைய நீண்ட வரலாற்றில் எந்த ஒரு தனிமனிதனையும்விட, உங்களை மட்டுமே இந்த மண்ணின் மிகச் சோகமான நிலைக்கும், கடன் சுமை தாங்க முடியாத விவசாயிகளின் தற்கொலைக்கும் பொறுப்பாளர் எனக் கருதுகிறேன்.

மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்!


விதிவசத்தால் நீங்கள் இப்போது தேசிய விவசாயிகள் கமிஷனுக்கு (The National Commission on Farmers) தலைமை பொறுப்பேற்று ‘புதிய விவசாயக் கொள்கைகளை’ வரையறுக்கும் வேலையில் உள்ளீர்கள். நம் குழந்தைகளுக்காகவும் இனிமேல் பிறக்கப்போகிறவர்களுக்காகவும் தவறுகளைத் திருத்த இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ள, உங்களை வலியுறுத்துகிறேன். இது ஒரு திறந்த உரையாடல் என்பதால், நான் என்னுடைய கடிதத்தைப் பிரதமர், மத்திய வேளாண் அமைச்சர், தேசிய கருத்து குழுவின் தலைவர் மற்றும் ஊடகத்தினருக்கும் அனுப்புகிறேன். இந்தக் கொள்கைகளில் உள்ள அதிமுக்கிய பிரச்னைகளை, எல்லா மட்டங்களிலும் திறந்த விவாதங்கள் செய்வதற்காகவும், ஆன்ம பரிசோதனை செய்வதற்காகவும், என் கடிதம் பயன்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

நம் நாடு அற்புதமான கரிம வளத்தோடு, செல்வச் செழிப்போடு, பொன்னான மண்ணோடு, போதுமான நீர்வளத்தோடு, வற்றிப்போகாத சூரிய வெளிச்சத்தோடும் உள்ளது. இவற்றைக்கொண்டுதான் நம் முன்னோர்கள் நல்ல விளைச்சல் எடுத்து நலமுடனும் வளமுடனும் வாழ்ந்தார்கள். உங்களைப் போன்ற விவசாய அனுபவமே சுத்தமாக இல்லாதவர்களால், இந்த மண்ணையும், மக்களையும் புரிந்துகொள்ள முடியாது. பல நூறு ஆண்டுகளாக ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லி விஷத்தையும் தெளிக்காமல், தற்சார்புடன் விவசாயம் நடந்துவந்தது. இதன் மூலம்தான், செல்வச் செழிப்பு ஏற்பட்டது. இவ்வளவுக்கும் நம் நாட்டின்மீது, பலவிதமான படையெடுப்பு மூலம், செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டாலும், நம் மண் வளமாகவும், நலமாகவும் இருந்த காரணத்தால், அதன் மூலம் மகசூல் எடுத்து மீண்டும் மீண்டும் செழிப்படைந்தோம்.

நம் காடுகளில் நாவல், மா, காட்டு அத்தி, புளி... போன்ற மரங்கள் திடகாத்திரமாக வளர்ந்து நிற்கின்றன. ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு ஆயிரம் கிலோவுக்குக் குறையாமல், அதில் காய், கனிகள் கிடைக்கிறன. அந்தக் காட்டு மரங்களுக்கு யாரும், களையெடுப்பதில்லை; உரம் கொடுப்பதில்லை; பூச்சிக்கொல்லி விஷத்தைக் கொண்டுவந்து தெளிப்பதில்லை. இந்த மரங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் மற்றும் சத்துகள் (தழை, மணி, சாம்பல் சத்துகள்- NPK) கிடைக்கின்றன? இடம்விட்டு இடம் நகராமல் உள்ள இந்த மரங்களுக்குத் தேவையான உணவினையும், நீரையும் தேடி எடுத்துக்கொள்ளும் ஆற்றலை, இயற்கை வழங்கி உள்ளது. ஆனால், உங்களைப்போன்ற குறுகிய பார்வை அறிவியலாளர்களும், பொறியியலாளர்களும் இந்த உண்மையைக் காணவியலாத குருடர்களாக இருக்கிறீர்களே!’’

நம்ம குஜராத் ‘நம்மாழ்வார்’ அடுத்துச் சொல்லப் போற விஷயம், இதைவிடச் சூடா இருக்கும். அதை அடுத்த இதழ்ல பார்ப்போம்.