மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!

மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!

மாத்தியோசிஓவியம்: வேல்

மீபத்துல, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரத்துல நடந்த பத்திரிகையாளர்களுக்கான ‘காலநிலை மாற்றமும் ஊடகங்களின் உரையாடலும்’ (Climate Change and the Urgent Need for a Media Narrative) பயிற்சிப் பட்டறையில கலந்துக்கப் போயிருந்தேன். அட்மினிஸ்டிரேடிவ் ஸ்டாஃப்  காலேஜ் ஆஃப் இந்தியா (Administrative Staff College of India) சார்புலத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாங்க. பெல்ல விஸ்டா(Bella Vista)ங்கிற இந்தக் கல்லூரி வளாகம், ஒரு காலத்துல ஹைதராபாத் நிஜாமின் அரண்மனையா இருந்திருக்கு. நாடு சுதந்திரம் அடைஞ்சவுடனே, மிகச் சிறந்த நிர்வாகிகளை உருவாக்க, இந்த அமைப்பை உருவாக்கினாங்க. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்ல உயர் பதவி வகிக்கிறவங்களுக்கும், பல்வேறு வகையான நிர்வாகப் பயிற்சிக் கொடுக்கிறாங்க. இந்தக் கல்லூரி வளாகத்துல உள்ள நுழைஞ்சவுடனே, நிஜாம் காலத்துக்குப் போனது மாதிரி இருந்துச்சு. ராஜ உபசாரம்னு சொல்வாங்களே, அதை அங்க நேரடியாகப் பார்க்க முடிஞ்சது. இன்னைக்கும் விருந்து உண்ணும் உணவுக்கூடம், நிஜாம் காலத்து நடைமுறையை அப்படியே பின்பற்றுறாங்க. சாப்பிட உள்ளே போனால், ராஜமரியாதைதான். விதவிதமான உணவு வகைகள், இனிப்பு, காரம், புளிப்புனு அறுசுவை விருந்து, ரசிச்சு, ருசிச்சி சாப்பிட வெச்சது. சாப்பிடும்போது மன்னரைச் சுற்றி, சேவகம் செய்ய ஆள்கள் நிற்பதுபோல, இப்பவும், விருந்தினர்களைச் சுற்றிலும், ராஜ உணவுக் கொடுக்க, பணியாளர்கள் பவ்யமாக நிக்கறாங்க. 

மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்துக்கு வருகை தந்து, ராஜ உணவு சாப்பிட்டவங்க போட்டோக்களையும், சுவத்துல மாட்டி வெச்சிருக்காங்க. அதுல முன்னாள் பிரதமர் நேரு தொடங்கி, நம்ம ஊர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வரையிலும் வி.வி.ஐ.பிகளேட போட்டோ பட்டியல் நீளுது.

இந்தக் கல்லூரிக்கு வந்த அதிகாலை நேரத்துல அங்கிருந்த அரண்மனை பணியாளர், அன்றைய ஆங்கில நாளிதழைக் கொடுத்தாரு. ஆர்வமா வாங்கிப் பார்த்த எனக்கு, இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுச்சு. 

மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!

‘‘விவசாயிகளின் பொற்காலம் தொடங்கிவிட்டது. ‘ரைத்து பந்து’ (Rythu Bandhu) திட்டம் மூலம், தெலங்கானா மாநிலத்தின் விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய், விவசாயம் செய்ய உதவித்தொகை வழங்கப்படும். இதை 6 மாதங்களுக்கு ஒருமுறை, பிரித்துக் கொடுக்கப்படும். விவசாயிகள் தங்கள் நிலத்தின் பட்டாவுக்காக இனி அலைய வேண்டாம். பாஸ்போர்ட் வடிவில் பட்டா புத்தகம் வழங்கப்படும். இந்தத் தகவல்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும். விவசாயிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் தொடரும்’’னு தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்த அறிவிப்பை முழுப்பக்க விளம்பரமா கொடுத்திருந்தாரு. 

மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!

பயிற்சிப் பட்டறைக்கு வந்திருந்த தெலங்கானா பத்திரிகை நண்பர்கிட்ட, இந்தத் திட்டம் பத்தி விசாரிச்சு பார்த்தேன். ‘‘ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் முதல்வராகச் சந்திரபாபு நாயுடு இருந்தபோது, விவசாயிகளின் வளர்ச்சிக்காக ஏராளமான நல்ல திட்டங்களைச் செயல்படுத்தினார். விவசாயத் திட்டங்கள் மூலம் மக்கள் மனதில், இடம்பிடித்த காரணத்தால்தான், இப்போதும் ஆந்திர மாநில முதல்வராகத் தொடர்கிறார்.

ஆந்திர மாநில விவசாயிகளை வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்கு அனுப்புவது, ஆயிரம் ஏக்கரில் இயற்கை விவசாயப் பல்கலைக்கழகம், ஜீரோபட்ஜெட் விவசாயத்தை அரசு சார்பில் செயல்படுத்துவது... என விவசாயிகளுக்காக வரிந்து கட்டிக்கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இதைப்பார்த்த எங்கள் மாநில முதல்வர் சந்திரசேகர் ராவும், இப்போது விவசாயிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், விவசாயிகளுக்கு நல்லது செய்வதில், ஆந்திரா, தெலங்கானா முதல்வர்கள் நீயா, நானா எனப் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்’’ எனச் சொன்னவர், ‘‘ஆமாம், உங்கள் தமிழ்நாடு முதல்வர் விவசாயிகளுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார்’’னு சங்கடமான கேள்வியைக் கேட்டாரு.

மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!

எங்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போதைக்கு, நல்லபடியா விவசாயம் செய்ற விவசாயிங்க நிலத்தையெல்லாம், பிடுங்கியெடுத்து, ‘பசுமை வழிச்சாலை’ போடற வேலையில ஜரூரா இருக்காருனு பதில் சொன்னேன். ‘‘அடக் கொடுமையே..!’’னு ஆதங்கப்பட்டாரு அந்த நண்பர்.

பக்கத்து மாநிலத்துக்குப் போய், நம்ம விவசாயிகளை நினைச்சு வருத்தப்பட்ட எனக்கு, தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான தகவலைச் சொல்லி, ‘தமிழன்டா’னு தலைநிமிர்ந்து பெருமைபட வெச்ச சம்பவமும் நடந்துச்சு. பொதுவா, இந்த மாதிரி பயிற்சிப் பட்டறையில, செய்முறை வகுப்பு இருக்கும். அதன்படி நான் இடம் பெற்றிருந்த குழுவுக்கு, ‘கூல் ரூப், கூல் லிவ்ஸ்’ (Cool Roofs, Cool Lives) என்ற தலைப்பைக் கொடுத்து, அது சம்பந்தமான தகவல்களைத் திரட்டச் சொல்லியிருந்தாங்க. முதல் நாள் மாலை 5 மணிக்குத் தலைப்பு கொடுத்து, மறுநாள் காலை 10 மணிக்கு, அதுசம்பந்தமான தகவல்களை வீடியோ, கட்டுரை, போட்டோனு பல வடிவங்கள்ல சமர்ப்பிக்கணும்னு சொல்லியிருந்தாங்க. விடிய விடிய கண் விழிச்சி, அனைத்தையும் வித்தியாசமாகச் செய்திருந்தோம். வீட்டு மொட்டை மாடயில் இருக்கிற கூரை மேல, வெள்ளை நிற வண்ணம் அடிச்சா, வெப்பத்தின் தாக்கம் குறைவா இருக்கும். இதைத்தான் கூல் ரூப்(குளுமை கூரை)னு சொல்றாங்க. இந்தக் கூல் ரூப் முறையை இந்தியாவுல செயல்படுத்த உலக வங்கி உட்பட, பல அமைப்புகள் நிதி உதவி செய்றாங்க. 

மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!

நாங்க தயார் செய்திருந்த கட்டுரையில, பாரம்பர்ய கூல் ரூப், லாரி பேக்கர் முறை மற்றும் தமிழ்நாடு கனிம வள நிறுவனம் தயார் செய்து, விற்பனை செய்து வரும் ‘வெர்மிடைல்’ (VERMITILE) என்ற பொருள் குறித்து விரிவாகச் சொல்லியிருந்தோம். கூடுதலா இது சம்பந்தமான 2 நிமிட வீடியோவும் தயார் செய்திருந்தோம். சில ஆண்டுகளுக்கு முன்னாடி, இந்த வெர்மிடைல்ஸ் உருவாக்கத்திற்கு வழிகாட்டிய அப்போதைய, தமிழ்நாடு கனிம வள நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் பேட்டியுடன் விரிவான கட்டுரைகளை, பசுமை விகடன், நாணயம் விகடன்... உள்ளிட்ட விகடன் குழும இதழ்களிலும், வெளியிட்டிருந்தோம். அந்தத் தகவல்கள், இந்தச் சமயத்துல கைகொடுத்துச்சு. வழக்கமாக, கோடைக்காலத்தில வீட்டின் உள்ளே 38 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். 

மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!

ஆனா, வெர்மிடைல்ஸ் பதிக்கப்பட்ட வீடுகளோட வெப்பநிலை, கடுமையான கோடைக்காலத்தில்கூட 30 டிகிரியைத் தாண்டாது. இந்த வெர்மிடைல்ஸ் பதிக்கப்பட்ட வீடுகளுக்கு மின் விசிறி, ஏ.சியின் தேவையும் கூடக் குறையும். பாறைகளிலிருந்து உருவாக்கப்படும், இந்த டைல்ஸ் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இந்த ‘வெர்மிடைல்’ குறித்த தகவல் நாடு முழுவதுமிருந்து வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கும், வல்லுநர்களுக்கும் புதுசா இருந்துச்சு. பலரும் இதுசம்பந்தமா கேள்விக்கேட்டு, கூடுதல் தகவல்களைத் தெரிஞ்சுக்கிட்டாங்க. கூடவே, இந்தக் தகவல் அடங்கிய பி.பி.டி ஃபைலையும், வீடியோவையும் தங்களோட பென் ட்ரைவில் பதிவு செஞ்ச கையோட, கைகுலுக்கி வாழ்த்தும் தெரிவிச்சப்ப... ‘தமிழன்டா’னு வாய்விட்டுச் சொல்லிக்கிட்டேன்.