சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

வெல்கம் 2019 - இயற்கை

வெல்கம் 2019 - இயற்கை
பிரீமியம் ஸ்டோரி
News
வெல்கம் 2019 - இயற்கை

வெல்கம் 2019 - இயற்கை

வெல்கம் 2019 - இயற்கை

மிழகம் முழுவதிலும் ஜனவரி 1-ம் தேதி முதல் சில பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர, மற்றவற்றைப்  பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள் போன்றவற்றைப் பயன்படுத்திவரும் வணிகர்கள், துணிப்பைகளுக்கு மாறிவருகிறார்கள்.

வெல்கம் 2019 - இயற்கை

மார்ச் 22-ம் தேதி (2019) நடைபெற இருக்கும் ‘உலக புவி தினம்’ கொண்டாட எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்பு,  ‘உயிரினங்களைக் காப்போம்’. உலகின் பல நாடுகளில் அதிகமாக அழிந்துவரும் உயிரினங்களைக் காக்கும் வகையில், இந்தத் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

வெல்கம் 2019 - இயற்கை

சிபிக் கடலில் ஏற்பட உள்ள எல்நினோ காரணமாக, உலகில் அதிகப்படியான மழைப் பொழிவோ அல்லது வறட்சியோ ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த எல்நினோ,  பிப்ரவரி மாதம் நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

வெல்கம் 2019 - இயற்கை

ஜூன் 17 முதல் 21 வரை, கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் தொலைத்தொடர்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. அதில், காடுகள் மற்றும் கடல்களைப் பற்றி விவாதிக்க இருக்கின்றனர். இந்தக் கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்துகொள்வார்கள்.

வெல்கம் 2019 - இயற்கை
வெல்கம் 2019 - இயற்கை
வெல்கம் 2019 - இயற்கை

வ்வோர் ஆண்டும் பிப்ரவரி 2-ம் தேதி, ‘உலக சதுப்பு நில தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2019) ஆஸ்திரேலியாவில் இதுகுறித்த கருத்தரங்கம் நடைபெறும். ‘காலநிலை மாற்றமும் சதுப்பு நிலமும்’  என்ற தலைப்பில் நடக்க இருக்கிறது. உலகில் குறைந்துவரும் சதுப்பு நிலங்களின் எண்ணிக்கையையும், பெருகிவரும் காலநிலை மாற்றத்தின் அடிப்படையிலும் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.

துரை.நாகராஜன்