மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை!

தீவனத்தில் கலப்படம்..! கண்டுபிடிப்பது எப்படி?

##~##

''கால்நடைத் தீவனத்தில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?'

 எஸ். கணேசன், சேலம்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் கால்நடைத் தீவனப் பகுப்பாய்வு மற்றும் தர உறுதி ஆய்வகத்தின் துணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர்.ஆர். நடராஜன் பதில் சொல்கிறார்.

''கலப்படத்தில் இரண்டு வகைகள் உண்டு. தரமான பொருட்களுக்குப் பதிலாக தரம் குறைந்தவற்றையோ அல்லது கழிவுகளையோ பயன்படுத்துவது ஒரு வகை. முதல் தர தவிடுடன், கழிவுத் தவிடைக் கலப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சிலசமயங்களில் இவற்றில் பூஞ்சணம் தாக்கப்பட்ட கழிவுகளும் சேர்ந்து, கால்நடைகளுக்குப் பலவித நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

நீங்கள் கேட்டவை!

வண்ணத்திலோ, சுவையிலோ ஒன்றாக இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, கலப்படம் செய்வது இன்னொரு வகை. உதாரணமாக, கடலைப் பிண்ணாக்கில், கடுகுப் பிண்ணாக்கைக் கலந்து விடுவதைச் சொல்லலாம். இந்த முறையில் சமயங்களில் சில வேதிப்பொருட்களையும் கலந்து விடுவார்கள். அதனால், அதிகளவில் பாதிப்புகள் நேர்ந்து விடுகின்றன.

நீங்கள் கேட்டவை!

கால்நடைத் தீவனங்களுக்கு அதிகத் தேவை இருப்பதால், கலப்படமும் அதிகமாக உள்ளது. கால்நடைத் தீவனத்தில் 'கலப்படம் செய்யப்பட்டுள்ளது’ என்கிற ஐயம் உங்களுக்கு எழுந்தால்... உடனடியாக எங்கள் ஆய்வகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். அந்தத் தீவனத்தை ஆய்வு செய்து, 'என்னென்ன பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருக்கின்றன’ என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லி விடுவோம். அதன் பிறகு, தவறு நடந்திருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தீவனத் தயாரிப்பாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

இதைத்தவிர, காலநிலைகளுக்கு ஏற்றவாறு தீவனம் வழங்குவது பற்றிய ஆலோசனைகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.''

தொடர்புக்கு: கால்நடைத் தீவனப் பகுப்பாய்வு மற்றும் தர உறுதி ஆய்வகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266288.

''எங்கள் பள்ளியில் மரங்களை வளர்க்க விரும்புகிறோம். எந்த வகையான மரங்களை நடுவது, எப்போது நடவு செய்வது... போன்ற விவரங்கள் தேவை?'

ஆர். சாந்தி, திண்டிவனம்.

ரம் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த 'மரம்’ தங்கசாமி பதில் சொல்கிறார்.

''பள்ளி வளாகத்தில் நடப்போகிறீர்கள் என்பதால், ஆர்வமுள்ள குழந்தைகளைத் தேர்வு செய்து அவர்கள் மூலமாக மரங்களை வளர்க்கச் செய்யலாம். அதோடு, அந்தக் குழந்தைகளின் பெயரையே மரங்களுக்கும் வைத்தால், குழந்தைகளின் ஆர்வம் அதிகரிப்பதோடு, மரங்களோடு உணர்வுப்பூர்வமான உறவும் ஏற்படும். அப்படி இருந்தால், குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடன், இயல்பாகவே மரங்களைப் பராமரிக்கத் தொடங்கி விடுவார்கள். பள்ளிப் பருவத்திலேயே 'பசுமை’ மீது ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டால், நிச்சயம் அவர்கள் மூலம் பசுமையான உலகத்தை உருவாக்க முடியும்.

நீங்கள் கேட்டவை!
நீங்கள் கேட்டவை!

வேம்பு, புங்கன், சிங்கப்பூர் செர்ரி, செஞ்சந்தனம், நெல்லி, நாவல்... போன்ற மரக்கன்றுகள் பள்ளிகளுக்கு ஏற்றவை. சிங்கப்பூர் செர்ரி, விரைவாக வளரக்கூடிய ரகம். இரண்டு ஆண்டுகளில் இவற்றிலிருந்து சுவையான பழங்கள் கிடைக்கும். அதனால், பல பறவைகள் இம்மரங்களைத் தேடி வரும் சூழ்நிலை உருவாகும். அதனால் பள்ளிக்கூடம் விரைவாகச் சோலையாக மாறிவிடும்.

ஜூலை மாத இறுதியில் பருவமழை தொடங்கும் காலம்தான் மர நடவுக்கு ஏற்ற சமயம். ஜூன் மாத இறுதியிலேயே, நடவுக்குத் தேர்வு செய்த இடங்களில் ஒன்றரை அடி ஆழம், ஒன்றரை அடி சதுரத்தில் குழிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாதம் வரை இப்படி ஆறப்போட்டால்... குழிகளுக்குள் வெப்பம் குறைந்து காற்றோட்டம் அதிகரிக்கும். கன்றுகளை நடவு செய்த பிறகு... மூன்று அடி உயரத்தில், மூன்று பக்கமும் மூங்கில் குச்சியை நட்டு, அவற்றைச் சுற்றி நிழல் வலையைக் கட்டி விட்டால், ஆடு, மாடுகளிடம் இருந்து கன்றுகளைக் காப்பாற்றி விடலாம். இவற்றை மட்டும் கடைபிடித்தாலே, உங்கள் பள்ளியை, 'பசுமைப் பள்ளி’யாக மாற்றி விடலாம்.''

தொடர்புக்கு: செல்போன்: 97866-04177.

''மா, கொய்யா, சப்போட்டா... போன்ற பழங்கள் சீசன் சமயத்தில் அதிகமாக விளைந்து விடுவதால், சந்தையில் குறைவான விலைதான் கிடைக்கிறது. அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வாய்ப்புகள் இருக்கின்றவா?''

கே. கந்தசாமி, தேனி.

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். என். வரதராஜன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை!

''விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவது பற்றிய விழிப்பு உணர்வு விவசாயிகளுக்குக் குறைவாகத்தான் உள்ளது. உதாரணத்துக்கு நெல் அறுவடை செய்தவுடன் அதை அப்படியே விற்பனை செய்யாமல், அரிசியாக்கி விற்றால், கூடுதல் லாபம் கிடைக்கும். இதுதான் மதிப்புக் கூட்டல். காய்கறிகள், பழங்கள்... போன்றவற்றையும் இப்படி மதிப்புக் கூட்டி கூடுதல் லாபம் பார்க்க முடியும்.

எங்கள் துறையின் சார்பில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மதிப்புக் கூட்டுதல் பற்றிய பயிற்சிகளை வழங்கி வருகிறோம். உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், பழ ஜாம், பழரசம், ஊறுகாய், ஊறுகனி பழ பார் (கேன்டி), பழ மிட்டாய்... போன்றவற்றைத் தயாரிப்பது பற்றி பயிற்சிகளில் கற்றுக் கொள்ள முடியும்.''

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422-6611268.

''எங்கள் பண்ணையில் பண்ணை வீடு அமைக்கவிருக்கிறோம். சுற்றுச் சூழலுக்கு உகந்த 'பசுமை வீடு’ கட்ட யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?''

எஸ். காயத்ரி, பல்லடம்.

ரோவில் சர்வதேச நகரில் உள்ள 'சென்டர் ஃபார் சயின்டிஃபிக் ரிசர்ச்’ என்ற தொண்டு நிறுவனத்தின் தொழில்நுட்பப் பயிற்றுநர் ராஜாராமன் பதில் சொல்கிறார்.

''ஆரோவில் பகுதியில் இதுபோன்று பல பண்ணை வீடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்பவர்களுக்கு, 'அது போலக் கட்ட வேண்டும்’ என்கிற எண்ணம் தோன்றும். அழகும், எளிமையும் கொண்ட அந்த வீடுகள் 'ஃபெரோசிமென்ட்’ என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்பட்டவை. 'ஃபெர்ரோஸ்’ என்ற வார்த்தைக்கு இரும்பு சார்ந்த பொருள் என்று அர்த்தம். செங்கல் இல்லாமல்... இரும்பு, சிமென்ட் மற்றும் மணல் ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே கட்டப்படுவதால் அதற்கு 'ஃபெரோ சிமென்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நன்றாகக் கட்டட வேலை தெரிந்த ஒரு கொத்தனார், ஒரே நாளில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ள முடியும்.

நீங்கள் கேட்டவை!

சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது, அங்கிருந்த பெரிய, பெரிய கட்டடங்கள்கூட சரிந்து விழுந்து விட்டன. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்ட ஒரு கட்டடம் மட்டும் சரியவில்லை. அது ஆரோவில்லில் பயிற்சி பெற்ற ஒருவரால் கட்டப்பட்டது. தற்போது, அந்த மாநிலத்தில் இதுபோன்ற கட்டடங்கள் பெருகி வருகின்றன.

இத்தொழில்நுட்பத்தில் கட்டப்படும் வீடுகளைப் பிரித்து மீண்டும் வேறு இடத்தில் கட்டிக் கொள்ள முடியும். அதற்கேற்ற வகையில் அச்சு போன்ற அமைப்பின் மூலம் வடிவமைக்கப்பட்ட பொருட்களால் கூரை மற்றும் சுவர்களை உருவாக்குகிறோம்.

தவிர, மரங்களையும் பயன்படுத்துவதில்லை. அதனால்தான் இவற்றை 'பசுமை வீடு’ என்கிறோம். சாதாரண முறையில் கட்டுவதைக் காட்டிலும் இம்முறையில் 30% வரை செலவைக் குறைக்க முடியும். ஏழே நாட்களில் வீட்டைக் கட்டி முடித்து விடலாம். இவ்வகை வீடுகள் இருநூறு ஆண்டுகள் வரை தாங்கி நிற்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 99434-66023.

நீங்கள் கேட்டவை!