Published:Updated:

பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் 22 விவசாய சங்கங்கள்; என்ன செய்யப்போகின்றன?

22 அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம்
News
22 அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம்

`சம்யுக்த் கிஷான் மோர்ச்சா'வில் மொத்தம் 32 விவசாயிகள் அமைப்பு இடம் பெற்றுள்ளன. இதில் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு 22 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. `இதனால் சம்யுக்த் கிஷான் மோர்ச்சா'வில் பிளவு ஏற்பட்டுள்ளது.

Published:Updated:

பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் 22 விவசாய சங்கங்கள்; என்ன செய்யப்போகின்றன?

`சம்யுக்த் கிஷான் மோர்ச்சா'வில் மொத்தம் 32 விவசாயிகள் அமைப்பு இடம் பெற்றுள்ளன. இதில் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு 22 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. `இதனால் சம்யுக்த் கிஷான் மோர்ச்சா'வில் பிளவு ஏற்பட்டுள்ளது.

22 அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம்
News
22 அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றனர். மத்திய அரசு அந்த 3 வேளாண் மசோதாக்களையும் திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. இந்த வெற்றிக்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அமைப்புகளை உள்ளடக்கிய ̀சம்யுக்த் கிஷான் மோர்ச்சா' சார்பில் அண்மையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் அதிகம் கலந்துகொண்டன. விவசாயிகள் அனைவரும் வெற்றியுடன் வீட்டுக்குத் திரும்பிய நிலையில், இந்த வெற்றியை பஞ்சாப் தேர்தலில் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள `சம்யுக்த் கிஷான் மோர்ச்சா'வின் சில அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

பல்பிர் சிங்(நடுவில்)
பல்பிர் சிங்(நடுவில்)

`சம்யுக்த் கிஷான் மோர்ச்சா'வில் மொத்தம் 32 விவசாயிகள் அமைப்பு இடம் பெற்றுள்ளன. இதில் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு 22 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. `இதனால் சம்யுக்த் கிஷான் மோர்ச்சா'வில் பிளவு ஏற்பட்டுள்ளது. 22 விவசாயிகள் அமைப்பு நிர்வாகிகள் கூடி இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பஞ்சாப் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இதற்காக `சம்யுக்த சமாஜ் மோர்ச்சா' என்ற அரசியல் அமைப்பைத் தொடங்குவது என்றும் முடிவு செய்தனர். அதோடு இந்த அமைப்புக்கு பல்பிர் சிங் என்பவரை தலைவராகவும் நியமித்துள்ளனர். இத்தேர்தலுக்குப் பிறகு, அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சென்று வழிபாடு நடத்திய பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பல்பிர் சிங், பஞ்சாப் தேர்தலில் போட்டியிட `சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா' உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 22 விவசாய அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ளன. தற்போது இருக்கும் அமைப்பு முறையையே மாற்ற வேண்டியிருக்கிறது. இதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால், ``தேர்தலில் போட்டியிடும் முடிவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், தங்களுக்கும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள முடிவுக்கும் தொடர்பு இல்லை" என்றும் ``சம்யுக்த கிஷான் மோர்ச்சா" நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் பயன்படுத்த `சம்யுக்த கிஷான் மோர்ச்சா' பெயரை பயன்படுத்துவது விதிகளை மீறிய செயலாகும். எந்த அரசியல் அமைப்பும் `சம்யுக்த கிஷான் மோர்ச்ச்சா' பெயரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பின் தலைவர்கள் கூறுகையில், ``தங்களது கிஷான் மோர்ச்சாவில் நாடு முழுவதும் பல்வேறு கொள்கைகளைக் கொண்ட 400-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த அமைப்பு விவசாயிகளின் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது" என்று தெரிவித்தனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள `சம்யுக்த சமாஜ் மோர்ச்சா' பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேரப்போவதாக வெளியான செய்தியை புதிய அமைப்பின் நிர்வாகியான ஹர்மீத் சிங் மறுத்துள்ளார்.

Delhi Farmers Protest
Delhi Farmers Protest
AP Photo / Manish Swarup

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ``விவசாய மசோதாவை எதிர்த்துப் போராடி வெற்ற எங்களால் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும்" என்று தெரிவித்தார். `சம்யுக்த சமாஜ் மோர்ச்சா'வின் தலைவர் பல்பீர் சிங் இது குறித்து கூறுகையில், ``நாங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதோடு விரைவில் தேர்தலுக்கான சின்னமும் முடிவு செய்ய இருக்கிறோம். ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி தொடர்பாக எந்த விதப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை" என்று தெரிவித்தார்.

`சம்யுக்த சமாஜ் மோர்ச்சா'வை தங்களது பக்கம் இழுக்க ஆம் ஆத்மி கட்சியும், பா.ஜ.க-வும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.