மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை - ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா?''

படங்கள்: க. தனசேகரன் ,புறா பாண்டி

''நிலக்கரித் தூளில், 'ஹ்யூமிக் ஆசிட்’ இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால், நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாமா?''

ஆர். கோவிந்தன், திருவண்ணாமலை.

கடலூர் மாவட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உள்ள 'சென்டர் ஃபார் அப்ளைய்ட் ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட்’ அமைப்பின் துணைப்பொது மேலாளர் முனைவர். சந்தானம் பதில் சொல்கிறார்.

''ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்து போன தாவரங்கள்தான், காலமாற்றத்தில் நிலக்கரியாக உருமாறுகின்றன. அத்தகையத் தாவரங்களின் மட்குகள் (ஹ்யூமிக்) நிலக்கரியில் உள்ளன. அவற்றில் பயிர் வளர்ச்சிக்கு உதவும் பொருட்களும் உள்ளன. ஆனால், நேரடியாக நிலக்கரித் தூளை பயிர்களுக்குக் கொடுக்கும்போது... அதில் உள்ள சத்துக்களை, பயிர்கள் எடுத்துக்கொள்ள அதிக நாட்கள் பிடிக்கும். அதனால், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் நீர்ம வடிவில் ஹ்யூமிக் அமிலமாக மாற்றிக்கொடுத்தால், பயிர்களில் உடனடியாகப் பலன்கள் தெரியும். பயிர்களில் இந்த அமிலத்தின் பயன்பாடுகள் பற்றி நாங்கள் நீண்ட ஆய்வு மேற்கொண்ட பிறகுதான், விவசாயிகளுக்கு இதை அறிமுகப்படுத்தினோம்.

நீங்கள் கேட்டவை -  ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா?''

இதை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்தும்போது விளைபொருளின் சுவை கூடுவதோடு, நிலத்தில் ஈரப்பதமும் காக்கப்படுகிறது. நெல்லுக்குப் பயன்படுத்தும் விதத்தை இங்கு பார்ப்போம். ஏக்கருக்கு 7 லிட்டர் ஹ்யூமிக் அமிலத்தை, 200 லிட்டர் நீரில் கலந்து, இலை வழித் தெளிப்பாக நெல் வயலில் தெளிக்கலாம். ஏக்கருக்கு 25 லிட்டர் அமிலத்தை, பாசனம் மூலமாகவும் கொடுக்கலாம். 15 நாட்கள் இடைவெளியில், இதைக் கொடுத்து வரலாம்.

நெல் தாள்கள் நல்ல பச்சை நிறத்தில் இருந்தால்... இந்த அமிலத்தைப் பயன்படுத்தக் கூடாது. தழைச்சத்து அதிகமாக இருக்கும்போது இந்த அமிலமும் சேர்ந்தால் கூடுதல் பச்சைநிறம் கிடைத்து விடும். அதனால், பயிர்கள் பச்சை பிடிக்காமல் இருக்கும் வேளையில்தான் பயன்படுத்த வேண்டும். அதேப்போல கதிர் பிடிக்கத் தொடங்கியவுடன் அமிலம் கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும். தற்சமயம் எங்கள் தொழில்நுட்பத்தின்படி ஒரு தனியார் நிறுவனம், வணிகரீதியாக இந்த அமிலத்தைத் தயாரித்து வருகிறது. இது பற்றிய விவரங்களுக்கு எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 04142-257149.

''பேரிக்காய் தமிழ்நாட்டில் விளையுமா? இதன் கன்றுகள் எங்கு கிடைக்கும்?''

பொ. கனகா, ஓமலூர்.

சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். ஆர். அருண்மொழியான் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை -  ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா?''
நீங்கள் கேட்டவை -  ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா?''

''ஆங்கிலேயேர்கள் மூலம் இங்கே அறிமுகமான பயிர்களில் பேரிக்காயும் ஒன்று. ஆப்பிளில் உள்ள அதே சத்துக்கள்தான் இதிலும் உள்ளன. ஆனால், ஆப்பிளை விரும்பி சாப்பிடும் நாம் பேரிக்காயைத் தொடுவதில்லை. பேரிக்காய், காஃபி விளையும் பகுதியில் மட்டுமே வளரும். அதாவது, கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டர் உயரத்துக்கு மேலே உள்ள மலைப்பகுதிகளில் மட்டும்தான் சாகுபடி செய்ய முடியும்.

ஆங்கிலேயர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட சில ரகங்கள்தான், இன்னும் பயன்பாட்டில் உள்ளன. இதன் கன்றுகள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கும்.''

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தோட்டக்கலை ஆராய்ச்சி மையம், கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம். தொலைபேசி: 04542-240931.

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி மையம், தொலைபேசி: 04281-222456.

''மரப் பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும்போது கவனிக்க வேண்டிய விஜயம் எது?''

எம்.ஜே. ருத்ரன், பொள்ளாச்சி.

மரப் பயிர்களுக்கான பாசன முறைகள் பற்றி, நீண்டகால ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் 'சட்டையில்லா' சாமியப்பன் பதில் சொல்கிறார்.

''மரப் பயிர்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து சொட்டுநீர் முறை அமைத்தாலும்... சில எளிய நுட்பங்களில் கோட்டை விடுவதால் உரிய பலன்கள் கிடைக்காமல் போய் விடுகின்றன. கன்று நடவின்போது வேருக்கு அருகில் சொட்டு நீர்க் குழாய்களை அமைப்பார்கள். அவற்றை மரத்தின் வேர் வளர்ச்சிக்கு ஏற்ப அடிப்பகுதியில் இருந்து, விலக்கிக் கொண்டே வர வேண்டும். அதாவது, உச்சிவெயில் நேரத்தில் கிளைகளின் நிழல் எங்கு விழுகிறதோ... அந்த இடத்தில் குழாய் இருக்க வேண்டும். மரத்தின் இளம் வேர்களுக்குத்தான், சத்துக்களை இழுக்கும் சக்தி இருக்கும்.

நீங்கள் கேட்டவை -  ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா?''
நீங்கள் கேட்டவை -  ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா?''

குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது நகர்த்திப் போட வேண்டும். இப்படியே விலக்கிக்கொண்டே போகும்போது இரண்டு வரிசை மரங்களுக்கு அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் ஒன்றோடொன்று சந்திக்கும் நிலை வரும். அப்போது ஒரு குழாயில் மட்டும் பாசனம் செய்தாலே இரண்டு வரிசை மரங்களும் எடுத்துக்கொள்ளும். இதை விடுத்து, அடிமரத்திலேயே தண்ணீரைச் சொட்ட விட்டுக்கொண்டிருந்தால், உரிய பலன் கிடைக்காது''

தொடர்புக்கு, செல்போன்: 85267-35069.

''ஆட்டுப் பால் மூலம் 'சீஸ்’ தயாரிக்க முடியுமா?''

ஆர். கணபதி, கிருஷ்ணகிரி.

சேலம் மாவட்டம், கூலமேடு கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி முத்துக்குமரேசன் பதில் சொல்கிறார்.

''மாட்டுப் பாலை விட, ஆட்டுப் பால் அதிக மருத்துவ குணம் கொண்டது. ஆடுகள், பெரும்பாலும் மூலிகைகளைத்தான் விரும்பி உண்ணும். அதனால்தான் அதன் பாலில் மருத்துவத் தன்மை அதிகமாக உள்ளது. அந்தக் காலத்தில் ஆடு, மாடுகளை மேய்க்கும்போது பசி எடுத்தால், உடனே எளிய முறையில் ஆட்டுப்பாலில் சீஸ் தயாரித்துச் சாப்பிடுவோம். மாட்டுப் பாலில் தயாராகும் சீஸைவிட, ஆட்டுப்பால் சீஸில் இனிப்புத் தன்மை கூடுதலாகவும், சுவையாகவும் இருக்கும்.

நீங்கள் கேட்டவை -  ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா?''

இந்த சீஸை எளிய முறையில் எல்லோருமே தயாரிக்க முடியும். ஆட்டுப் பாலை ஒரு கொட்டாங்குச்சியில் கறந்து வைத்துக் கொண்டு... பாலை மரத்தின் கொழுந்தைக் கிள்ளினால் வரும் பாலில் இரண்டு சொட்டை அதில் விட்டு நன்றாகக் கலக்கி... இரண்டு மணி நேரம் வெயிலில் வைத்தால்... கெட்டியாக மாறி விடும். ஆடு மேய்க்கும் இடத்தில், பாத்திரம் இருக்காது என்பதால், கொட்டாங்குச்சியைப் பயன்படுத்துவோம். சில்வர் பாத்திரங்களையும் இதற்குப் பயன்படுத்தலாம்.''

தொடர்புக்கு, செல்போன்: 97872-21007.

''அரிசியை மதிப்புக் கூட்டி, விற்பனை செய்ய விரும்புகிறேன். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?''

என். நல்லசிவம், திருவள்ளூர்.

தஞ்சாவூரில், இந்திய பயிர் பதனத்தொழில்நுட்ப மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரிசி மட்டுமல்லாமல், தானியங்கள், காய்கறிகள், பழங்கள்... என சகலவிதமான விளைபொருட்களையும், மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தருகிறார்கள்.

தொடர்புக்கு: இந்திய பயிர் பதனத் தொழில்நுட்ப மையம், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613 005.  தொலைபேசி: 04362-228155.

நீங்கள் கேட்டவை -  ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா?''