மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

படங்கள்: ஏ. முத்துக்குமார்

 புறா பாண்டி

##~##

''நாங்கள் சென்னை மாநகரில் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் தேனீ வளர்க்க ஆசையாக இருக்கிறது. இது சாத்தியமா?''

க. ஜெயலட்சுமி, சென்னை.

சென்னையில் தேனீ வளர்ப்புக்குப் பயிற்சி கொடுத்து வரும் கே. வசந்தகுமார் பதில் சொல்கிறார்.

''பொதுவாக, சென்னை என்றாலே... காங்கிரீட் கட்டடங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால், சென்னையில் நிறைய மரங்களும் வளர்ந்து நிற்கின்றன. விமானத்தில் இருந்து, சென்னை நகரைப் பார்த்தால், பசுமையான மரங்களுக்கு மத்தியில்தான், கட்டிடங்கள் தெரியும். எனவே, இந்த மாநகரத்தில் தேனீக்களுக்குத் தேவையான உணவு தயாராக உள்ளது. ஆனால், சில நுட்பங்களைக் கவனமாகக் கடைபிடித்தால் மட்டுமே... தேனீ வளர்ப்பில் வெற்றி பெற முடியும்.

நீங்கள் கேட்டவை

மொட்டை மாடியில், நான்கு பெட்டிகள் வரை வைக்கலாம். அதன் மூலம் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை தேன் கிடைக்கும். இந்த ஆறு மாதங்களில் மட்டும்தான் தென்னை, முருங்கை, குல்மொஹர்... போன்ற மரங்களில் அதிகமாக பூக்கள் இருக்கும். மாதம் ஒரு கிலோ வீதம்... ஒரு பெட்டியில் இருந்து ஐந்து கிலோ தேன் தாராளமாகக் கிடைக்கும். ஜூன், ஜூலை மாதங்களில் காற்று

நீங்கள் கேட்டவை

வீசும். அடுத்து வரும் மாதங்களில் மழை பெய்யும். அதனால் இந்தக் காலங்களில் தேனீக்கள் வெளியில் செல்லாது. அப்போது, அவற்றுக்கு நாம்தான் உணவு கொடுக்க வேண்டும். ஒரு பங்கு சர்க்கரை, இரண்டு பங்கு நீர் கலந்து, தேனீக்களுக்குக் கொடுக்கலாம். இப்படிச் செய்யாவிட்டால், பெட்டியில் உள்ள தேனீக்கள் இறந்து விடும். இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஓய்வு நேரத்தில் தேனீக்களை கவனித்தாலே போதும்.

நம் வீட்டில் உள்ள தேனீப் பெட்டியில் இருந்து கலப்படமில்லாதத் தேன் எடுத்து சாப்பிட்டு பாருங்கள். அபோதுதான் தேனின் உண்மையான சுவையை நீங்கள் உணர்வீர்கள். கடைகளில் தேனைக் காய்ச்சிக் கொடுப்பதாலும், சில கலப்படங்கள் செய்வதாலும், உண்மையான சுவை மறைந்து விடுகிறது. தற்போது, ஒரு கிலோ தேன் 400 ரூபாய் வரை விற்பனையாகிறது. விற்பனைக்காக இல்லாவிடினும்... வீட்டுத்தோட்டம் போல, வீட்டுத்தேவைக்காக மட்டும் கூட தேனீ வளர்க்கலாம். காட்டுபாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி கொடுக்கப்படுகிறது. நானும் அதில் எனது நுட்பங்களை பகிர்ந்து கொள்கிறேன்.''  

தொடர்புக்கு, செல்போன்: 99418-68926.  

''எங்கள் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள், மிகவும் உயரமாக உள்ளன. அவற்றில் எளிதாக ஏறி, தேங்காய் பறிக்கும் கருவிகள் உள்ளனவா?''

எஸ். கவிமணி, கோயம்புத்தூர்.

கேரளா மாநிலம், கொச்சினில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் மினி மேத்யூ, பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்தால், காய் பறிக்க ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். அதனால், அத்தகைய மரங்களில் பலர் காய்களைப் பறிப்பதில்லை. முற்றி விழும் காய்களை மட்டுமே சேகரிப்பார்கள். சில இடங்களில் உயரமான மரங்களை அழித்துவிட்டு, புதிய கன்றுகளை நடுகிறார்கள். ஆனால், அதற்கு எளிய தீர்வு உள்ளது. தென்னை மரத்துடன் இணைத்துக் கொண்டு ஏறும் கருவியை நாங்கள் அறிமுகப்படுத்திஉள்ளோம். இதன் மூலம், 60 அடி உயரம் கொண்ட மரத்தில்கூட ஐந்து நிமிடத்தில் ஏறிவிட முடியும். பெண்கள்கூட எளிதாக இக்கருவியைப் பயன்படுத்தி மரம் ஏற முடியும். அந்தளவுக்கு மிகவும் பாதுகாப்பானது, இக்கருவி. இதில் ஏறும்போது பயமும் ஏற்படாது. விலை 2 ஆயிரத்து 500 ரூபாய். அருகிலுள்ள தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், கருவி கிடைக்க ஏற்பாடு செய்வார்கள்.''

தொடர்புக்கு: தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம், முதல் தளம், பிளாட் எண்: 1579, 'ஜே’ பிளாக், 9-வது தெரு, 15-வது மெயின் ரோடு, சென்னை-600040. தொலைபேசி: 044-26164048.

''வேலூர் மாவட்டத்தில் கால்நடைப் பயிற்சி மையம் எங்கு உள்ளது. இங்கு என்ன மாதிரியான பயிற்சிகள் கொடுக்கிறார்கள்?''

ஏ. சங்கர், வேலூர்.

வேலூரில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் தலைவர் முனைவர். தியோபிலஸ் ஆனந்த்குமார் பதில் சொல்கிறார்.

''வறட்சி மாவட்டமான வேலூரில், விவசாயிகளுக்குக் கை கொடுத்து வருவது, கால்நடை வளர்ப்புதான். அதை மனதில் வைத்துதான் எங்கள் மையம் செயல்படுகிறது. எங்கள் மையத்தில், மாதந்தோறும் பல விதமான இலவசப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. வெள்ளாடு, நாட்டுக்கோழி, கறவை மாடு, வான்கோழி என கால்நடைகள் வளர்ப்பு, பால் பொருட்கள் தயாரிப்பு... போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

நீங்கள் கேட்டவை

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், விலையில்லா ஆடு, மாடு வளர்ப்புத் திட்டப் பயனாளிகளுக்கு அவரவர்களின் கிராமங்களுக்கே சென்று நாங்கள் பயிற்சி கொடுத்து வருகிறோம். பல்கலைக்கழகம் மூலமாக ஒவ்வொரு மாவட்டச் சூழலுக்கும் ஏற்ப பிரத்யேகமாக தாது உப்புக் கலவை தயார் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்துக்கான தாது உப்புக் கலவை எங்கள் மையத்தில் கிடைக்கும். இதை கால்நடைகளுக்கு தினமும் 30 கிராம் அளவில், கொடுத்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

நீங்கள் கேட்டவை

சினைக்கு வராமல் உள்ள மாடுகளுக்கு இதைக் கொடுத்தால், விரைவில் பருவத்துக்கு வரும். ஆடுகளுக்குக் கொடுக்கும்போது வளர்ச்சி வேகமெடுக்கும். ஒரு கிலோ எடை கொண்ட தாதுஉப்புக் கலவை 55 ரூபாய்.

கால்நடை சம்பந்தமான சந்தேகங்களுக்கு எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். தற்சமயம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறோம். விரைவில், திருவண்ணாமலையில் தனியாக ஒரு மையம் தொடங்கப்பட உள்ளது.''

தொடர்புக்கு: உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சத்துவாச்சேரி, வேலூர். தொலைபேசி: 0416-2253022.

''எனது தோட்டத்துக்கு உயிர்வேலி அமைக்கலாம் என்று இருக்கிறேன். அது வளரும் வரையில், தற்காலிகமாக என்ன வகையில் வேலி அமைக்கலாம்?''

எஸ். கண்ணன், புதுக்கோட்டை.

அர்ஜூன் தார்பாலின் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ஜூன் மோகன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''தோட்டங்களுக்கு உயிர்வேலி அமைக்கும் பழக்கம் பரவி வருவது, வரவேற்கத்தக்கது. உயிர்வேலி முழு வளர்ச்சி அடைய, அதிகபட்சம் ஓர் ஆண்டு பிடிக்கும். அதுவரை பயிர்களை இரண்டு வழிகளில் பாதுகாக்க முடியும். முள், மூங்கில் படல்... போன்றவற்றைக் கொண்டு தற்காலிக வேலி அமைப்பது ஒரு வழி. இன்னொரு வழி... கடைகளில் கிடைக்கும் விலை குறைவான நிழல் வலையை நிலத்தைச் சுற்றிலும் வேலி போலக் கட்டி வைக்கலாம். இது இரண்டு ஆண்டுகள் வரை தாங்கும்.''

''ஏலக்காய் சாகுபடி செய்ய விரும்புகிறேன். விவரங்களுக்கு யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?''

சி.டி. ராமகிருஷ்ணன், ராஜபாளையம்.

''வாசனைப் பொருட்களின் ராணி என்று சொல்லப்படும் ஏலக்காய், கடல் மட்டத்தில் இருந்து 600 மீட்டர் முதல் 1,200 மீட்டர் உயரம் வரை உள்ள மலைப்பகுதிகளில் மட்டுமே வளரும். குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விளையும் ஏலக்காய்க்கு மவுசு அதிகம். தமிழ்நாட்டில் வாசனைப் பொருட்கள் வாரியத்தின் கள அலுவலகம், தேனி மாவட்டம், போடியில் உள்ளது.''

தொலைபேசி: 04546-280317.

நீங்கள் கேட்டவை