மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா?'

புறா பாண்டி படங்கள்: க.ரமேஷ் புறா பாண்டி

##~##

''எங்கள் நிலம், தொழிற்சாலைக் கழிவு நீரால் கெட்டுப் போய் விட்டது. அதை எப்படி சரிசெய்து வளமாக மாற்றுவது?''

-எம். கலைவாணி, வாணியம்பாடி.

வெட்டிவேர் குறித்து ஆராய்ச்சி செய்து வருபவரும், வீட்டுத் தோட்ட ஆலோசகருமான கோயம்புத்தூரைச் சேர்ந்த வின்சென்ட், பதில் சொல்கிறார்.

''தொழிற்சாலைக் கழிவு நீரால் நேரடியாக பாதிக்கப்பட்ட நிலங்களையும், மாசுபட்ட நிலத்தடி நீர் காரணமாக வளம் இழந்த நிலங்களையும், வளமாக்கும் வல்லமை... வெட்டிவேருக்கு உண்டு. மண் அரிப்பைத் தடுக்கவும், கோடைகாலத்தில் வெப்பத்தைத் தணிக்கவும் மட்டுமே வெட்டிவேரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், வெட்டிவேரை தமிழ்நாட்டில் இருந்து, அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்ற ஆராய்ச்சியாளர்கள், மாசுபட்ட நிலத்தை வளமாக மாற்றுவதற்காக உபயோகப்படுத்துகிறார்கள். உலகம் முழுக்க இதை பரப்பி வருகிறார்கள். நிலத்தில் படிந்துள்ள பாதரசம், காட்மியம்... உள்ளிட்ட கடின உலோகங்களின் பாதிப்புகளைக்கூட வெட்டிவேர் உறிஞ்சி எடுத்து விடுகிறது. ரசாயன உரம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால், வளம் இழந்த நிலங்களையும் செழிக்க வைக்கும் தன்மை வெட்டிவேருக்கு உண்டு.

நீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா?'
நீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா?'

உங்கள் நிலத்தின் பாதிப்பு எந்த அளவு உள்ளது என்பதைப் பொருத்து, ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை, நிலத்தில் வெட்டிவேரை சாகுபடி செய்ய வேண்டும். இப்படி சாகுபடி செய்யப்பட்ட வெட்டிவேரை அறுவடை செய்து விற்பனையும் செய்யலாம். இந்த வேர் மூலம் பொம்மை, பிரஷ், வாசனைத் திரவியம்... என பலவிதமானப் பொருட்கள் தயாரிக்க முடியும். தாய்லாந்து, வியட்நாம், சீனா... போன்ற நாடுகள் வெட்டிவேரை மக்களிடம் பரப்புவதற்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. வெட்டிவேர் சம்பந்தமாக உலக அளவில் நடைபெற்று வரும் ஆராய்ச்சித் தகவல்களையும், அதன் பயன்பாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.''

தொடர்புக்கு, செல்போன்: 98940-66303.

''இறைச்சிக்கான முயல் ரகங்கள் எவை? அவற்றுக்கு எந்த வகையான தீவனம் கொடுக்க வேண்டும்?''

-மகேஸ்வரி அம்மாள், தாயார்குளம், காஞ்சிபுரம்.

முயல் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முரளிதரன், பதில் சொல்கிறார்.

''சாப்பிடும் உணவை, கறியாக மாற்றும் திறனும், இனவிருத்தித் திறனும் மற்ற விலங்குகளைவிட முயலுக்கு அதிகம். இதை, எந்த இடத்தில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். முயல் கறி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். முயல் கறியில் குறைவான கொழுப்பு, அதிக புரதம், குறைந்த கலோரி உள்ளதால் சாப்பிட்ட உடனே செரிமானம் ஆகிவிடும். அதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது. என்னுடைய அனுபவத்தில் ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய ரகங்கள் இறைச்சிக்கு ஏற்றவை. இவை மூன்று மாதங்களில் 2 கிலோ முதல், 3 கிலோ வரை எடை வரக் கூடியவை.

நீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா?'

100 முயல்களுக்கு 10 சென்ட் நிலம் என்கிற விகிதத்தில் பசுந்தீவனங்களை சாகுபடி செய்ய வேண்டும். அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெரி, தட்டைச்சோளம்... போன்றவை

நீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா?'

முயல்களுக்கான தீவனங்கள். 100 முயல்களுக்குக் குறைவாக வளர்ப்பவர்கள், தனியாக தீவனங்களை சாகுபடி செய்ய தேவையில்லை. நிலத்தில் வளர்ந்துள்ள அருகு, கோரை, கீரை... செடி போன்றவற்றைக்கூட தீவனமாகக் கொடுக்கலாம். கடையில் கிடைக்கும் அடர்தீவனங்களில் பலவும்... விலை அதிகமாக இருப்பதோடு, தரமில்லாமலும் இருக்கின்றன. அதனால், நாமே அடர் தீவனத்தைத் தயாரித்துக் கொள்வதுதான் நல்லது.

பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டி ஈன்ற முயலுக்கு, தினமும் 150 கிராம் அடர் தீவனமும், 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும், 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். முயல்கள் பகல் வேளையில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு; இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும். இந்த முறையில் தீவனம் கொடுத்தால்தான், லாபகரமாக பண்ணையை நடத்தி செல்ல முடியும்.''

தொடர்புக்கு, செல்போன்: 94431-82960.

''சொட்டுநீர்ப் பாசனம் மூலம் மரவள்ளி சாகுபடி செய்துள்ளோம். மழை பெய்தால், செடியில் உள்ள இலைகள் பழுத்துக் கொட்டி விடுகின்றன. இதற்கு என்ன காரணம்?''

-பயனீட்டாளர்கள் சங்கம், திருச்செங்கோடு.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி முனைவர். புகழேந்தி, பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா?'

''இந்தப் பிரச்னைக்கு எளிய முறையிலேயே தீர்வு கண்டுவிட முடியும். பொதுவாக வளர்ந்த மரவள்ளிச் செடியின் இலைகள் கொட்டுவதற்கு... நோய் தாக்குதல், சத்துக் குறைபாடு ஆகியவை மட்டும் காரணம் அல்ல. இந்த மாவட்டங்களின் நிலத்தடி நீர் உப்புத் தன்மை அடைந்து விட்டது. இந்த நீரை, சொட்டுநீர்ப் பாசனம் மூலம் கொடுக்கும்போது... வேர் நேரடியாக எடுத்துக் கொள்ளும்.

நீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா?'

அதேநேரம், நீரில் உள்ள உப்புத் தன்மை மண்ணில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து கொண்டே வரும். மழை பெய்தவுடன் ஒரே இடத்தில் இருந்த உப்பு, மண்ணில் பரவி விடும். 'மழை பெய்து விட்டது’ என்று நாம் பாசனம் செய்யாமல் விடும்போது, மண் காயக்காய... உப்புக்கள் செடிகளின் வேரை அழுத்தி கொஞ்சம் கொஞ்சமாக வேருக்குள் செல்லத் தொடங்கும். இதனால்தான் இலைகள் பழுத்து கொட்டத் தொடங்குகின்றன.

மழை பெய்தாலும், பாசனத்தை நிறுத்தாமல் செய்து வந்தால், மண்ணில் நீரோட்டம் அதிகரித்து, உப்புக்களின் தாக்குதலைக் குறைக்கலாம். இது சம்பந்தமாக மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், எங்கள் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.''

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையம், ஏத்தாப்பூர், சேலம் மாவட்டம். தொலைபேசி: 04282-293526.

''நாட்டுக் கோழிகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி எங்கு கொடுக்கப்படுகிறது?''

-என். பழனிசாமி, எலையமுத்தூர்.

'நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தைத் அணுகினால், பயிற்சி பற்றிய விவரங்களைப் பெறலாம்.'

தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266345.

நீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா?'