மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'?

படங்கள்: க.ரமேஷ்

புறா பாண்டி

##~##

''வெள்ளாடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனங்கள் பற்றியும் அவற்றை எந்த அளவில் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் சொல்ல முடியுமா?''

-எம். சுந்தரி, திருவண்ணாமலை.

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர்.சி. சௌந்திரராஜன் பதில் சொல்கிறார்.

''வெள்ளாடுகள் கிராமங் களில் பயிரிடப்பட்டிருக்கும் செடி, கொடிகளை அழித்து விடும் என்பதால், சில கிராமங்களில் வெள்ளாடு வளர்க்கவும், காடுகளில் மேய்க்க வும் தடை உள்ளது. இதனால், பண்ணைகளின் உள்ளேயே வெள்ளாடுகள் வளர்க்கும் நிலை உருவாகி உள்ளது. மேய்ச்சலுக்குச் செல்லும் வெள்ளாடுகளுக்குப் போதுமான அளவில் பசுந்தீவனங்கள் (புற்கள், இலைகள், தழைகள்) எல்லா நாட்களிலும் கிடைப்பதில்லை. குறிப்பாக, ஆடுகள் அதிகளவில் விற்பனை யாகும், தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பக்ரீத் சமயங்களில் இயற்கையாகவே புற்களும், இலை தழைகளும் இல்லாமல் போய் விடுவதால், அந்த சமயங்களில் ஆடுகளின் உடல் எடை குறைந்து காணப்படும். பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து கொடுப்பதன் மூலம் எடை இழப்பைத் தவிர்க்கலாம்.

வெள்ளாடுகள் கசப்பு, இனிப்பு, உப்பு, புளிப்பு போன்ற சுவைகளை அறியும் திறன் பெற்றவை. வெள்ளாடுகள் புற்களையும், இலை, தழைகளையும் விரும்பி உண்ணும். எனவே கோ-3, கோ-4 போன்ற புற்களையும்; வேலிமசால், சூபாபுல், அகத்தி, கிளரிசீடியா, வேம்பு, ஆல், பலா, கருவேல், நுணா, பூவரசு, வாகை, கொருக்காபுளி (கொடுக்காப்புளி) ஆகிய தாவரங்களையும் பயிரிடலாம். தவிர, கொள்ளு, கடலைக்கொடிகளையும் ஆடுகளுக்குக் கொடுக்கலாம்.

நீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'?

கோ-3 மற்றும் கோ-4, வேலிமசால் ஆகியவற்றை விதைத்த இரண்டு மாதத் திலேயே அறுவடை செய்யலாம். அதனால், இவற்றை அதிகளவில் பயிரிடலாம். மற்றவற்றை வேலியோரங்களில் பயிரிடலாம். குறிப்பாக, கிளரிசீடியா மரங்களை உயிர் வேலியாக அமைக்கலாம். அகத்தியை, கறவை மாடுகளுக்குக் கொடுக்கலாம். இப்படி அதிக அளவில் பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து கொடுப்பதன் மூலம் வெள்ளாடுகள் வேகமாக வளர்ந்து, நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

ஒரு வெள்ளாட்டுக்கு தினமும் 3 கிலோ முதல் 5 கிலோ வரை பசுந்தீவனங்களைக் கொடுக்கலாம். இதில், பாதியளவு புற்களும், பாதியளவு இலை-தழைகளும் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளாடுகள் ஒரே வகையான மர இலைகளைத் தொடர்ந்து உண்ணாது. எனவே, மாற்றி மாற்றிக் கொடுக்க வேண்டும். சாணமோ, சிறுநீரோ பட்டால்... அந்தத் தீவனத்தை ஆடுகள் கழித்துவிடும் என்பதால், பசுந்தீவனங்களைத் தரையில் போடாமல்... கயிற்றில் கட்டியோ அல்லது இரண்டு அடி உயரத்தில் மரப் பெட்டியில் வைத்தோ கொடுக்கலாம். புல் வகைகளை சிறு துண்டுகளாக நறுக்கி, தீவனத்தொட்டியில் வைத்துக் கொடுத்தால், வீணாவதைத் தவிர்க்கலாம்.''

''செங்கல்பட்டு பகுதியில் எனது பண்ணையில் 10 தேன் பெட்டிகள் வைத்திருந்தேன். இரண்டு மாதங்கள் வரை நன்றாக இருந்தன. திடீரென, ஒரு நாள் ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள எல்லாத் தேனீக்களும் வெளியேறி விட்டன. என்ன காரணம்?''

-என்.வி.எஸ். மணியன், ஓரக்காட்டுப்பேட்டை.

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை விஞ்ஞானி, முனைவர். கருப்பசாமி பதில் சொல்கிறார்.

''தேனீக்கள் வளர்வதற்கு இயற்கையான சூழ்நிலை வேண்டும். உங்கள் பண்ணைக்கு அருகில் தொழிற்சாலைச் சத்தம், புகை மண்டலம்... போன்ற தேனீக்களை அச்சுறுத்தும் செயல்பாடுகள் இருக்குமானால், அதன் காரணமாக அவை அந்தப் பகுதியில் இருந்து விலகி இருக்கலாம். 'தேனீப் பெட்டிகளை எங்கு வைக்க வேண்டும்; எந்த மாதங்களில் அதிக தேன் கிடைக்கும்; தேனீக்களைக் கண்காணிப்பது எப்படி?’ என்கிற அடிப்படை விஷயங்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'?

தேனீ வளர்ப்பது என்பது... கிட்டத்தட்ட வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்வது போலத்தான். என்னதான், அடுத்தவர்கள் சொல்லிக் கொடுத்தாலும், நாமாக ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, நம் முயற்சியில் அதை செயல்படுத்த வேண்டும். தேனீ வளர்ப்பில் இறங்கும் முன்பு, தேனீ வளர்ப்புப் பயிற்சியில் கலந்து கொள்வது அவசியம். எங்கள் துறையில் ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்புப் பயிற்சி நடைபெறுகிறது. இதற்கு 250 ரூபாய் மட்டுமே கட்டணம். இப்பயிற்சியில் தேனீ வளர்ப்பு பற்றிய அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுத்து வருகிறோம். 'பெட்டிகள் எங்கு கிடைக்கும், தேனை எப்படி விற்பனை செய்வது?’ போன்ற தகவல்களும் கிடைக்கும்.''

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641003. தொலைபேசி: 0422-6611214.

''தக்காளி, கத்திரி போல மஞ்சள் நாற்றுகளையும் குழித்தட்டு முறையில் உருவாக்க முடியும் என்கிறார்கள். இதன் மூலம் என்ன பயன்?''

-எம். சுதாகரன், சேலம்.

திருப்பூர் மாவட்டத்தில் குழித்தட்டு முறையில் மஞ்சள் நாற்று உற்பத்தி செய்து சாகுபடி செய்து வரும் வடிவேல் பதில் சொல்கிறார்.

''தக்காளி, கத்திரி நாற்று களுக்குப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குழித்தட்டு களையே மஞ்சள் நாற்று உற்பத்திக்கும் பயன்படுத்தலாம். 35 நாட்கள் வயதில் நாற்றுகளை நடவு செய்யலாம். பொதுவாக, ஏக்கருக்கு 1,000 கிலோ விதை மஞ்சள் தேவைப்படும். குழித்தட்டு முறையில் சாகுபடி செய்யும்போது, ஏக்கருக்கு 170 கிலோ விதை மஞ்சள் போதுமானது. அதன்படி விதை மஞ்சளுக்கு

நீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'?

3400 மற்றும் குழித்தட்டுக்கள், இயற்கை உரம்... போன்ற செலவுகளுக்கு  6600 ரூபாயும் செலவாகும். ஆக, விதைப்பு

நீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'?

10,000 வரைத்தான் செலவு பிடிக்கும். ஆனால், நேரடி விதைப்பில்

நீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'?

20,000 வரை செலவு ஆகும்.

நீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'?

இயற்கை உரங்கள் மூலம் நாற்று உற்பத்தி செய்தால், தரமான நாற்றுகள் கிடைக்கும். குழித்தட்டு நாற்றுகளை நிழல் வலை அமைத்துத்தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது அவசியமல்ல. தோட்டத்தில் உள்ள மர நிழலிலும் வளர்க்கலாம். ஏக்கருக்கு சுமார் 32 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். ஒரு செடியில் இருந்து, சுமார் 500 கிராம் வரை விளைச்சல் வந்துள்ளது. அதன்படி ஏக்கருக்கு 45 குவிண்டால் விளைச்சல் கிடைக்கும். நேரடி நடவு முறையில் சுமார் 25 டன் அளவுக்குத்தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.''  

தொடர்புக்கு, செல்போன்: 99440-33055.

''எங்கள் நிலத்தின் மண்வளத்தை ஆய்வு செய்தோம். கார, அமில நிலை 7.80 என்று சான்று அளித்துள்ளார்கள். மானாவாரி நிலமான இதில் எந்தெந்த மரங்களை சாகுபடி செய்யலாம்?''

-எஸ். முருகையன், திருச்சி.

காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மையத்தின் உழவியல் துறை உதவிப் பேராசிரியர் வேல்முருகன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'?

''மண் ஆய்வு அடிப் படையில் பார்த்தால், நிலம் ஓரளவுக்கு வளமாகத்தான் உள்ளது. மானாவாரி நிலம் என்பதால் வறட்சியைத் தாங்கி வளரும் பழ வகைப் பயிர்களைத் தேர்வு செய்வது அவசியம். மானாவாரி நிலங்களில் புளி சாகுபடி லாபகரமாக இருக்கும். உரிகம், பி.கே.எம்.-1 போன்ற ரகங்கள் வறட்சியைத் தாங்கி வளரும். வடகிழக்குப் பருவமழை தொடங்கும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கன்றுகளை நடவு செய்வது அவசியம். அப்போது கிடைக்கும் மழைநீரை வைத்தே கன்றுகள் பிழைத்துக் கொள்ளும். ஓர் ஆண்டுக்கு, செடிகளை ஆடு, மாடுகள் கடிக்காமல் பாதுகாக்க வேண்டும். 6-ம் ஆண்டு முதல் மரம் ஒன்றுக்கு 200 கிலோ புளி கிடைக்கும். சவுக்கு, குமிழ் போன்றவையும் மானாவாரியில் நன்றாக வளரும் தன்மை கொண்டவை.''

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371.

நீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'?