மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா?''

படங்கள்: பா.காளிமுத்து, வீ.சிவகுமார், பா.கார்த்திக், ர.சதானந்த்

 புறா பாண்டி

##~##

''வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களுக்கு தோல் நீக்க இயந்திரம் உள்ளதா?''

- எஸ். சுந்தரம், திருவண்ணாமலை.

கோயம்புத்தூரில் உள்ள மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் சி. பாலசுப்பிரமணியன் பதில் சொல்கிறார்.

''தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற தானியங்கள் அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால், தோல் நீக்குவதில் கூடுதல் நேரம் எடுக்கும். மேலும், இவ்வகை தானியங்களில் சுமார் 30 சதவிகிதம் உமி இருப்பதால், அப்படியே உணவில் சேர்த்துக் கொள்ள முடியாது. என்றாலும், குறைந்த விலையில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, சிறுதானியங்களை விட்டால் வேறு வழியில்லை. குறைந்த அளவு நீரைக்கொண்டு, நல்ல விளைச்சல் கொடுக்கக் கூடியவை சிறுதானியங்கள்தான், எதிர்காலத்தில் முக்கிய உணவுப்பயிராக மாறும். எனவேதான், எங்கள் மத்திய வேளாண் பொறியியல் மண்டல ஆராய்ச்சி நிறுவனம், சிறுதானியங்களை உடைத்து, உமி மற்றும் தவிடை முற்றிலுமாக அகற்றும் வகையில் 'சி.ஐ.ஏ.இ. மில்லட்’ (CIAE-Millet) என்ற இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இந்த இயந்திரத்தில் சிறுதானியங்களை முதல் முறை செலுத்தும் போதே (சிங்கிள் பாஸ்) உமி மற்றும் தவிடு ஆகியவை 95 சதவிகிதம் நீங்கிவிடும். ஒரு மணி நேரத்தில் 100 கிலோ தானியத்தை தோல் நீக்கம் செய்ய முடியும். 100 கிராம் அளவு தானியங்களைக்கூட இந்த இயந்திரத்தில் செலுத்தி தோல் நீக்க முடியும்.

நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள்,  கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா?''

இதைக் கையாள்வது எளிது என்பதால், ஆண்/பெண் இருவருமே சுலபமாகக் கையாளலாம். அதிக சப்தம் வராமலிருப்பதோடு, தூசு மற்றும் உமிகளினால் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க, சைக்லோன் பிரிப்பான் எனும் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டாரில் இயங்கும் இதற்கு, ஒரு முனை மின்சாரமே (சிங்கிள் பேஸ் கரன்ட்) போதுமானது. தற்போது, சிறுதானியங்களுக்கான தேவை அதிகமிருப்பதால், சிறிய நகரங்களில் இந்த இயந்திரத்தை வியாபார ரீதியாகக்கூட பயன்படுத்தலாம். இதன் விலை 60 ஆயிரம் ரூபாய்.''

தொடர்புக்கு, முதன்மை விஞ்ஞானி, மண்டல அலுவலகம், மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், கோயம்புத்தூர் 641003.

செல்போன்: 86810-17811.

''மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... என, நாள் பார்த்து விவசாயம் செய்வது மூடநம்பிக்கையா?''

- ஏ. கனகராஜ், கள்ளக்குறிச்சி.

நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள்,  கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா?''

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி நவநீதகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

''மேலை நாடுகளில் அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெறுவதற்கு முன்பே, நம் நாட்டில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் தூரத்தைத் துல்லியமாகக் கணக்கீடு செய்துள்ளனர். கோள்கள், நட்சத்திரங்களின் தாக்கம், பூமியில் உள்ள உயிரினங்கள் மீது பிரதிபலிக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் விவசாயம் மட்டுமே பிரதான தொழில். அதைச் சிறப்பாகச் செய்ய சில கணக்கீடுகள் செய்துள்ளனர். அவற்றில் ஒரு பகுதிதான் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் போன்றவை. இன்றளவும் இந்த நாட்கள், தினசரி நாட்காட்டி மற்றும் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படுகின்றன. இதைப் பயன்படுத்தும் நுட்பம் தெரியாமல் போனதால், மூட நம்பிக்கை என்று மேலோட்டமாகச் சொல்லி ஒதுக்கி விடுகிறோம்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். சந்திரனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தூரம் அதிகரிக்கும் நாட்கள் மேல்நோக்கு நாட்கள் என்றும்... தூரம் குறையும் நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் என்றும் கணக்கிடப்படுகின்றன. கீழ்நோக்கு நாள், வாழை, கருணை போன்ற கிழங்கு வகைகளை விதைக்கவும், செடிகளை பதியன் போடவும் ஏற்றது. இந்த நாள் கரும்பு அறுவடை செய்யவும் ஏற்ற நாளாகும். மேல்நோக்கு நாட்களில் பூமியில் உள்ள தாவரங்களில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும். பூமியிலும் ஈரப்பதம் குறையும். அந்த நாட்களில் விதைகளை விதைப்பது, நாற்று நடுவது போன்ற பணிகளைச் செய்யலாம். ஈரப்பதம் குறைவாக இருப்பதால், புதிய வேர்கள் வேகமாக உருவாகும்.

முழுநிலவு தினமான பௌர்ணமி அன்று காய்கறி, பழங்களை அறுவடை செய்தால், விரைவில் கெட்டுப் போகாது. சுவையும் கூடுதலாக இருக்கும். பௌர்ணமி தினத்தில் அனைத்துப் பயிர்களையும் விதைக்கலாம். மற்ற நாட்களில் விதைத்த பயிர்களைவிட, பௌர்ணமியில் விதைத்த பயிர்கள் வேகமாக வளரும். அமாவாசை அன்று பூமியில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அப்போது, தானியங்களை அறுவடை செய்யலாம். ஈரப்பதம் குறைவாக இருப்பதால், அந்த தானியத்தில் பூச்சிகள் அண்டாது.

இப்போதும், கேரளாவில் அமாவாசை அன்றுதான், விதைகளைக் காய வைப்பது, மரங்களை வெட்டுவது போன்ற பணிகளை பரவலாகச் செய்கிறார்கள். மரங்களில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், செல் அரிக்காது. உளுத்துப் போகாது. நீண்ட காலத்துக்கு அந்த மரத்தைப் பயன்படுத்த முடியும். நம் மண்ணில் கண்டறிந்து பயன்பாட்டில் இருக்கும் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் தொழில்நுட்பம்தான், வெளிநாடுகளில், 'உயிராற்றல் விவசாயம்’ என்கிற பெயரில் தற்போது உலா வருகிறது. நமது நாட்காட்டி, பஞ்சாங்கத்தில் உள்ள நாட்களைப் பின்பற்றி விவசாயம் செய்தாலே 95 சதவிகிதம் நல்ல பலன் கிடைக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 94878-50277.

நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள்,  கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா?''

''கொசுக்களை விரட்ட நொச்சிச் செடிகளை வளர்க்கலாமா... வேறு ஏதேனும் எளிய வழிகள் உள்ளனவா?''

-எம். சுஜாதா, மாங்காடு.

கொசு விரட்டிகள் பற்றி ஆய்வு செய்து வரும் சென்னையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் பதில் சொல்கிறார்.

''கொசுக்களை விரட்ட, பலவிதமான ஆய்வுகளைச் செய்து பார்த்துள்ளேன். என்னுடைய அனுபவத்தில் நொச்சிச் செடியை வளர்ப்பதால் மட்டும் கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியாது. அதன் தழைகளை வைத்து, புகை மூட்டம் போடும்போது மட்டுமே கொசுக்கள் விரட்டப்படுகின்றன. வேப்பிலை, எருக்கன் இலை, துளசி போன்ற கசப்புச் சுவையுடைய இலைகளை புகை போட்டாலும் கொசுக்கள் வராது.

நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள்,  கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா?''

கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கொசு விரட்டிகளால் உடல்நலம்தான் பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி என்ற அளவில் கலந்து, உடலில் பூசிக்கொள்ளலாம். வேப்பெண்ணைய் 10%, ஐசோ ஃபுரோபில் ஆல்கஹால் (Isopropyl alcohol) 90% என்ற அளவில் கலந்து, அறை முழுக்க தெளித்து விடலாம். ஐசோ ஃபுரோபில் ஆல்கஹால் என்பது ரசாயன பொருள்தான். இதனால், பாதிப்பு ஏற்படாது என்று சொன்னாலும், எச்சரிக்கையாகவே கையாள வேண்டும். கடைகளில் கிடைக்கும் கொசுவிரட்டி ஹீட்டரில், மாத்திரை வைக்கும் பகுதியில் கற்பூரத்தை வைத்தாலும், கொசுக்கள் வராது. தற்போது கிடைக்கும் கற்பூரங்களிலும் பெரும்பாலும் ரசாயனம் கலக்கப்படுகிறது என்பதை மனதில் கொள்ளவும்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 044-23660675.

நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள்,  கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா?''