மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள்!

புறா பாண்டி படம்: பா.காளிமுத்து

''பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். பால் பண்ணைத் தொழில் சம்பந்தமாகப் பயிற்சி பெற விரும்புகிறேன். யாரைத் தொடர்பு கொள்வது?''

எஸ்.பி. பாலமுருகன், கரூர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தொலைநிலைக் கல்வி இயக் ககத்தின் இயக்குநர் முனைவர் தே. தியாகராஜன் பதில் சொல்கிறார்.

''தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மூலம், 11 சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள், 15 செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், 22 அஞ்சல் வழிச் சான்றிதழ் பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இந்தப் பயிற்சித் திட்டங்களுக்கான சேர்க்கை, ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது. பயிற்சித் திட்டங்களில் சேர, வயது வரம்பு கிடையாது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பயிற்சியில் சேரலாம். இவை அனைத்தும் கட்டணப் பயிற்சிகள்.

நீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள்!

பால் பண்னை சம்பந்தமாக கால்நடைப் பண்ணை மேலாளர், பால் பண்ணை உதவியாளர், பால் பதனநிலைய உதவியாளர், பால் மற்றும் பால் பொருட்கள் தரக் கட்டுப்பாடு உதவியாளர் என நான்கு செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு பயிற்சிக்கும் அதற்கான கல்வித் தகுதியும் கால அளவும் உள்ளது. பால் பண்ணை உதவியாளர் பயிற்சிக்கு தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. பால் பதனநிலைய உதவியாளர், பால் மற்றும் பால் பொருட்கள் தரக்கட்டுப்பாடு உதவியாளர் பயிற்சிக்கு 10-ம் வகுப்புத் தேர்ச்சியும், கால்நடைப் பண்ணை மேலாளர் பயிற்சி பெற 12-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பால் பண்ணை உதவியாளர், பால் மற்றும் பால் பொருட்கள் தரக்கட்டுப்பாடு உதவியாளர் பயிற்சிகளுக்கு ஒரு மாத காலமும், பால் பதனநிலைய உதவியாளர் பயிற்சி ஒன்றரை மாத காலமும், கால்நடைப் பண்ணை மேலாளர் பயிற்சி 3

நீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள்!

மாத காலமும் நடத்தப்பட்டு வருகிறது.

இவைத் தவிர, பால் பண்ணைத் தொழில் சார்ந்த சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகளாக கறவை மாட்டுப் பண்ணையம், உறைமோர் மூலம் பால் பொருட்கள் தயாரித்தல் பயிற்சிகளும் உண்டு. இதில் கறவை மாட்டுப் பண்ணையப் பயிற்சி பெற தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. உறைமோர் மூலம் பால் பொருட்கள் தயாரித்தல் பயிற்சியில் சேர, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த சுயவேலைவாய்ப்புப் பயிற்சி ஒரு மாத காலம் நடத்தப்படுகிறது.

பயிற்சிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழ்களைக் கொண்டு புதிதாகத் தொழில் தொடங்கவோ... அல்லது ஏற்கெனவே செய்துவரும் தொழிலை விரிவுப்படுத்தவோ வங்கிக் கடன் பெற முடியும்.''

தொடர்புக்கு, தொலைநிலைக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை-51 தொலைபேசி: 044-25554411, செல்போன்: 98841-36148.

''எங்கள் தோட்டத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தோட்ட வீட்டிலும்கூட பாம்புகள் அடிக்கடி புகுந்துவிடுகின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லுங்கள்?''

ஆர். கலா, திருப்பத்தூர்.

பாம்புகள் பற்றிய விழிப்பு உணர்வுப் பயிற்சி கொடுத்துவரும் மதுரையைச் சேர்ந்த மணிமேகலை பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள்!

''பாம்பு உங்கள் தோட்டத்தில் உள்ளது என்றால், உங்கள் விவசாயம் இயற்கை விவசாயம் என்று அர்த்தம். காரணம், அதிகமான பூச்சிக்கொல்லி விஷம் தெளிக்கும் தோட்டங் களுக்கு பாம்புகள் செல்வது குறைவு. பாம்புகளைப் பார்த்தவுடன், எவ்வளவு வீரமான ஆளாக இருந்தாலும் பயந்து நடுங்குவது இயற்கை. உண்மையில் எல்லா பாம்புகளும் விஷத்தன்மை கொண்டவை அல்ல. தமிழகத்தில் மொத்தம் 65 வகையான பாம்புகள் இருந்தாலும் அதில் ஐந்து வகையான பாம்புகளுக்கு மட்டும்தான் விஷம் இருக்கு. பாம்புகள் தங்களுக்கான இரையை வீழ்த்துவதற்கு மட்டுமே விஷத்தைப் பயன்படுத்தும். அதனால் விஷத்தை ஒருபோதும் அவை வீணடிக்க விரும்புவதில்லை. நல்ல பாம்பு, பெயருக்கேற்றபடி உண்மையிலேயே நல்ல பாம்புதான். நான் கடித்தால் விஷம் என்று நம்மை எச்சரிப்பதற்காகவே அவை படமெடுக்கின்றன. இதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் பாம்புகளை கண்மூடித்தனமாக அடித்துக் கொல்கிறார்கள். என்றாலும் எச்சரிக்கையாக நடமாட வேண்டியது நம் பொறுப்பு.

ஒரு கட்டடத்துக்குள் பாம்பு புகுந்துவிட்டால், நாம் எதுவும் செய்யாதவரை அதிகபட்சம் பத்து மணிநேரம் வரை அதே இடத்திலேயே இருக்கும். பாம்புகளின் நடமாட்டத்தைத் தவிர்க்க விரும்பினால், தோட்டத்தைச் சுற்றி நான்கு மூலையிலும், இரண்டு கிலோ சின்னவெங்காயத்தை வெட்டி வைக்கவும். தோட்டத்தில் உள்ள வீட்டைச் சுற்றிலும் கூட சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போடலாம். சின்னவெங்காயத்தில் இருந்து வெளியாகும் வாசனை, பாம்புகளுக்குப் பிடிக்காது. எனவே, அந்த இடத்துக்கு வராது. 'ஆகாச கருடன்’ என்ற மூலிகைக் கிழங்கை வீட்டிலும், பண்ணைகளிலும் கட்டித் தொங்கவிட்டால், பாம்புகள் அந்த பகுதிக்கு வராது.''

தொடர்புக்கு, செல்போன்: 96880-71822

நீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள்!