மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா?

படங்கள்: சொ. பாலசுப்பிரமணியன், எஸ். சாய்தர்மராஜ்

 புறா பாண்டி

 ''என்னிடம் கலப்பினப் பசு ஒன்று உள்ளது. இதை, கோமாரி நோய் தாக்கி குணமாகிவிட்டது. ஆனால், உடலில் உள்ள முடிகள் தூக்கிக் கொண்டுள்ளன. சினைப்பிடிக்கவும் இல்லை. என்ன காரணம்?''

த. தனபால், திருவெறும்பூர்

தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மரபுசார் மூலிகைவழி கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். புண்ணியமூர்த்தி.

''கோமாரி நோய் தாக்கிய கால்நடைகளுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருக்கும். நோய் தாக்கி மீண்டுள்ள மாடுகள் மீது தனிகவனம் செலுத்த வேண்டும். மனிதர்களுக்கு நோய் ஏற்பட்டு குணமான பிறகு, நல்ல உணவு வகைகளைக் கொடுத்து, உடலைத் தேற்றுவது போல... கால்நடைகளுக்கும் தீவனத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதுவும் கோமாரி தாக்கி உயிர் பிழைத்துள்ளது என்றால், இயற்கைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா?

தற்போது, வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதால், இன்னும் மூன்று மாதங்களுக்கு பசும்புல் தாராளமாக கிடைக்கும். தினமும், 15 கிலோ பசுந்தீவனம், 15 கிலோ வைக்கோல், நிலக்கடலைக் கொடி... போன்ற உலர் தீவனத்தையும் கொடுக்க வேண்டும். வாரம் ஒரு முறை சோற்றுக் கற்றாழையை மடலுடன் உள்ளுக்குக் கொடுக்கலாம். நான்கு கைப்பிடி அளவு பிரண்டை அல்லது இதே அளவு முருங்கைக் கீரையை 100 கிராம் வெல்லம் சேர்த்து, நன்றாக அரைத்து உள்ளுக்குக் கொடுக்கலாம். ஒரு நாள் முருங்கை, மறுநாள் பிரண்டை என மாற்றி, மாற்றிக் கொடுக்க வேண்டும். தினமும் இரண்டுவேளை தீவனம் கொடுக்கும்போது, சாப்பாட்டு உப்பு ஒரு கைப்பிடி அளவுக்குக் கலந்து கொடுக்க வேண்டும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தயாரித்து வழங்கும், தாது உப்புக் கலவையை நாள் ஒன்றுக்கு 20 கிராம் என்ற அளவிலும் கொடுக்கலாம். இவற்றையெல்லாம் சரியாக செய்துவந்தால்... அடுத்த மூன்று மாதத்தில் பசுவின் உடல் தேறி பளபளப்பாக மாறிவிடும். அதற்கு பிறகு சினைப் பருவத்துக்கும் வந்துவிடும்.''

தொடர்புக்கு, மரபுசார் மூலிகைவழி கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்.

தொலைபேசி: 04362 204009.
செல்போன்: 98424-55833.

''பண்ணைக் குட்டையில் மீன் வளர்த்து வருகிறோம். மீன்களுக்கு அரிசிச் சோற்றை உணவாகக் கொடுக்கலாமா?''

வி. சுப்பிரமணியம், கோவிந்தபுரம்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின், நாகப்பட்டினம், மீன்வளத் தொழில்நுட்ப நிலையத் தின் உதவிப் பேராசிரியர் பி. கணேசன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா?
நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா?

''மீன் வளர்ப்பில் தீவனச் செலவைக் குறைக்க அரிசிச் சோற்றைத் தராளமாகக் கொடுக்கலாம். ஆனால், அரிசிச் சோறு நன்றாக வெந்து இருக்க வேண்டும். மீன்களுக்கு வெறும்சோறு மட்டும் கொடுத்தால், வளர்ச்சி சரியாக இருக்காது. காரணம், அரிசிச் சோற்றில் கார்போ- ஹைட்ரேட் என்ற சத்து மட்டும்தான் அதிகமாக இருக்கும். ஆகையால், மீன்களுக்கு சரிவிகிதமாக சத்துக்கள் உள்ள உணவுகளைக் கொடுக்கவேண்டும். உதாரணத்துக்கு, குளத்தில் மொத்தம் 200 கிலோ எடையுள்ள மீன்கள் இருந்தால்... தினமும் மூன்று கிலோ அரிசிச் சோறு, மூன்று கிலோ கடலைப் பிண்ணாக்கு மற்றும் அரிசித் தவிடு கலந்து கொடுக்க வேண்டும். பிண்ணாக்கை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள்  காலையில் குளத்தில் ஊற்றிவிட வேண்டும். பிண்ணாக்கு, அரிசித் தவிடு... போன்றவை மீன்களின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்களைக் கொடுக்கும். நெல் அரைக்கும்போது நொய் அரிசி கிடைக்கும். இதைச் சோறாகச் சமைத்து மீன்களுக்குக் கொடுக்கலாம். இதுபோன்ற உணவு வகைகளை உண்டு வளரும்போது, மீன்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும் உருவாகும். நல்ல எடையுடன் வளர்ந்து லாபத்தையும் கொடுக்கும்.''

 ''ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான உணவு மற்றும் விவசாய அமைப்பானது விவசாயம், கால்நடை வளர்ப்புப் பற்றிய எளிய தொழில்நுட்பங்களை வெளியிட்டு வருவதாகக் கேள்விப்பட்டேன். அதைப்பற்றி கூறவும்?''

எம். சுந்தரி, வேலூர்.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு, (FAO-Food and Agriculture Organization) இத்தாலி நாட்டில் இருந்து செயல்படுகிறது. இதன் தகவல் தொடர்பு அலுவலர் கட்யா மேலோனி (Katia Meloni) மின்னஞ்சல் வழியாக, வழங்கிய பதில்.

நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா?

''இந்த அமைப்பு உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் உணவளிக்கும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ச்சிக்காகவே இயங்கி வருகிறது. விவசாயம், கால்நடை, மீன்வளம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்து வருகிறோம். எளிமையான, செலவு குறைந்த நுட்பங்களை பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் பெற்று, உலகம் முழுக்க பரவலாக்கி வருகிறோம். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு போன்றவை நிலவியல் அமைப்பில் வேறுபடும். எனவே, அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ற தொழில்நுட்ப ஆலோசனைகளை வல்லுநர்கள் மூலம் பரிந்துரை செய்கிறோம்.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட வளரும் நாடுகளில் உள்ள கால்நடை வளர்ப்புப் பற்றி 2010-ம் ஆண்டு ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தோம். வளரும் நாடுகளில் கால்நடை வளர்ப்பில் ஊட்டச்சத்துக்கள் வழங்குவதில் வெற்றிபெற்ற, தோல்வி அடைந்த தொழில்நுட்பங்கள் (Success and failures with animal nutrition practices and technologies in developing countries) என்பதுதான் இதன் தலைப்பு.

இதில் இந்திய கால்நடை விஞ்ஞானிகளும் தொழில்நுட்பத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இதில் அசோலா வளர்ப்பு, மல்பெரி இலைகளை தீவனமாகப் பயன்படுத்து வது, ஊடுபயிராக பயறு வகைத் தீவனங்களைச் சாகுபடி செய்வது, குறைந்த செலவில் சைலேஜ் தொழில் நுட்பம், மரப்பயிர்களில் தீவன சாகுபடி உட்பட 28 தொழில்நுட்பங்கள் இடம் பெற்றிருந்தன. இந்தத் தொழில்நுட்பத் தகவல்களை அனைவரும் பயன்படுத்தும் வகையில் மின்புத்தகமாக வெளியிட்டுள் ளோம். எங்களின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இணையதளத்தில் இதை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.''

இணைய முகவரி: http://www.fao.org/docrep/014/i2270e/i2270e00.pdf

நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா?