
அறிவிப்பு
மீன் வளர்ப்பு
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 27-ம் தேதி, ‘மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. காலை, மாலை தேநீர், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.
சுருள்பாசி வளர்ப்பு
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் டிசம்பர் 28-ம் தேதி ‘மாட்டுச் சாணத்தில் மதிப்புக் கூட்டல் பொருள்கள் தயாரித்தல்’, 29-ம் தேதி ‘சுருள் பாசி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.

மாடித்தோட்டம்
கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜனவரி 14-ம் தேதி ‘இயற்கை உரங்கள் தயாரித்தல்’, 28-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் சமையல் அறை கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணம் ரூ.150 (உணவு தவிர்த்து). முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.
நம்மாழ்வார் நினைவேந்தல்
கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் டிசம்பர் 30-ம் தேதி, மாலை 5 மணிக்கு நடைபெறும். ஏற்பாடு: செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம். தொடர்புக்கு, செல்போன்: 96266 77963, 94439 04817.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த தமிழ்நிலம் பண்ணையில் டிசம்பர்30-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும். சுல்தான் அகமது இஸ்மாயில், செந்தூர் பாரி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். ஏற்பாடு: இயற்கை வேளாண் உணவுக்காடுகளின் கூட்டமைப்பு.
தொடர்புக்கு, செல்போன்: 93400 47779