மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டோரா

அறிவிப்பு

இலவச பயிற்சி

பலாவுடன் ஓர் உலா

கடலூர் மாவட்டம், பத்திரக்கோட்டை விஜயா பயோ பார்மில் ‘பலாவுடன் ஓர் உலா’ நிகழ்ச்சி மே 29-ம் தேதி நடைபெற உள்ளது. பண்ருட்டி பலாப் பழத்தின் சிறப்புகளை அறிந்துகொள்ளல், மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தல், பலாப்பழ ரகங்களின் கண்காட்சி, விற்பனை மற்றும் ஆலோசனைகள் பகிர்ந்து கொள்ளப்படும். பலா ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் வேளாண்மை துணை இயக்குநர் (ஓய்வு) ஹரிதாஸ் தன் அனுபவங்களைப் பகிர உள்ளார். அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.

ஒருங்கிணைப்பு: தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம்.

தொடர்புக்கு, செல்போன்: 94430 74620, 88708 90109


கட்டணப் பயிற்சிகள்

மூலிகை முற்றம்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெற உள்ளது. உடல் நலன் காக்கும் மூலிகை மருத்துவம், மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல்... போன்றவற்றைக் குறித்துச் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். தங்குமிடம், பயிற்சி கையேடு, காலை, மாலை தேநீர், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.300 மட்டும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.

பலா
பலா

மண்புழு உரம் தயாரிப்பு

கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜூன் 11-ம் தேதி ‘மண்புழு உரம் மற்றும் மண்புழு உர நீர் தயாரிக்கும் தொழில்நுட்பம்’ பயிற்சிக் கட்டணம் ரூ.150 (உணவு தவிர்த்து). முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,

தொலைபேசி: 04652 246296.

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். உங்கள் பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் குறித்து, மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப்: 99400 22128 ஆகியவற்றுக்கு அனுப்பவும்.

- ஆசிரியர்