Published:Updated:

மாம்பூக்கள் கருகினால் பயப்படத் தேவையில்லை! இதைச் செய்தால் போதும்... மகசூலை பெருக்கலாம்!

மாம்பூக்கள் கருகுவது ஏன்?
News
மாம்பூக்கள் கருகுவது ஏன்? ( Pinterest )

ஒரு மா பூங்கொத்தின் நுனிக்கிளை எவ்வளவு காயின் எடையை தாங்க முடியுமோ, அதற்கு ஏற்றவாறுதான் அந்த கொத்தில் காய்களை நிறுத்தி வைக்கும். மீதமுள்ள இருபால் பூக்கள் காய்ந்து உதிர்ந்துவிடும். இதை நாம் தோட்டத்தின் சற்று தொலைவில் நின்று பார்த்தால் பூங்கொத்துக்கள் கருகியது போன்றே இருக்கும்.

Published:Updated:

மாம்பூக்கள் கருகினால் பயப்படத் தேவையில்லை! இதைச் செய்தால் போதும்... மகசூலை பெருக்கலாம்!

ஒரு மா பூங்கொத்தின் நுனிக்கிளை எவ்வளவு காயின் எடையை தாங்க முடியுமோ, அதற்கு ஏற்றவாறுதான் அந்த கொத்தில் காய்களை நிறுத்தி வைக்கும். மீதமுள்ள இருபால் பூக்கள் காய்ந்து உதிர்ந்துவிடும். இதை நாம் தோட்டத்தின் சற்று தொலைவில் நின்று பார்த்தால் பூங்கொத்துக்கள் கருகியது போன்றே இருக்கும்.

மாம்பூக்கள் கருகுவது ஏன்?
News
மாம்பூக்கள் கருகுவது ஏன்? ( Pinterest )

தற்போது மாம்பூக்கள் அதிகம் கருகுகிறது என்றும், அதற்கு காரணம் என்ன? என்றும் விவசாயிகள் சிலர் சந்தேகம் கேட்டிருந்தனர். இதற்கான பதிலை சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரனிடம் கேட்டோம்.

பேராசிரியர் முனைவர் செந்தூர் குமரன்
பேராசிரியர் முனைவர் செந்தூர் குமரன்

அவர், "முதலில் மாம்பூக்கள் கருகி தான் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் வெப்பநிலை 12-15 டிகிரிக்கு குறையும்போது, பிராஸ்ட் இன்ஜூரி (Frost injury) ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சென்ற வாரம் வரை, அதிகாலை வேளையில் பனிமூட்டமாக காணப்பட்ட மாந்தோப்புக்களில் இருந்த பூக்களுக்கு பனிக்கருகளால் ஏற்பட்ட பாதிப்புகளை பெரும்பாலான மா விவசாயிகள் உணர்ந்திருப்பர்.

இந்த பனிக்கருகல் பாதிப்பானது முதலில் பூக்களைத்தள்ளிய 'இமாம் பசந்த்' ரகங்களில் தமிழகம் முழுவதும் அறியப்பட்டது. ஆகவே விவசாயிகள் முதலில் பூக்கருகல் எதனால் ஏற்பட்டது என்பதை அறிய வேண்டும். பனியினாலா அல்லது சாறு உறிஞ்சும் தத்துப்பூசியினாலா அல்லது முதிர்ந்த ஆண் பூக்கள் வாடி வதங்கி கருகியது போல் தென்படுவதாலா? - என்பதை விவசாயிகள் அறிந்திருக்க வேண்டும். பிறகு அதை அறிவியல் புரிதலோடு அணுகும்போது, பூக்கள் கருகலிலிருந்தும் தப்பிக்கலாம்; மகசூலையும் பெருக்கலாம்.

மாமரம்
மாமரம்
DIXITH

ரகங்களைப் பொறுத்து ஒரு மா பூக்கள் கொத்தில் 1,000 முதல் 4,000 வரை பூக்கள் இருக்கும். இதில் 60-80% ஆண் பூக்களாகவும், 20%-40% இருபால் பூக்களாகவும் (அதாவது பெண் பூக்களாகவும்) இருக்கும். இதில் தமிழகத்தின் தட்ப வெப்ப நிலையில், பெரும்பாலான ரகங்களில் 10- 20% மட்டுமே காயாக மாறக்கூடிய இருபால் பூக்கள் இருக்கின்றன. இந்தப் பூக்கள்தான் காயாக மாறும்.

மீதமுள்ள 80% ஆண் பூக்கள் காயாக மாறாததால், அது கருகுவதற்குத் தேவையான மகரந்தத்தை வழங்கிவிட்டு உதிரத் தொடங்கும். அருகில் சென்று பார்த்தால் ஒரு பூங்கொத்திற்கு அந்த கொப்பின் தாங்கு சக்திக்கு தக்கவாறு கடுகு போன்றளவில் 5-8 மாங்காய் உருவாகியிருகும். ஒரு மா பூங்கொத்தின் நுனிக்கிளை எவ்வளவு காயின் எடையை தாங்க முடியுமோ, அதற்கு ஏற்றவாறுதான் அந்த கொத்தில் காய்களை நிறுத்தி வைக்கும். மீதமுள்ள இருபால் பூக்கள் காய்ந்து உதிர்ந்துவிடும். இதை நாம் தோட்டத்தின் சற்று தொலைவில் நின்று பார்த்தால் பூங்கொத்துக்கள் கருகியது போன்றே இருக்கும்.

மாம்பூக்கள்
மாம்பூக்கள்

மேலும், தத்துப் பூச்சிகள் மாம்பூக்களில் உள்ள சாறை உறிஞ்சிவிட்டு, பிசின் போன்ற ஒருவகையான திரவத்தை வெளியிடும். இந்த பூச்சிகள் பூக்களின் சாற்றை உறிஞ்சி விடுவதாலும் மகரந்தசேர்க்கை நடைபெறாமல் கூட 'மா பூக்களில்' கருகல் போன்று தென்படலாம். அதனால் கருகிய பூங்கொத்தில் இலைகளில் பிசின் போன்ற தேன் திரவம் ஏதாவது இருக்கிறதா? என்று சரிப்பார்த்து கொள்வது நல்லது. இதை கவனிக்காமல் விட்டு விட்டால், தேன் போன்ற திரவத்தில் 'கேப்னோடியம்' என்ற கருப்பு நிற பூஞ்சை வளர்ந்து இலை, பூங்கொத்து, காய் என அனைத்து இடங்களிலும் பரவி விடும். இதுவும் கருகியது போன்றே இருக்கும். ஆகவே விவசாயிகள் கருகலின் புரிதலை கவனமுடன் அணுகினால் நிறைவான மகசூலை எடுக்க முடியும்.

தத்துப்பூச்சியின் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் இஞ்சிப்பூண்டு கரைசல் அல்லது வேப்பங்கொட்டைச்சாறு தெளித்து பூங்கொத்துக்களை பாதுகாக்கலாம்.

மாம்பூக்கள் கருகினால் 
பயப்படத் தேவையில்லை! இதைச் செய்தால் போதும்... மகசூலை பெருக்கலாம்!
Pinterest

இருபால் பூக்கள் கொத்துக்கு 6-10 கடுகு காய்களை இறக்கியிருந்தால் தானாகவே இவையனைத்தும் காயாகிவிடும். மீதமுள்ள பூக்கள் கருகியதாக கருதிக்கொண்டு ஏதேனும் மருந்து தெளித்தால் உருவாக்கிய கடுகுக்காய்களையும் மரம் கீழே இறக்கிவிடும். மேலும் காய்கள் "மா-வடு" பருவத்தை தாண்டும் வரை தண்ணீர் விடக் கூடாது.

இதைத்தாண்டி பனியால் பூக்கள் கருகியிருந்தால் கவலை கொள்ளத்தேவையில்லை. மா மரத்தில் பெண்மைக்கான வளர்ச்சி ஊக்கிகள் (ஹார்மோன்கள்) உற்பத்தி ஜனவரி இரண்டாம் வாரத்திலிருந்து பிப்ரவரி மூன்றாம் வாரம் வரை தொடர்வதால் ஜனவரியில் முழுவதுமாக பனிக்கருகலால் பாதிக்கப்பட்ட மரங்களில் மீண்டும் பூக்கள் முழு நிலையை அடைந்து மகசூலும் கொடுக்கும். இக்காலங்களில் அறியாமல் தண்ணீர்கட்டுவதோ மழைபொழிவோ இருக்கக்கூடாது. அப்படி தண்ணீர் கட்டினாலோ, மழை பெய்ந்துவிட்டாலோ மா மரங்கள் பூக்களை இறக்கிவிடும்'' என்று ஆலோசனை வழங்கினார்.