ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

பசுமை பெண் துணைவேந்தர்

கீதாலட்சுமிக்கு விருது
பிரீமியம் ஸ்டோரி
News
கீதாலட்சுமிக்கு விருது

விருது

‘‘இனி வரும் காலம் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்குமானது; மிகப்பெரிய எதிர் காலம் காத்திருக்கிறது...’’ - அவள் விகடன் விருது மேடையில் ஒலித்த இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், பேராசிரியர் முனைவர் கீதாலட்சுமி. 26 ஆண்டுகள் பேராசிரியர் பணி அனுபவத்துடன், கோயம்புத்தூரில் அமைந் திருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர்; அகில இந்திய அளவில் வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் என்ற இரட்டைப் பெருமைகளுக்குச் சொந்தக்காரர் இவர்.

பல்வேறு துறைகளில் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களை மேடையேற்றி, விருது வழங்கி கௌரவித்து வருகிறது அவள் விகடன். 2021-ம் ஆண்டுக் கான அவள் விகடன் விருது வழங்கு விழா, கடந்த நவம்பர் 18-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அவள் விகடனின் 25-வது ஆண்டில், இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது கூடுதல் சிறப்பு.

மருத்துவம், சமூகச் சேவை, விவசாயம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட 17 பிரிவுகளில் விருது வழங்கப்பட்ட இந்த விழாவில், ‘பசுமைப் பெண்’ விருது பெற்றார் கீதாலட்சுமி. இவருக்கு விருது வழங்கி பெருமைப்படுத் தினார், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

‘பசுமைப் பெண்’ விருதுபெற்ற கீதாலட்சுமி யின் பூர்வீகம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளி யில் படித்து, பிறகு, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தார். தன்னுடைய குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார். ஆழியாறு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், 4 வருடங்கள் கழித்து அவர் படித்த கோவை, வேளாண் பல்கலைக்கழகத்திலேயே பணியில் அமர்ந்தார். வேளாண்மையில் நீண்ட அனுபவமும் நிபுணத்துவம் பெற்ற கீதாலட்சுமி, கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுக் கவனம் ஈர்த்து வருகிறார். பாரம்பர்ய விவசாய முறைகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பசுமைப் பெண் விருது வழங்கிப் பேசிய தவத்திருக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ‘‘எந்தப் பல்கலைக்கழகத்துக்கு மாணவியாகச் சைக்கிளில் சென்று படித்தாரோ, இன்று அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உயர்ந்திருப்பது போற்றுதற் குரியது. இயற்கை வேளாண்மையும், நவீன தொழில்நுட்பமும் சேர்ந்து இயங்குவதுதான் மனித சமுதாயத்துக்கு நல்லது. குன்றக்குடி ஆதீனமும் 50 ஏக்கர் பரப்பளவில் வேளாண் அறிவியல் நிலையத்தை நிர்மாணித்துக் கடந்த 25 ஆண்டுகளாக, சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மையை ஊக்குவித்து வருகிறது.

கீதாலட்சுமிக்கு விருது வழங்கும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
கீதாலட்சுமிக்கு விருது வழங்கும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

ஒரு கோப்பை தேநீரின் விலையை அந்தக் கடையை நடத்துபவரால் நிர்ணயிக்க முடிகிறது. ஆனால், தான் உற்பத்தி செய்கிற பொருள் களுக்கு விவசாயிகளால் விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயிகள் சந்திக்கின்ற மிகப்பெரிய சவால் இது.

தாங்கள் உற்பத்தி செய்கிற பொருள்களுக்கு விவசாயிகள் என்றைக்கு விலை நிர்ணயம் செய்கிறார் களோ, அன்றைக் குத்தான் விவசாயிகளின் பொருளா தாரம் வளரும். அந்த நிலையை நோக்கி விவசாயிகள் நகர் வதற்குக் கீதாலட்சுமி முயற்சி செய் கிறார் என்பது பாராட்டுக் குரியது. இனி, விவசாயிகளின் வாழ்க்கை வளர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டவையாக இருக்கட்டும்’’ என்று வாழ்த்தினார்.

விருது பெற்ற கீதாலட்சுமி பேசியபோது, ‘‘சாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கு அப்பாற் பட்டு மனித நேயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அடிகளாரின் கைகளால் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’’ என நெகிழ்ந்தவர், ‘‘முன்பெல்லாம் விவசாயிகளுக்குப் பெண் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு நிலைமை மாறி வருகிறது. விவசாயத் தையும் மற்ற துறைகளுக்கு நிகராகச் சமூகம் மதிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது பெருகி வரும் மக்கள்தொகை காரணமாக விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.

கொரோனா, இயற்கை விவசாயத்தின் முக்கியத் துவத்தையும், விவசாயிகளின் மேன்மையையும் உலகுக்கு உணர்த்திவிட்டது. அதனால்தான் மென்பொருள் பொறியாளர்களில் பலர், விவசாயிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். 86 சதவிகித விவசாயிகள் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்தான். இவர்களை லாபகரமான தொழிலதிபர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை எங்கள் பல்கலைக்கழகம் எடுத்து வருகிறது.

பல்கலைக்கழகம் 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ள இத்தருணத்தில், வெள்ளி விழாக் கொண்டாடும் அவள் விகடன் எனக்கு இந்த விருதை வழங்கியிருப்பது மிகுந்த மன நிறைவை அளிக்கிறது’’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.