Published:Updated:

``உழவுக்கு உயிரூட்டிய 23 பேருக்கு விருது!" தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் கெளரவிப்பு

ஊடகவியலாளர் ஜல்லிபட்டி கோ.பழனிசாமிக்கு விருது
News
ஊடகவியலாளர் ஜல்லிபட்டி கோ.பழனிசாமிக்கு விருது

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் நடைபெற்ற தென்னை உழவர்கள் மாநாட்டில் வேளாண் தொழிலுக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்திய ஊடகவியலாளர் ஜல்லிபட்டி கோ.பழனிசாமி, இந்திய உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லாகவுண்டர் உள்ளிட்ட 23 பேருக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில், திருப்பூரை அடுத்த சுல்தான்பேட்டையில் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில், மத்திய அரசு கொப்பரை கிலோவுக்கு ரூ.150 வழங்க வேண்டும். கொப்பரை கொள்முதலை ஏக்கருக்கு 285 கிலோவில் இருந்து 500 கிலோவாக உயர்த்த வேண்டும். கேரள மாநிலத்தைப்போல், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக உரித்த பச்சைத் தேங்காயை டன் ரூ.40,000-க்கு தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

மாநாடு
மாநாடு

தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்க மற்றும் விற்பனை செய்ய அனுமதிப்பதுடன், நீரா இறக்கி விற்பனையை குடிசைத் தொழிலாகத் தமிழக அரசு வகைப்பாடு செய்ய வேண்டும். நியாய விலைக் கடைகளில் பாமாயில் விற்பனை செய்யப் படுவதற்குப் பதிலாகத் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதுடன், பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் போன்ற 6 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

விருது
விருது

இந்த மாநாட்டின் நிகழ்வாக வேளாண் தொழிலுக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்திய 23 பேருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் டாக்டர் சி.தங்கராஜ், இந்திய உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லாகவுண்டர், காவிரி-வைகையாறு- குண்டாறு-கிருதுமால்-விவசாயிகள் நீர்பாசன கூட்டமைப்பின் தலைவர் மிசா.சா.மாரிமுத்துக்கு, இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சுந்தர.விமல்நாதன் ஆகியோருக்கு வேளாண் மாமணி விருது வழங்கப்பட்டது.

நல்லாகவுண்டருக்கு விருது
நல்லாகவுண்டருக்கு விருது
  • வேளாண் செய்திச் செம்மல் விருது ஊடகவியலாளர் ஜல்லிபட்டி கோ.பழனிசாமிக்கும்,

  • வேளாண் வணிகச் செம்மல் விருது சிறுவாணி உழவர் உற்பத்தி நிறுவனத்துக்கும்,

  • வேளாண் இலக்கியச் செம்மல் விருது எழுத்தாளர் பு.சக்திவேல், கொங்கு மண்டல ஆய்வு மையத் தலைவர் இரா.ரவிக்குமாருக்கும்,

விருது
விருது
  • வினோபா பவே விருது மா.கிருஷ்ணவேணி, ரா.காளிதாஸ், ஆசிரியர் மு.சக்திவேலுக்கும்,

  • வேளாண் போராளி விருது ரா.செந்தில்குமார், பா.விஜயகுமாருக்கும்,

  • உழவன் நண்பன் விருது வாகை வரைகலையகம், க.செளந்தர், சுதா பன்னீர் செல்வம், சேரன் அச்சகத்துக்கும்,

  • தென்னை வேளாண் செம்மல் விருது ஆனைமலை தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவன நிர்வாகி தனபால் முத்துசாமி, விவசாயி ஆர்.ஏ.சக்திவேல், இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ந.பெரியசாமி, தமிழ்நாடு மாநில தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு ஒருங்கிணைப்பாளர் ப.கா.பத்மநாபன் மற்றும் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டது.