
பட்ஜெட்டுக்கேத்தபடி என்னால் 10,000 ரூபாய்லேருந்து ஒரு லட்ச ரூபாய் வரை பால்கனி தோட்டம் அமைக்க முடியும்
“எனக்கு தோட்டம் ரொம்ப பிடிக்கும். ஆனா, என்னை மாதிரி அப்பார்ட்மென்ட்வாசிகளுக்கு பால்கனியைவிட்டா தோட்டம் போட ஏது இடம்... துளசி, கற்பூரவல்லி மாதிரி சில மூலிகைச் செடிகளோட வாஸ்து செடிகள், தண்ணீரும் வெயிலும் அதிகம் தேவைப்படாத ஆக்ஸிஜன் வெளியிடுற செடிகள், கூடவே ஊஞ்சல்னு என் வீட்டு பால்கனியில நானே குட்டியா தோட்டம் போட்டேன். அதைப் பார்த்துட்டு என் தங்கை அவங்க வீட்டு பால்கனியில தோட்டம் போட்டுக் கொடுக்கச் சொன்னாங்க. அப்படியே ஃபிரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் வீடுகள்லயும் பால்கனி தோட்டம் போட்டுக் கொடுக்க ஆரம்பிச்சேன். கார்டனிங்குக்காக ஒரு கடையும் ஆரம்பிச்சுட்டேன்” என்கிற கார்த்திகேயினி, நடிகை தேவதர்ஷினியின் உடன்பிறந்த சகோதரி. சென்னை அண்ணா நகரில் உள்ள இவரது கடையில், கண்ணாடி, பீங்கான், பிளாஸ்டிக் என கலர் கலர் குட்டி கிண்ணங்களில் விதவிதமான செடிகள் சிரிக்கின்றன.
“கொரோனாவுக்குப் பிறகு கார்டனிங் ஆர்வம் அதிக மாயிடுச்சு. மக்களோட ஆர்வம், என்னோட ரசனை ரெண்டையும் சேர்த்து பிசினஸாக் கிட்டேன். சிலர் வீட்டு பால்கனி யில் நல்லா வெயிலடிக்கும். சிலர் வீட்டு பால்கனி முழுக்க பக்கத்து பில்டிங்கோட நிழல் விழுந்திருக் கும். ஸோ, அதுக்கேத்தபடி நல்லா வெயில் தாங்குற செடிகள், கொஞ்சம் வெயில் கிடைச்சாலும் வளர்ற செடிகள்னு வைப்பேன். கொஞ்சமா தண்ணீரும், வாரத் துக்கு ஒருநாள் கவனமும் தேவைப் படுற செடிகளைத்தான் என் னோட கஸ்டமர்களுக்கு பரிந் துரைப்பேன்’’ என்கிறார்.
“ஒரு சில செடிகள் ரொம்ப அழகா இருக்கும். ஆனா, கொஞ்சம் விஷத்தன்மையோட இருக்கும். அப்படிப்பட்ட செடி களைக் குழந்தைகளும், செல்லப் பிராணிகளும் உள்ள வீடுகளுக்குப் பரிந்துரைக்க மாட்டேன். என் கடைக்கு வந்து வாங்குறவங்க கிட்டேயும் இதைப்பத்தி சொல் லிடுவேன். பட்ஜெட்டுக்கேத்தபடி என்னால் 10,000 ரூபாய்லேருந்து ஒரு லட்ச ரூபாய் வரை பால்கனி தோட்டம் அமைக்க முடியும்’’ என்றவருக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.