Published:Updated:

Doubt of Common Man: அக்மார்க் தரக் குறியீடு எவ்வகையான பொருட்களுக்கு வழங்கப்படுகிறது?

க்மார்க் தரக் குறியீடு
News
க்மார்க் தரக் குறியீடு

அக்மார்க் தரக் குறியீடு எவ்வகையான பொருட்களுக்கு வழங்கப்படுகிறது? என்ற கேள்விக்கான பதில்கள்

Published:Updated:

Doubt of Common Man: அக்மார்க் தரக் குறியீடு எவ்வகையான பொருட்களுக்கு வழங்கப்படுகிறது?

அக்மார்க் தரக் குறியீடு எவ்வகையான பொருட்களுக்கு வழங்கப்படுகிறது? என்ற கேள்விக்கான பதில்கள்

க்மார்க் தரக் குறியீடு
News
க்மார்க் தரக் குறியீடு
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில், அக்மார்க் தரக் குறியீடு எவ்வகையான பொருட்களுக்கு வழங்கப்படுகிறது? என்ற கேள்விகளை வாசகர்கள் கேட்டிருந்தனர் அதற்கான முழுமையான பதிலைப் பார்ப்போம்.

அக்மார்க் என்பது இந்திய அரசின் வேளாண் பொருட்களுக்கான சான்றளிப்புக் குறியீடாகும். அக்மார்க் என்பது வேளாண்மை (Agriculture) மற்றும் குறியீடு (Mark) ஆகியவை சேர்ந்த சொல்லாகும். வேளாண் பொருட்கள் (தரம் மற்றும் குறியீடு) சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவில் இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. வேளாண் பொருட்களுக்கு (தரம் மற்றும் குறியீடு) சட்டம் 1937 மற்றும் (திருத்தப்பட்ட சட்டம் 1986) மூலம் இந்தியாவில்  நடைமுறைப்படுத்தப்பட்டது. 

Agriculture
Agriculture

தற்போதைய அக்மார்க் தரநிலைகள் பல்வேறு பருப்பு வகைகள், தானியங்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், காய்கறி எண்ணெய்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் சேமியா போன்ற பகுதிப் பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் 224 வெவ்வேறு பொருட்களுக்கான தர வழிகாட்டுதல்களை உள்ளடக்கியது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சந்தைப்படுத்துதல் மற்றும் ஆய்வு இயக்குநரகம் (Directorate of Marketing and Inspection) வேளாண் பொருட்களை ஆராய்ந்து தர நிலையை உறுதி செய்கிறது. வேளாண் பொருட்கள் என்பதில் தானியங்கள், பயறு வகைகள், அத்தியாவசிய எண்ணெய்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சேமியா போன்ற அரை பதப்படுத்தப்பட்ட பொருட்களும் அடங்கும்.

agriculture - pixabay
agriculture - pixabay

அக்மார்க் ஆய்வகங்கள்

அக்மார்க் சான்றிதழ் வழங்கும் திட்டம், இந்தியாவில் 11 மண்டல அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இயக்குநரகத்தின் 27 துணை அலுவலகங்கள், மத்திய அக்மார்க் ஆய்வகம் (CAL) நாக்பூர் மற்றும் மும்பை, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, கான்பூர், கொச்சி, குண்டூர், அமிர்தசர், ஜெய்பூர், ராஜ்கோட், போபால் உள்ளிட்ட 11 ஒருங்கிணைந்த நகரங்களில் அக்மார்க் ஆய்வகங்கள் உள்ளன.

இவற்றுள் நாக்பூர், மும்பை, சென்னை, கொச்சி, கொல்கத்தா, புதுடெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் கான்பூர் இடங்களிலுள்ள எட்டு ஆய்வகங்கள், தேசிய அங்கீகார வாரியத்திடம் சோதனை மற்றும் அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான ‘பன்னாட்டுத் தரநிலைச் (ISO 17025) சான்றினைப் பெற்றிருக்கின்றன. நாடு முழுவதும் அமைந்துள்ள மாநில அரசுகளுக்குச் சொந்தமான அக்மார்க் ஆய்வகங்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இவைகளுடன் ஒவ்வொரு வட்டார ஆய்வகங்களும், அந்தந்த வட்டாரத்தில் சிறப்பு வாய்ந்த பொருட்களுக்காகச் சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

பொருட்கள் மற்றும் சோதனைகள்

இந்த ஆய்வகங்களில் இரசாயனப் பகுப்பாய்வு, நுண்ணுயிரி வழிப் பகுப்பாய்வு, பூச்சிக்கொல்லி மீதம் மற்றும் கரும்பூசண நச்சு வகை பகுப்பாய்வு, வாசனை பொருட்கள், நெய், வெண்ணெய், தாவர எண்ணெய், கடுகு எண்ணெய், தேன், உணவு தானியங்கள் (கோதுமை), கோதுமை பொருட்கள் (ஆட்டா, சுஜா மற்றும் மைதா), பயறு மாவு, சோயா மொச்சை, கொண்டைக் கடலை, இஞ்சி, பிண்ணாக்கு, அத்தியாவசிய எண்ணெய், எண்ணெய் மற்றும் கொழுப்பு, விலங்கு பொதியுறை, இறைச்சி மற்றும் உணவுப் பொருட்களில் மேற்கொள்ளப்படுகிறது.

விவசாயம்
விவசாயம்

விலங்கின் தோல், ஆட்டு முடி, முட்கள், கம்பளி, புலால் (குளிர்ந்த மற்றும் உறைந்த), கைளால் பொறுக்கித் தேர்ந்தெடுக்கப்பட்ட வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு, அம்பாடி விதைகள், கடுகு விதைகள், நிலக்கடலை, அக்ரூட் பருப்பு, தாவர எண்ணெய் புண்ணாக்கு, நெய், வனஸ்பதி, பாலாடைக்கட்டி, வெண்ணெய், அத்தியாவசிய எண்ணெய், தாவர எண்ணெய், புகையிலை, கரும்பு, வெல்லம் (பனை வெல்லம்), பால், பாக்கு, நெல்லி, பீடி சுற்றும் இலைகள், சென்னா இலைகள் மற்றும் காய்கள்,  மரவள்ளிக் கிழங்கு பொருட்கள் (கால்நடைத் தீவணம்), முட்டை, தேன், விதையில்லா புளி, உலர்ந்த சாப்பிடக்கூடிய காளான், குங்குமப்பூ, சீய்க்காய்த் தூள், காங்க்ரா தேயிலை, அகார் அகார், பப்பேயின், அரிசி,

Agriculture (Representational Image)
Agriculture (Representational Image)
Photo: Pixabay

கோதுமை ஆட்டா, பயறு வகைகள், தானியங்கள், கடலை மாவு, பாசுமதி அரிசி (ஏற்றுமதி), சுஜி மற்றும் மைதா, திராட்சை, ஆப்பிள், அல்போன்சா மாம்பழம் (ஏற்றுமதி), அல்போன்சா மாம்பழம் (வீட்டுப் பயன்பாடு), பெட்டியில் அடைக்கப்பட்ட / பாட்டிலில் அடைக்கப்பட்ட பழங்கள், பழப்பொருட்கள், சிட்ரஸ், உருளைக்கிழங்கு (ஏற்றுமதி), நீர் கஷ்கொட்டை,  வில்லியம் பேரிக்காய், மாம்பழம், விதை உருளைக்கிழங்கு, தேங்காய், குழம்புப் பொடி, மிளகாய், ஏலக்காய், கொத்துமல்லி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், மிளகாய்த்தூள், பாப்பி விதைகள், மஞ்சள், பெருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் சீவரிக்கீரை விதைகள், சீரகம், மிளகு, சோம்பு, சணப்பை, பனை நார், பருத்தி, கற்றாழை இழை, சணல் மற்றும் சில பொருட்கள் அக்மார்க் சான்றுகளுக்கு உரியதாக இருக்கின்றன.

மேற்காணும் உணவுப் பொருட்களில் வேளாண்குறியீடு (Agmark) பெற்ற பொருட்கள் தரம் மிக்கது என்ற நம்பிக்கையுடன் வாங்கக் கூடியவையாக இருக்கின்றன

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!