நாட்டு நடப்பு
Published:Updated:

35,700 டன் மூலிகைகள் ஏற்றுமதி விரிந்து கிடக்கும் சந்தை வாய்ப்புகள்... கவனம் ஈர்த்த கருத்தரங்கம்!

கருத்தரங்கில்
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்தரங்கில்

நாட்டு நடப்பு

மூலிகை சாகுபடி மற்றும் சந்தைப் படுத்துதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்... கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஏப்ரல் 18-ம் தேதி நடை பெற்றது. தேசிய மூலிகை மற்றும் மருத்துவ தாவரங்கள் வாரியமும், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள் உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டார்கள். 300 வகையான மூலிகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு பசுமை விகடன் ஊடக ஆதரவு வழங்கி இருந்தது.

கருத்தரங்கில்
கருத்தரங்கில்

காணொலிக்காட்சி மூலம் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, “நம்நாட்டின் பாரம்பர்ய மருத்துவ முறை களான சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்றவற்றுக்கு மூலிகைச் செடிகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 45,000 செடி வகைகள் இயற்கையாகவே காணப்படுகின்றன. இதில் 10,000-க்கும் மேற்பட்ட செடிகள், மருத்துவ தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி மூலிகைப் பயிர்கள் மூலம் உலக அளவில் 215 மில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடக்கிறது. இந்தியாவில் இருந்து மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 35,700 டன் மூலிகை தாவரங்கள் ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் மூலிகை மருந்துப் பொருள்கள் தயாரிக்கும் 5,000-க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.446 கோடி மதிப்புள்ள மூலிகைச் செடிகளை ஏற்றுமதி செய்கிறோம். தமிழ்நாட்டில் மருந்து மற்றும் நறுமணப் பயிர்கள் 16,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்கின்றனர். 2,18,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறாம். தமிழகத்தில் மூலிகைப் பயிர்களை வணிகரீதியாக சாகுபடி செய்யும் வாய்ப்புகள் அதிகமுள்ளன” என்றார்.

கருத்தரங்கில்
கருத்தரங்கில்

பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், “மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் தென்னிந்தியா விலேயே முதல்முறையாக மிகப்பெரிய மாதிரி மூலிகைப் பண்ணை பொள்ளாச்சி யில் அமைய வாய்ப்புள்ளது. அந்த வாய்ப் பைப் பயன்படுத்திக்கொள்ள விவசாயிகள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் பேசினார்கள். பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் இணைச் செயலாளர் எம்.கே.ஜி.ஆனந்தகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.