Published:Updated:

விலை வீழ்ச்சி: வெங்காய ஏலத்தைத் தடுத்து மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம்!

லாசல்காவ் மார்க்கெட்டில் போராட்டம்
News
லாசல்காவ் மார்க்கெட்டில் போராட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்காவ் என்ற இடத்தில் இருக்கும் வெங்காய மார்க்கெட்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட் ஆகும். வெங்காய விலை வீழ்ச்சியால் இங்கு ஏலம் விடுவதை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

Published:Updated:

விலை வீழ்ச்சி: வெங்காய ஏலத்தைத் தடுத்து மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்காவ் என்ற இடத்தில் இருக்கும் வெங்காய மார்க்கெட்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட் ஆகும். வெங்காய விலை வீழ்ச்சியால் இங்கு ஏலம் விடுவதை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

லாசல்காவ் மார்க்கெட்டில் போராட்டம்
News
லாசல்காவ் மார்க்கெட்டில் போராட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்காவ் என்ற இடத்தில் இருக்கும் வெங்காய மார்க்கெட்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட் ஆகும். இந்த மார்க்கெட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வெங்காயத்தை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வருவது வழக்கம். அவை மார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு விவசாயிகளுக்கு பணம் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

விலை வீழ்ச்சி: வெங்காய ஏலத்தைத் தடுத்து மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம்!

இந்த மார்க்கெட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கான விவசாயிகள் வெங்காய சேமிப்புக் கிடங்கு வைத்திருக்கின்றனர். வெங்காயம் குறைந்த விலைக்கு கிடைக்கும்போது அதிக அளவில் கொள்முதல் செய்து இதில் சேமித்து வைத்திருந்து விலை அதிகமாகும்போது விற்பனை செய்வது வழக்கம். மத்திய அரசும் இங்கு வெங்காயத்தை வாங்கி சேமிக்க, சேமிப்புக் கிடங்கை இங்கு திறந்திருக்கிறது. தற்போது மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து அதிகமாக இருக்கிறது. இதனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாள்களில் வெங்காயத்தின் விலை 50 சதவிகிதம் அளவுக்கு சரிந்துள்ளது.

ஒரு குவிண்டால் வெங்காயம் குறைந்த பட்சம் 500 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ரூ.1,400-க்கு விற்பனையாகிறது. கடந்த 15 நாள்களுக்கும் மேலாக இதே நிலைதான் நீடிப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். ஒரு கிலோவுக்கு 30 ரூபாயாவது கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். விலை குறைவு காரணமாக விவசாயிகள் லாசல்காவ் மார்க்கெட்டில் ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

வெங்காய விலை
வெங்காய விலை
vikatan

இது குறித்து மாநில வெங்காய உற்பத்தியாளர் சங்கமான மகாராஷ்டிரா ராஜ்ய காந்தா உத்பதக் சங்கட்டனா தலைவர் பரத் திகோலே கூறுகையில், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் தினமும் இழப்பை சந்தித்து வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் இதைக் கண்டுகொள்வதில்லை.

அடுத்த இரண்டு நாள்களில் வெங்காயத்தின் விலை கிலோ 30 ரூபாயைத் தொடவில்லையெனில் மாநிலத்தில் உள்ள அனைத்து வெங்காய மார்க்கெட்டிலும் ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்துவோம். விவசாயிகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக வெங்காயத்தை மந்த்ராலயா முன்பு வீசுவார்கள் என்று எச்சரிக்கை செய்தார். வழக்கமாக வெங்காய விலை மிகவும் குறையும்போது மத்திய அரசு ஏற்றுமதிக்கு அதிக சலுகை வழங்கும். ஏற்றுமதி அதிகரிக்கும்போது உள்நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரித்துவிடுகிறது. இதனால் வெங்காய ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவிக்காமல் இருக்கிறது.