மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

அந்த 4 நாள்கள்... பசுமை விகடன் வாசகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய காசியண்ணன்!

2007-ல் நடைபெற்ற நிகழ்வில் காசியண்ணன்(நடுவில் இருப்பவர்)
பிரீமியம் ஸ்டோரி
News
2007-ல் நடைபெற்ற நிகழ்வில் காசியண்ணன்(நடுவில் இருப்பவர்)

நினைவுகள்

ஈரோடு மாவட்டம், கீழ் பவானி முறைநீர் பாசன விசாயிகள் கூட்டமைப்பின் தலைவரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி யுமான காசியண்ணனின் மறைவுச் செய்தி தமிழக விவசாயிகளை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வேப்பம்பாளையத்தில் வசித்து வந்த காசியண்ணன் (வயது 74), கடந்த ஜனவரி 17-ம் தேதி உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். விவசாயிகளின் நலன்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காசியண்ணன், 1980-களில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டங்களில் முனைப்போடு பங்கு கொண்டவர்.

காசியண்ணன்
காசியண்ணன்

கீழ்பவானி பாசன கட்டமைப்பின் மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி வழங்கக்கோரி, 1998-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயை நேரில் வலியுறுத்தினார். அதன் பிறகுதான் மத்திய அரசு 4 கோடி ரூபாய் நிதி வழங்கியது. கீழ்பவானி பாசனத் திட்டப் பணிகளுக்குக் கேரளா, கர்நாடகா ஆட்சியாளர்கள் குறுக்கீடு செய்தபோதெல்லாம், சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு கண்டார்.

2007-ல் நடைபெற்ற நிகழ்வு
2007-ல் நடைபெற்ற நிகழ்வு
2007-ல் நடைபெற்ற நிகழ்வில் காசியண்ணன்(நடுவில் இருப்பவர்)
2007-ல் நடைபெற்ற நிகழ்வில் காசியண்ணன்(நடுவில் இருப்பவர்)

பசுமை விகடன் இதழ் மீது மிகுந்த நேசம் கொண்டவர் அதற்கொரு நெகிழ்ச்சியான உதாரணம்... 2007-ம் ஆண்டு, டிசம்பர் 29, 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில், பசுமை விகடன் சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் பயிற்சி முகாமுக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங் களிலிருந்து சுமார் 2,000 விவசாயிகள் வந்திருந்தார்கள். அந்த 4 நாள்களும் விவசாயிகள் தங்குவதற்கும், அவர்களுக்காக சமையல் செய்வதற்கும் தன்னுடைய ஏ.இ.டி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இடவசதி செய்து கொடுத்ததோடு அங்கு தங்கியிருந்த விவசாயிகளை அவ்வப்போது சந்தித்து, ‘குளிக்கத் தண்ணி ஒழுங்கா வருதா... குடிக்குறதுக்குத் தண்ணி இருக்கா... எந்தக் குறை இருந்தாலும் சொல்லுங்க’ என்று அன்போடு உபசரித்தார். இவருடைய பள்ளியில் தங்க வைக்கப் பட்டிருந்த விவசாயிகளை பயிற்சி முகாம் நடைபெற்ற இடத்துக்கு அழைத்துச் செல்லவும்... பயிற்சி முடிந்து, மாலையில் விவசாயிகளைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போகவும், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களைக் கொடுத்து உதவினார். இயற்கையோடு கலந்த காசியண்ணனுக்கு பசுமை விகடன் புகழஞ்சலி செலுத்துகிறது.