
அறிவிப்பு
‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். உங்கள் பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் குறித்து, மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப்: 99400 22128 ஆகியவற்றுக்கு அனுப்பவும். - ஆசிரியர்
கட்டணமில்லா பயிற்சிகள்

மீன் வளர்ப்பு
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 10-ம் தேதி, ‘மீன் வளர்ப்பில் மேலாண்மை முறைகள்,’ 11-ம் தேதி ‘பயறு வகை சாகுபடித் தொழில்நுட்பங்கள்’, 12-ம் தேதி ‘தென்னையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை’, 13-ம் தேதி ‘ஆடு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள்’, 17-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள்’, 20-ம் தேதி ‘பசுந்தீவன உற்பத்தி முறைகள்’, 21-ம் தேதி ‘நெற்பயிரில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை முறைகள்’, 26-ம் தேதி ‘ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, செல்போன்: 94428 72364, 97896 54869.

நாட்டுக்கோழி வளர்ப்பு
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் மார்ச் 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.