Published:Updated:

நிலத்தை கொடுக்க கோரி... மண்ணுக்குள் புதைந்து விவசாயி போராட்டம்!

சுனில் ஜாதவ்

தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் ஆவணங்கள் தனது கையிக்கு கிடைத்த பிறகுதான் போராட்டத்தை கைவிடுவேன் என்று சுனில் ஜாதவ் பிடிவாதமாக இருந்து வருகிறார். அவருக்கு அருகில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

நிலத்தை கொடுக்க கோரி... மண்ணுக்குள் புதைந்து விவசாயி போராட்டம்!

தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் ஆவணங்கள் தனது கையிக்கு கிடைத்த பிறகுதான் போராட்டத்தை கைவிடுவேன் என்று சுனில் ஜாதவ் பிடிவாதமாக இருந்து வருகிறார். அவருக்கு அருகில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

Published:Updated:
சுனில் ஜாதவ்

மகாராஷ்டிராவில் ஏற்கனவே விவசாயிகள் கடன் தொல்லையால் அடிக்கடி தற்கொலை செய்து வருகின்றனர். இதையடுத்து ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில் ஜாதவ். இவருக்கு மாநில அரசு `கர்மவீர் தாதாசாஹேப் கெய்க்வாட் சப்லிகரன் ஸ்வாபிமான் திட்டத்தின்' கீழ் 2019-ம் ஆண்டு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

 நிலத்தை கொடுக்க கோரி...  மண்ணுக்குள் புதைந்து
விவசாயி போராட்டம்!

இதற்காக சுனில் ஜாதவ் அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்கினார். ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நிலத்திற்கான ஆவணங்கள் இன்னும் சுனில் கையிக்கு வரவில்லை. இதனால் தனது எதிர்ப்பை அரசுக்கு வித்தியாசமான முறையில் தெரிவிக்க முடிவு செய்தார். இதற்காக தனது கிராமத்தில் கழுத்தளவுக்கு குழி தோண்டி தன்னைத்தானே பூமிக்குள் புதைத்துக்கொண்டார். அவரது கழுத்துப்பகுதி மட்டும் பூமிக்கு வெளியில் இருக்கிறது.

போராட்டத்தை கைவிடும்படி பலரும் கேட்டுக்கொண்டும் அவர் போராட்டத்தை கைவிட மறுத்து வருகிறார். தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் ஆவணங்கள் தனது கையிக்கு கிடைத்த பிறகுதான் போராட்டத்தை கைவிடுவேன் என்று சுனில் பிடிவாதமாக இருந்து வருகிறார். அவருக்கு அருகில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

விவசாயம்
விவசாயம்

இதற்கு முன்பு பலரும் அரசின் கவனத்தை ஈர்க்க பலரும் வித்யாசமான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். கேரளாவில் ஒருவர் சாலைகளில் இருக்கும் குண்டும் குழியும் சரி செய்யப்படாததை கண்டித்து அரசின் கவனத்தை ஈர்க்க மண் கலந்த தண்ணீரில் குளித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். அதோடு மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாவிற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது விவசாயிகள் பிரம்மாண்ட ரத்த பரிசோதனை முகாம் நடத்துவோம் என்று எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.