Published:Updated:

மஞ்சள், சிவப்பு... ஆளை அசத்தும் பஞ்சாப் செலோஸியா மலர்கள்; சீசனுக்கு தயாராகும் நீலகிரி!

செலோஸியா மலர்கள்

தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை கட்டுபாப்பாட்டில் உள்ள அரசு பூங்காக்கள் மற்ற நாற்றாங்கால்களில் மலர் உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Published:Updated:

மஞ்சள், சிவப்பு... ஆளை அசத்தும் பஞ்சாப் செலோஸியா மலர்கள்; சீசனுக்கு தயாராகும் நீலகிரி!

தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை கட்டுபாப்பாட்டில் உள்ள அரசு பூங்காக்கள் மற்ற நாற்றாங்கால்களில் மலர் உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

செலோஸியா மலர்கள்

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் மே மாதம் நடைபெறவுள்ள கோடை விழாக்களின் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதில் குறிப்பாக தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு பூங்காக்கள் மற்றும் நாற்றாங்கால்களில் மலர் உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

செலோஸியா மலர்கள்
செலோஸியா மலர்கள்

கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து நீலகிரிக்கு வருகைத்தரும் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க நூற்றுக்கணக்கான ரகங்களில் லட்சக்கணக்கான மலர்களை பூந்தொட்டிகளில் பராமரித்து வருகின்றனர். பெரும்பாலான அரசு பண்ணை நாற்றாங்கால்களில் பராமரிக்கப்பட்டு வரும் பூந்தொட்டிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

நூற்றாண்டு பழைமை வாய்ந்த அரசு பூங்காவான குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் பஞ்சாப் செலோஸியா மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்துள்ளன. ஆளை அசத்தும் இந்த செலோஸியா மலர்கள் இன்னும் சில தினங்களில் பயணிகளின் கண்களை குளிர்விக்க உள்ளன.

செலோஸியா மலர்கள்
செலோஸியா மலர்கள்

இது குறித்து தெரிவித்த பூங்கா அதிகாரிகள், "கோடை சீசனுக்காக பல மாதங்களுக்கு முன்பிருந்தே மலர் உற்பத்தியை தொடங்கி பராமரித்து வந்தோம். பூங்கா பணியாளர்களின் கடின உழைப்பால் தற்போது வண்ண வண்ண மலர்கள் பூத்துள்ளன. சிறப்பம்சமாக பஞ்சாப்பிலிருந்து செலோஸியா மலர் விதைகளை தருவித்து ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்தோம். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என பல வண்ணங்களில் பூத்துள்ளன" என தெரிவித்தனர்.