Published:Updated:

``100 பேரில் 60 பேருக்கு சொந்த நிலம்கூட இல்லை" பீகாரில் பேசிய பிரஷாந்த் கிஷோர்!

பிரசாந்த் கிஷோர்

பீகாரில் 100 பேரில் 60 பேருக்கு சொந்தமாக ஒரு நிலம்கூட இல்லை. மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாததால், தொழிலாளிகளாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:

``100 பேரில் 60 பேருக்கு சொந்த நிலம்கூட இல்லை" பீகாரில் பேசிய பிரஷாந்த் கிஷோர்!

பீகாரில் 100 பேரில் 60 பேருக்கு சொந்தமாக ஒரு நிலம்கூட இல்லை. மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாததால், தொழிலாளிகளாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர்

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீகார் மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களைக் கேட்டறியும் நோக்கில், மாநிலம் முழுவதும் 3,000 கி.மீ நடைப்பயணத்தை கடந்த அக்டோபர் 2-ம் தேதி தொடங்கினார். ஜன் சூரஜ் அபியான் என்ற நடைப்பயணத்தின்போது சரண் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அம்மாநிலத்தில் விவசாயிகளின் நிலையைப் பற்றி பேசியதுடன் பீகார் அரசையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

விவசாயிகள்
விவசாயிகள்

கூட்டத்தில் அவர் பேசும்போது, ``கடந்த 75 ஆண்டுகளில் பீகாரில் நிலங்களின் நிலைமையை மேம்படுத்த எதுவும் செய்யாததால் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. பீகாரில் உள்ள விவசாயிகள் ஆண்டு முழுவதும் பயன்படுத்தக்கூடிய பயிர்களைப் பயிரிடுவதால், அவர்களது நிலத்தில் அதிக மகசூல் கிடைப்பதில்லை. அவர்கள் பயிர்களை மட்டுமே வளார்க்கிறார்கள். மேலும், அதை அவர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், கோதுமை வயலில் அதற்கு மாறாக கடுகு விளைவித்தால் ஆண்டு முழுவதும் ஏற்படும் எண்ணெய் தட்டுப்பாட்டை தவிர்ப்பதுடன் நல்ல மகசூல் கிடைக்கும். மாநிலத்தில் உள்ள விவசாயிகள் எண்ணெயை விற்று கூடுதல் வருமானம் ஈட்டுவதைப் பற்றி சிந்திக்கவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பீகார் மக்களில் 100 பேரில் 60 பேருக்கு சொந்தமாக நிலம்கூட இல்லை. மேலும், விவசாயிகளில் 100 பேரில் 5 பேர் மட்டுமே அதிக மகசூல் தரும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். விவசாயம் மூலமாகவோ, வயல்களில் உழைப்பதன் மூலமாகவோ தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர்கள் பீகாரில் நல்ல வருமானம் ஈட்ட முடியாது. விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் பீகாரில் மகிழ்ச்சியான நிலையில் இல்லை என்பதைக் காட்டுகிறது" என்றார்.