Published:Updated:

தர்மபுரியில் விளைந்த தக்காளியை கூடுதல் விலைக்கு சேலத்தில் விற்ற விவசாயிகள்!

உழவர் சந்தை

விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்திடும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் தேசிய மின்னணு வேளாண் வர்த்தகத் திட்டத்தின் செயல்பாடுகள் காரணமாகத் தர்மபுரி தக்காளியும் கடலூர் பலாப்பழமும் சேலம் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைத்து வருகிறது.

Published:Updated:

தர்மபுரியில் விளைந்த தக்காளியை கூடுதல் விலைக்கு சேலத்தில் விற்ற விவசாயிகள்!

விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்திடும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் தேசிய மின்னணு வேளாண் வர்த்தகத் திட்டத்தின் செயல்பாடுகள் காரணமாகத் தர்மபுரி தக்காளியும் கடலூர் பலாப்பழமும் சேலம் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைத்து வருகிறது.

உழவர் சந்தை

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பார்கள். எனினும், மக்களின் உணவுத் தேவைக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைத்து வரும் விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்திடும் வகையில் மத்திய அரசு E-Nam எனப்படும் தேசிய மின்னணு வேளாண் வர்த்தகத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதிகமான விளைச்சல் காலங்களில் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் படும் அவதிக்கு இந்தத் திட்டம் நிரந்தர தீர்வை உருவாக்கியுள்ளது.

 E-Nam
E-Nam

தற்போது தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஒரு கிலோவுக்கு 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் சேலம் மாவட்ட வேளாண்மை விற்பனைத்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக சேலம், தர்மபுரி என இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கும் பயன் கிடைத்துள்ளது.

தேசிய மின்னணு வர்த்தக திட்டத்தின் மூலம் தர்மபுரியில் அதிகம் விளைந்துள்ள தக்காளியை சேலம் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் ஆன்லைன் முறையில் விலைக்கு வாங்கி சேலம் சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கும் ஒரு சேர பயன் கிடைப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாலசுப்ரமணியன்
பாலசுப்ரமணியன்

இதுகுறித்து சேலம் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் பாலசுப்ரமணியனிடம் பேசியபோது, ``தேசிய மின்னணு வர்த்தகத் திட்டம் முழுக்க முழுக்க இணையதளம் வாயிலாகச் செயல்படுத்தப்படுவதால் இடைத்தரகர்கள் யாருமின்றி நேரடியாகப் பயன் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் கொள்முதல் செய்யப்பட்டு சேலத்தில் விற்பனை செய்யும் பணியும் தொடங்கியுள்ளது" என்றார்.