Published:Updated:

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்... பேரதிர்ச்சியில் விவசாயிகள்!

காவிரி டெல்டா விவசாயம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது டெல்டா விவசாயிகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டெல்டா மக்களையுமே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Published:Updated:

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்... பேரதிர்ச்சியில் விவசாயிகள்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது டெல்டா விவசாயிகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டெல்டா மக்களையுமே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காவிரி டெல்டா விவசாயம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது டெல்டா விவசாயிகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டெல்டா மக்களையுமே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றப்பட்ட டெல்டா மாவட்டங்களை, நிலக்கரி சுரங்க பேராபத்தில் இருந்து பாதுகாக்க, தமிழக அரசு போர்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அபய குரல்கள் ஒலிக்கின்றன.

காவிரி டெல்டா
காவிரி டெல்டா

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணப்பாளர் பெ.மணியரசன், ``மத்திய அரசின் நிலக்கரிச் சுரங்கத்துறை ஏல அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு சேத்தியாத்தோப்பு, அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மைக்கேல்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி ஆகிய மூன்று வட்டாரங்களில், எந்தெந்த கிராமங்களில் விளை நிலங்களுக்குக் கீழே எவ்வளவு பழுப்பு நிலக்கரி இருக்கிறது, எவ்வளவு பரப்பளவில் இருக்கிறது, அவற்றையெல்லாம் தோண்டி எடுத்துச் செல்ல தொடர்வண்டிப் பாதை எவ்வளவு அருகில் உள்ளது என்பது உட்பட பல விவரங்களை அந்த ஏல அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

வடசேரி பழுப்பு நிலக்கரி வட்டாரம் (Vadaseri Lignite Block) எனப் பெயரிட்டு, அப்பகுதியில் நிலக்கரி திட்டத்துக்காக 66 ஆழ்துளைக் கிணறுகளும், அரியலூர் மாவட்டம் - உடையார்பாளையம் வட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரி வட்டாரத்தில், இத்திட்டத்துக்காக 19 ஆழ்துளைக் கிணறுகளும் அமைத்து ஆய்வுகள் செய்யப் பட்டுள்ளன. இதில், நிலக்கரி மற்றும் மீத்தேன் எடுக்கத் தனியார் நிறுவனங்கள் ஏலம் கேட்க அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசின் சுரங்கத்துறை! ஏலம் கேட்கக் கடைசி நாள் 2023 மே 30 என்றும், நிலக்கரிச் சுரங்கத் துறையின் தேர்வுக்குழு 2023 சூலை 14 அன்று தேர்வு செய்யப்பட்ட ஏலதாரர் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பும் என்றும் சுரங்கத்துறை ஏல அறிவிப்பு கூறுகிறது (நாள் 29.03.2023)

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்

வடசேரி நிலக்கரி வட்டாரத்தில், தஞ்சாவூர் மாவட்டம் கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, அண்டமி, மோகூர், கருப்பூர், பரவாத்தூர், கண்ணுகுடி, கொடியாளம், வடசேரி ஆகிய ஊர்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் மகாதேவப்பட்டினம், உள்ளிக்கேட்டை, கண்டிதம்பேட்டை, கண்ணாரப்பேட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை முதலிய கிராமங்களிலும் இவற்றின் நெல் வயல்களில் நிலக்கரி எடுக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்களில் மீத்தேன் எடுக்க இந்திய அரசு ஆழ்குழாய்களை இறக்கியபோது, விவசாயிகளைத் திரட்டிக்கொண்டு அவற்றைப் பிடுங்கி எறிந்து, மக்கள் திரள் போராட்டம் நடத்தினார் இயற்கை வேளாண்மைப் புரட்சியாளர் ஐயா நம்மாழ்வார். உழவர்கள் பெருந்திரளாகத் திரண்டு இப்போராட்டங்களை நடத்தினர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா 2015-ம் ஆண்டு மீத்தேன் எடுக்க நிரந்தரத் தடை விதித்து ஆணை இட்டார்.

அதன்பிறகு, சூழ்ச்சியாகப் பெயரை மாற்றிக்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதாகச் சொல்லி ஆழ்குழாய்கள் பல இடங்களில் ஓ.என்.ஜி.சி இறங்கியபோது, கட்சி சார்பற்ற தன்னார்வப் போராளிகள் அங்கங்கே மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்தனர். காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, 2020 பிப்ரவரியில் அதற்கான சட்டப் பாதுகாப்பைச் செய்தார்.

ஜீவக்குமார்
ஜீவக்குமார்

தஞ்சையைச் சேர்ந்த விவசாயிகள் நல செயற்பாட்டாளர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், ``காவிரி டெல்டா என்பது, உணவு உற்பத்திக்கான ஆதாரம் மட்டுமல்ல... தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்கான குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால், இப்பகுதி பாலைவனமாக மாறிப்போகும். இதை போர்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு மெத்தனமாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், இத்திட்டத்துக்கு மறைமுகமாக துணைபோகிறது. இங்கு நிலக்கரி இருக்கிறதா என ஆய்வு நடத்துவதற்கே, தமிழக அரசு அனுமதி அளித்திருக்கக் கூடாது. 2006 - 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சிக்காலத்தில் காவிரி டெல்டாவின் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த, ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேஷனோடு, தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அந்தப் பழி சொல்லில் இருந்து மீண்டு வர தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் படாதபாடு பட்டார். தற்போது நிலக்கரி திட்டத்துக்கு மறைமுகமாக துணை நின்று அவப்பெயர் எடுக்கக் கூடாது. இத்திட்டத்தைத் தடுக்க, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், தமிழ்நாடு தழுவிய பந்த் நடத்த தமிழக அரசு முன் வர வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.