Published:Updated:

இந்திய மாட்டுச் சாணத்தை இறக்குமதி செய்யும் நாடுகள்... காரணம் என்ன?

நாட்டு மாடுகளுடன்

பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் `அர்க்', சர்க்கரை நோய் தொடங்கிப் புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது.

Published:Updated:

இந்திய மாட்டுச் சாணத்தை இறக்குமதி செய்யும் நாடுகள்... காரணம் என்ன?

பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் `அர்க்', சர்க்கரை நோய் தொடங்கிப் புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது.

நாட்டு மாடுகளுடன்

இயற்கை விவசாயத்துக்காக, இந்தியாவிலிருந்து சுமார் 192 மெட்ரிக் டன் நாட்டு மாட்டுச் சாணம் குவைத் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக இந்திய இயற்கை உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் அதுல் குப்தா, ``ஜெய்ப்பூரைச் சேர்ந்த சன்ரைஸ் அக்ரிலாண்ட் என்ற நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை குவைத் நாட்டிடமிருந்து பெற்றிருக்கிறது. வெளிநாடுகள் மாட்டுச் சாணத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொண்டுள்ளதோடு, அதைப் பயன்படுத்தவும் ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக, இந்திய மாடுகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் வெர்மி கம்போஸ்ட்டுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இதற்குக் காரணம், பல நாடுகளும் நாட்டு மாடுகளின் சாணம் குறித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டன.

இந்த ஆராய்ச்சிகளின் மூலம் நாட்டு மாடுகளின் சாணம் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, மண்புழு உரத்தைப் பயன்படுத்தி விளைவிக்கப்படுகிற உணவுப் பொருள்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது மனிதர்களுக்குக் கடுமையான நோய்கள் வராமல் காக்கிறது என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிந்துள்ளனர். இது தவிர, குவைத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் நாட்டு மாடுகளின் சாணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பழங்களின் உற்பத்தி அளவு அதிகரித்திருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது'' என்றிருக்கிறார்.

சுவாமி ஆத்மானந்தா
சுவாமி ஆத்மானந்தா

நாட்டு மாடுகள் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சேலம் சுரபி கோசாலையைச் சேர்ந்த சுவாமி ஆத்மானந்தாவிடம் பேசியபோது, ``2007-ம் ஆண்டுக்கு முன்பு வரை நாட்டு மாடுகளின் சிறப்புகளையும் அவற்றின் சாணம் மற்றும் சிறுநீரின் சிறப்பையும் எங்களைப் போன்ற கோசாலை நடத்துபவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இப்போது, அது உலகம் முழுக்க தெரிய ஆரம்பித்துவிட்டது. அதனால்தான், மாட்டுச் சாணத்தால் உருவான கரிம உரத்தை உலகின் பல நாடுகள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. அதிலும், கலப்பின மாடுகளைவிட இந்தியாவிலிருக்கிற அனைத்து நாட்டு மாடுகளின் சாணத்துக்கு மதிப்பு அதிகம். இதுதான், உலகின் பல நாடுகள் இந்திய நாட்டு மாடுகளின் சாணத்தை இறக்குமதி செய்வதற்குக் காரணம்.

பசுப்பொருள்கள்
பசுப்பொருள்கள்

மேலும், நம் நாட்டில் சத்தமில்லாமல் ஒரு சாதனை நடந்து வருகிறது. நாட்டு மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், சிறுநீர் போன்றவற்றையும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத்துவப் பொருள்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருள்கள், வேளாண் பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என்று என 36 விதமான பொருள்களைத் தயாரிக்கலாம்.

`அர்க்' என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந்தாக எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த `அர்க்', சர்க்கரை நோய் தொடங்கிப் புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. இந்த மருந்துப் பொருள்களுக்கு `இந்தியன் மெடிக்கல் கவுன்சில்' சான்று வழங்கியுள்ளது'' என்கிறார் பெருமிதமாக.