ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

கறவை மாடுகள் வாங்க 30 சதவிகித மானியம்!

மாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாடுகள்

திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அவ்வப்போது சிறப்புத் திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் 11.08.2022 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 64-ன் படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மக்களைப் பொருளா தாரத்தில் தற்சார்பு உடையவர்களாக மாற்று வதற்கான முயற்சியாக 45,000 ரூபாய் மானியத் துடன்கூடிய கடன் வசதி வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் கறவை மாடுகள் வாங்க... 45,000 ரூபாய் மானியத்துடன்கூடிய கடன் வசதியைப் பெறுவதற்கு விண்ணப் பிக்கலாம். அதாவது, கறவை மாடுகள் வாங்குவதற்கு 1,50,000 ரூபாய் கடன் வழங்கப் படுகிறது. இத்தொகையில் 30 சதவிகிதம் (45,000 ரூபாய்) அரசு மானியமாக வழங்கப்படும்.

மாடுகள்
மாடுகள்

இதற்கான தகுதிகள் என்னென்ன?

இந்தத் திட்டத்தில் கடன் பெற விண்ணப் பிக்கும் விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த வராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மேலும், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை வேறு எந்த ஒரு மானிய சலுகையும் பெற்றிருக்கக் கூடாது.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள், மேற்கண்ட தகுதிகள் இருப்பின், தாட்கோ http://application.tahdco.com/ என்ற தளத்திலும் (ஆதி திராவிடர்கள்) மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com/ என்ற தளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க... விண்ணப்பதாரரின் புகைப்படம், சாதிச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை, ஆதார், பான் கார்டு எண், மாடு விற்பனை யாளரிடமிருந்து மாடுகளின் விலையைக் குறிப்பிட்டு எழுதி வாங்கிய ஆவணம் உள்ளிட்டவை அவசியம்.