Published:Updated:

`பயிரை விளைவித்தால் மட்டுமே வாழ முடியும்!'-வருசநாட்டில் வனத்துறையினரைச் சிறைப்பிடித்த வன விவசாயிகள்

சிறைப்பிடித்தனர்

வருசநாடு அருகே அரசரடிப் பகுதியில் உழவுப் பணிகள் செய்ய முயன்ற விவசாயிகளை வனத்துறையினர் தடுத்தனர். அப்போது விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வனத்துறையினரை வாகனத்துடன் சிறைப்பிடித்தனர்.

Published:Updated:

`பயிரை விளைவித்தால் மட்டுமே வாழ முடியும்!'-வருசநாட்டில் வனத்துறையினரைச் சிறைப்பிடித்த வன விவசாயிகள்

வருசநாடு அருகே அரசரடிப் பகுதியில் உழவுப் பணிகள் செய்ய முயன்ற விவசாயிகளை வனத்துறையினர் தடுத்தனர். அப்போது விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வனத்துறையினரை வாகனத்துடன் சிறைப்பிடித்தனர்.

சிறைப்பிடித்தனர்

ஶ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, மேகமலையிலுள்ள வன விவசாயிகளை வெளியேற்ற வனத்துறை தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் மேகமலை, வருசநாடு மலைப்பகுதியிலுள்ள கிராமங்களான தும்மக்குண்டு, உப்புத்துறை, வெட்டுக்காடு, காந்திகிராம், கோடாரியூத்து, கோரையூத்து, மஞ்சனூத்து, இந்திரா நகர், அரசரடி, பூசாரியூத்து, புதுக்கோட்டை, அரண்மனைப்புதூர், பொம்மராஜபுரம், வாலிப்பாறை, தண்டியக்குளம், கொடிக்குளம் குடிசை, காமராஜபுரம் பகுதி விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய வனத்துறை தடைவிதித்துள்ளது.

வனத்துறை தடை
வனத்துறை தடை

இதனால் கடந்த ஏழு மாதங்களாக வன விவசாயிகள் உழவு மற்றும் விவசாயப் பணிகளை மேற்கொள்ளவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால், பயிரிடுவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொள்ளத் தொடங்குவதாக வனதுறையினருக்குத் தகவல் கிடைத்து. அதன் அடிப்படையில், வருசநாடு ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் அரசரடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் விவசாயம் செய்வதற்கான உழவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதை வனத்துறையினர் தடுத்தனர். அப்போது விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வனத்துறையினரை வாகனத்துடன் சிறைப் பிடித்தனர். கண்டமனுர் வனச்சரகர் அலுவலகத்தில்வைத்து பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என வனத்துறையினர் விவசாயிகளை அழைத்தனர். ஆனால் வனத்துறையினரைச் சிறைப்பிடித்துக்கொண்டு விவசாயிகள் விட மறுத்தனர். இதையடுத்து மயிலாடும்பாறை போலீஸார் அரசரடி பகுதிக்குச் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வனத்துறையினரை மீட்டனர்.

இருப்பினும் வனவிவசாயிகள் தாங்கள் விவசாயத்துக்கான உழவுப் பணிகளை மேற்கொள்ளப்போவதாகவும், பயிரை விளைவித்தால் மட்டுமே வாழ முடியும் எனவும் வனத்துறையினரிடம் தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறையிடம் விசாரித்தபோது, ``நீதிமன்ற உத்தரவின்படிதான் வனத்துறை செயல்படுகிறது என எவ்வளவு எடுத்துக் கூறியும் வனவிவசாயிகள் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்’’ என்றனர்.