Published:Updated:

வேளாண் சட்டம்: `அறிக்கை மீது நம்பிக்கை இல்லை; வாபஸ் பெறுவதே தீர்வு!' - விவசாயிகள் தொடர் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

``மத்திய அரசு சட்டங்களை வாபஸ் வாங்கவில்லையென்றால், வருகிற சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும்."

Published:Updated:

வேளாண் சட்டம்: `அறிக்கை மீது நம்பிக்கை இல்லை; வாபஸ் பெறுவதே தீர்வு!' - விவசாயிகள் தொடர் போராட்டம்

``மத்திய அரசு சட்டங்களை வாபஸ் வாங்கவில்லையென்றால், வருகிற சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும்."

விவசாயிகள் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளின் போராட்டங்கள் ஓர் ஆண்டை நிறைவு செய்ய இருக்கிறது. அதனால், விவசாயிகளின் போராட்டங்கள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஞாயிறன்று `மகா பஞ்சாயத்து' என்ற பெயரில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளனர். டெல்லியின் எல்லைப் பகுதிகளிலும், ஹரியானாவிலும் போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் வேளாண் சட்டங்களின் சாதக பாதக அம்சங்கள் குறித்து ஆராய உச்ச நீதிமன்றம் சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஹெச்.எஸ்.மன், பிரமோத் குமார் ஜோஷி, அலோக் குலாட்டி, அனில் கன்வட் ஆகியோர் இடம் பெற்றனர். வேளாண் சட்டங்கள் பற்றி, பல்வேறு விவசாய அமைப்புகள், விவசாயிகள், மாநில அரசுகள் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, கடந்த மார்ச்சில் அறிக்கையை இந்தக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இதுகுறித்து வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வழக்கறிஞர் ஈசனிடம் பேசினோம். ``மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையே ஒழிய, இந்த அறிக்கை மேலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையில்லை. இந்த அறிக்கையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தால், அதை வரவேற்றிருப்போம். அதை விடுத்து, விவசாயிகளுக்கு சாதகமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளோம் என்பது ஏற்புடையதாக இல்லை. இன்னொன்று சரியோ, தவறோ இந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்க வேண்டும். அதை வெளியிடாமல் வைத்திருப்பது சரியானதல்ல.

வழக்கறிஞர் ஈசன்
வழக்கறிஞர் ஈசன்

ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. உச்ச நீதிமன்றமும் இச்சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இப்படியாவது விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் இயற்ற சொல்கிறோம், விளைபொருள் விற்பனையில் விவசாயிகளுக்கு சட்ட பாதுகாப்பு கோருகிறோம், இவற்றில் எதற்குமே மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதனால், இந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்குவதே விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரே வழி.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் வர இருக்கின்றன. இன்னொன்று நவம்பர் 26-ம் தேதியோடு ஓர் ஆண்டை விவசாயிகள் போராட்டம் நிறைவடைகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் 50 லட்சம் விவசாயிகள் ஒன்றுகூட இருக்கிறோம்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதை மிகபெரிய போராட்டமாக முன்னெடுக்க இருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விவசாய சங்கமான பாரதிய கிசான் சங்கம்கூட தற்போது போராட்டம் நடத்துகிறது. இவ்வளவு நடந்தும் மத்திய அரசு சட்டங்களை வாபஸ் வாங்கவில்லை யென்றால், வருகிற சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று விவசாயிகள் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.