
முன்னறிவிப்பு
நடப்பு ஆண்டில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை பெய்ய இருக்கும் தென்மேற்குப் பருவமழை குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் (Australian Rainman) என்னும் கணினி கட்டமைப்பைக் கொண்டு 2021-ம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்க்கப்படும் 60 சதவிகித வாய்ப்புக்கான மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது.

சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்: திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், நாமக்கல், மதுரை, விருதுநகர், விழுப்புரம், கரூர் சேலம், பெரம்பலூர், சென்னை, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம்.
சராசரி மழையளவைவிட அதிகமாக எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்: கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி மற்றும் திருவாரூர்.
தகவல் : வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர்கள் மேலாண்மை இயக்ககம்,தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். கோயம்புத்தூர் - 641 003.
