Published:Updated:

செண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு! தீர்வு என்ன? #DoubtOfCommonMan

Western Ghats

தமிழக-கேரள எல்லையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு உடைந்து 60 ஆண்டுகளாகியும் இதுவரையிலும் சீரமைக்கப்படாமல் கிடப்பதால் நெல்லை, தூத்துக்குடி, ராம்நாதபுரம் மாவட்டங்களின் 36,000 ஏக்கர் விளை நிலங்கள் காய்ந்து கிடக்கிறது.

Published:Updated:

செண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு! தீர்வு என்ன? #DoubtOfCommonMan

தமிழக-கேரள எல்லையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு உடைந்து 60 ஆண்டுகளாகியும் இதுவரையிலும் சீரமைக்கப்படாமல் கிடப்பதால் நெல்லை, தூத்துக்குடி, ராம்நாதபுரம் மாவட்டங்களின் 36,000 ஏக்கர் விளை நிலங்கள் காய்ந்து கிடக்கிறது.

Western Ghats

"தமிழக - கேரள எல்லையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு உடைந்து 60 ஆண்டுகளாகியும், இதுவரை சீரமைக்கப்படாமல் கிடப்பதால், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் 36,000 ஏக்கர் விளைநிலங்கள் காய்ந்துகிடக்கின்றன. இதற்குத் தீர்வு என்ன?" என்ற கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் முத்துக்குமார் இருளப்பன் என்ற வாசகர் கேட்டிருந்தார். அதற்கான பதிலைத் தேடினோம்...

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது, செண்பகவல்லி அணை. சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள இந்த அணை, 1733-ம் ஆண்டில் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானமும் சிவகிரி ஜமீனும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கட்டி முடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதி தண்ணீர் முல்லைப்பெரியாறு அணைக்கும், மற்றொரு பகுதி தண்ணீர் தமிழக எல்லைக்கும் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 50 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தின்போது, சுமார் 286 ஆண்டுகள் பழைமைவாய்ந்த செண்பகவல்லி அணையின் கன்னிகா மதகு பகுதியில் சேதம் ஏற்பட்டது.
விவசாயிகள்
Doubt of common man
Doubt of common man

அந்தப் பகுதியில் உள்ள காட்டாற்று வெள்ளம், பள்ளமான கேரளப் பகுதிக்குள் செல்வதைத் தடுத்து, தமிழக எல்லைக்குள் திருப்பி விடுவதற்காகவே அணை கட்டப்பட்டிருந்தது. 50 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தின்போது, சுமார் 286 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அணையில் சேதம் ஏற்பட்டது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் அந்தப் பாதிப்பு சீர்செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டது.

அதனால் தமிழகப் பகுதிக்கு நீர்வரத்து முழுமையாக நின்றுபோய்விட்டதால், பாசன நிலங்கள் பாதிப்படைந்தன. இதுபற்றி அறிந்த முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடைப்பைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க முயன்றார். அதற்காக, 1985-ம் ஆண்டு தமிழக அரசு சார்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

Western Ghats
Western Ghats

மொத்தம் 10.5 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டதால், இரு மாநில அரசுகளும் செலவைப் பங்கிட்டுக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதற்காக, தமிழக அரசின் சார்பில் ரூ.5.25 லட்சம் கேரள அரசிடம் வழங்கப்பட்டது. கேரள பொதுப்பணித்துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டபோதிலும், பணிகள் தொடங்கப்படவே இல்லை.

இதுதொடர்பாக, தமிழக அரசின் சார்பாகப் பலமுறை நினைவூட்டப்பட்டும் கேரள அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தியது. இந்த நிலையில், 2006-ம் ஆண்டு கேரள அரசு, அந்தப் பணத்தை தமிழக அரசிடம் திருப்பிக் கொடுத்துவிட்டது. அப்போதுதான், இந்த உடைப்பைச் சரிசெய்யவிடாமல் திட்டமிட்டே கேரள அரசு காலம் தாழ்த்துவதை உணர்ந்த தமிழக விவசாயிகள், போர்க்கொடி உயர்த்தத் தொடங்கினார்கள்.

Western Ghats
Western Ghats
பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டால், வன உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.
கேரள வனத்துறை

செண்பகவல்லி அணை, கேரளாவின் பெரியாறு வனப்பகுதியில் இருப்பதாக கேரள வனத்துறை அறிவித்தது. அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், அதில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டால் வன உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்து, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவிடாமல் முட்டுக்கட்டை போட்டது. அதனால், அணையில் ஏற்பட்ட சிறு உடைப்பு பெரிதாகிவிட்டது. அத்துடன், நீண்டகாலமாகிவிட்டதால், திட்ட மதிப்பீடும் தற்போது உயர்ந்துவிட்டது.

இந்த விவகாரம் பற்றிப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளரான கே.ஜி.பாஸ்கரன், ‘‘மேற்குத் தொடர்ச்சி மலையில், வாசுதேவநல்லூரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் செண்பகவல்லி அணை இருக்கிறது. தொடக்கத்தில், தமிழக எல்லைக்குள் இருந்த அணையை, வன எல்லைகளை மறுசீரமைப்பு செய்தபோது கேரளாவின் பெரியாறு புலிகள் காப்பக எல்லைக்குள் கொண்டுசென்றுவிட்டனர்.

K G Baskaran
K G Baskaran

சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டியுடன் பதநீர் சேர்த்துக் குழைத்து, கருங்கல் கொண்டு செண்பகவல்லி அணையைக் கட்டியிருக்கிறார்கள். அதனால் உறுதி குலையாமல் இருக்கிறது. அந்த அணையில் இருந்து மேட்டுப் பகுதியான தமிழக எல்லைக்குள் தண்ணீர் கொண்டுவருவதற்காக 1,450 மீட்டர் தூரத்துக்கு கன்னிகா மதகு என்ற கால்வாயைக் கட்டியிருக்கிறார்கள்.

கன்னிகா மதகு கால்வாய் வழியாகவே தமிழகப் பகுதிக்கு தண்ணீர் வந்தது. அந்தக் கால்வாயில், 30 மீட்டர் தூரத்துக்கு உடைப்பு ஏற்பட்டுவிட்டது. கேரள எல்லைக்குள் இருக்கும் அந்த உடைப்பைச் சரிசெய்யாமல் இருப்பதால், மூன்று மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

கன்னிகா மதகு உடைப்பைச் சீரமைக்க வலியுறுத்தி, 2015 ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.
கே.ஜி.பாஸ்கரன், மார்க்சிஸ்ட் நெல்லை மாவட்டச் செயலாளர்
Doubt of common man
Doubt of common man

இதேமாதிரி, வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த உடைப்பைச் சரிசெய்ய வலியுறுத்தி, 2015-ம் ஆண்டு 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். ஆனாலும், அரசுத் தரப்பில், இரு மாநிலங்களுக்கும் இடையே இந்த விவகாரம் தொடர்பாக எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

செப்டம்பர் 25-ம் தேதி, நதிநீர் விவகாரங்கள் தொடர்பாக தமிழக - கேரள முதல்வர்கள் தரப்பில் பேச்சுவாரத்தை நடக்க இருக்கிறது. அதில், செண்பகவல்லி அணைக்கட்டு விவகாரம் தொடர்பாகவும் பேசி, உரிய முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு அனுப்பியிருக்கிறோம். அத்துடன், தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக கேரள முதல்வரைச் சந்தித்து, இந்த விவகாரத்தைப் பேசவும் திட்டமிட்டுள்ளோம்.

Topography of Shenbagavalli Dam
Topography of Shenbagavalli Dam

செண்பகவல்லி அணையின் உடைப்பைச் சரிப்படுத்தினால், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வளமானதாக மாறிவிடும். இந்த அணையின் கன்னிகா மதகில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைத்தால், சிவகிரி முதல் சாத்தூர் வரையிலான 36,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கருகிக் கிடக்கும் இந்தப் பகுதிகள் பசுமையாக மாற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்’’ என்றார்.

தமிழக அரசு, இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

Doubt of common man
Doubt of common man