Published:Updated:

நீலகிரி: 100 கிலோ நறுமண பொருள்களில் ரகு, பொம்மி யானைகள்! களைகட்டிய நறுமண பொருள்கள் கண்காட்சி!

நறுமணப் பொருள்கள் கண்காட்சி

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நறுமணப் பொருள்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். சிறப்பு அம்சங்களாக நறுமண பொருள்களைக் கொண்டு ஆஸ்கர் விருது வடிவம் மற்றும் ரகு, பொம்மி யானைகளைத் தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.

Published:Updated:

நீலகிரி: 100 கிலோ நறுமண பொருள்களில் ரகு, பொம்மி யானைகள்! களைகட்டிய நறுமண பொருள்கள் கண்காட்சி!

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நறுமணப் பொருள்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். சிறப்பு அம்சங்களாக நறுமண பொருள்களைக் கொண்டு ஆஸ்கர் விருது வடிவம் மற்றும் ரகு, பொம்மி யானைகளைத் தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.

நறுமணப் பொருள்கள் கண்காட்சி

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் தற்போது கோடை சீஸன் களைகட்டியிருக்கிறது. கோடையை கொண்டாட நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மே மாதம் முழுவதும் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் நறுமண பொருள்கள் கண்காட்சித் தொடங்கியது.

நறுமணப் பொருள்கள் கண்காட்சி
நறுமணப் பொருள்கள் கண்காட்சி

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். சிறப்பு அம்சங்களாக நறுமணப் பொருள்களைக் கொண்டு ஆஸ்கர் விருது வடிவம் மற்றும் ரகு, பொம்மி யானைகளை தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர். இவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெரிவித்த நீலகிரி தோட்டக் கலைத்துறை அதிகாரிகள், ``முதுமலைக்கு அருகில் உள்ள கூடலூரில் நறுமண பொருள்கள் கண்காட்சி நடைபெறுவதால் ஆஸ்கர் விருது வென்ற இந்தியாவின் முதல் ஆவணக் குறும்படமான `The Elephant Whisperers' குறும்படத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நறுமணப் பொருள்களைக் கொண்டு ஆஸ்கர் விருது வடிவம் மற்றும் ரகு, பொம்மி யானைகளைத் தத்ரூபமாக வடிவமைத்துள்ளோம்.

நறுமணப் பொருள்கள் கண்காட்சி
நறுமணப் பொருள்கள் கண்காட்சி

பாகன் தம்பதியான பெள்ளி, பொம்மன் ஆகியோரது ஆளுயர புகைப்படங்களையும் காட்சியரங்கில் வைத்துள்ளோம். ஷாஜீரகம், சீரகம், கருஞ்சீரகம், வெந்தயம், சோம்பு, கசகசா, ஏலக்காய், கிராம்பு, மிளகாய் விதை, குறுமிளகு, மராட்டி மொக்கு, ஜாதிபத்திரி, ஸ்டார் அனீஸ் என 100 கிலோ நறுமணப் பொருள்களில் இவற்றை வடிவமைத்துள்ளோம்'' என்று தெரிவித்தனர்.