மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

விதைச்சோம்... பறிச்சோம்... பாரம்பர்ய விவசாயத்தில் சாதிக்கும் சிறைவாசிகள்!

சிறைச்சாலையைப் பசுமைச்சோலையாக மாற்றிய சிறைவாசிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறைச்சாலையைப் பசுமைச்சோலையாக மாற்றிய சிறைவாசிகள்

அடுத்த கட்டம்

புதுச்சேரி காலாப்பட்டில் அமைந்திருக்கும் மத்திய சிறைச்சாலையில் விசாரணை மற்றும் தண்டனை பெற்ற சிறைவாசிகள் சுமார் 300 பேர் இருக்கிறார்கள். சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, சிறைவாசிகள் பாரம்பர்ய விவசாயத்தைத் தொடங்கியது குறித்து 25.04.2022 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், நம்மைத் தொடர்புகொண்ட சிறைத்துறை உயரதிகாரிகள், ‘கடந்த தடவை நீங்கள் வந்திருந்தபோது, எங்கள் சிறைவாசிகள் பாரம்பர்ய விவசாயத்தில் ஒன்றிரண்டு காய்கறிகளை சாம்பிளாக அறுவடை செய்து காண்பித்தார்கள். தற்போது அனைத்தும் முழுமையான மகசூலுக்கு வந்துவிட்டன. அறுவடையைத் தொடங்கிவிட்டார்கள். அந்த மகிழ்ச்சியைப் பசுமை விகடனுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். வர முடியுமா?’ என்று கேட்க, மறுநாளே சென்றோம். சிறைத்துறை ஐ.ஜி ரவிதீப் சிங் சாகரும், சிறைவாசிகளுக்குப் பாரம்பர்ய விவசாயப் பயிற்சியை அளித்த முன்னோடி விவசாயி வெற்றிச்செல்வனும் அங்கு வருகை தந்திருந்தனர்.

சிறைச்சாலையைப் பசுமைச்சோலையாக மாற்றிய சிறைவாசிகள்
சிறைச்சாலையைப் பசுமைச்சோலையாக மாற்றிய சிறைவாசிகள்

பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றிப் புதர்மண்டிக் கிடந்த அந்த இடத்தை இரண்டே வாரத்தில் சீரமைத்து, மண்ணை உழுது, பாத்திகள் பிரித்து, தெளிப்பு நீர்ப்பாசனம் அமைத்தது குறித்தும், அதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பழங்கள், காய்கறிகள், மூலிகைச் செடிகளைப் போட்டுப் பாரம்பர்ய விவசாயத்தைத் தொடங்கியது குறித்தும் 25.04.2022 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் விரிவான கட்டுரையை வெளி யிட்டிருந்தோம். இந்நிலையில் கடந்த வாரம் நம்மைத் தொடர்புகொண்ட சிறைத்துறை உயரதிகாரிகள், ‘எங்கள் சிறைவாசிகள் பாரம்பர்ய விவசாயத்தில் அறுவடையைத் தொடங்கிவிட்டார்கள். அந்த மகிழ்ச்சியைப் பசுமை விகடனுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். வர முடியுமா?’ என்று கேட்க, மறுநாளே சிறையில் ஆஜரானோம். சிறைத்துறை ஐ.ஜி ரவிதீப் சிங் சாகரும், சிறைவாசிகளுக்குப் பாரம்பர்ய விவசாயப் பயிற்சியை அளித்த முன்னோடி விவசாயி வெற்றிச்செல்வனும் அங்கு வருகை தந்திருந்தனர்.

சிறைச்சாலையைப் பசுமைச்சோலையாக மாற்றிய சிறைவாசிகள்
சிறைச்சாலையைப் பசுமைச்சோலையாக மாற்றிய சிறைவாசிகள்

இரண்டு மாதங்களுக்கு முன்பு மண்ணை உழுது, பாத்திகள் பிரித்து, நடவு செய்யப் பட்டிருந்த அந்த இடம் தற்போது, முழுமையான விவசாயப் பண்ணையாக மாறியிருந்தது. அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டிருந்த காய்கறிகள், அவர்களின் உழைப்பையும், விவசாயத்தின் மீதான ஈடுபாட்டையும் வெளிப்படுத்தின.

விவசாய நிலத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கர், “பசுமை விகடனும், அதன் வாசகர்களும் கொடுத்த ஊக்கத்தால் எங்கள் சிறைவாசிகள் தற்போது யாருடைய உதவியுமின்றி வேறோர் இடத்தில் தனியாக விவசாய நிலத்தை உருவாக்கி யிருக்கிறார்கள். ஒன்னேமுக்கால் ஏக்கர் பரப்புள்ள அந்த நிலத்திலும் தங்களின் உழைப்பை விதைக்கத் தயாராகி வருகிறார்கள். கடந்த முறை நீங்கள் வந்தபோது நடவு செய்யப்பட்டிருந்த இடம், இப்போது எப்படி இருக்கிறது என்று நீங்களே பாருங்கள். இந்தச் சாமந்தியைப் பாருங்கள்; இவ்வளவு பெரிய சாமந்தியை இதுவரை நான் சந்தைகளில் பார்த்ததில்லை. 1,000 செடிகளில் நாளொன்றுக்கு 30 கிலோ என இதுவரைக்கும் சுமார் 500 கிலோ சாமந்திப் பூக்களை அறுவடை செய்திருக்கிறோம்.

சிறைச்சாலையைப் பசுமைச்சோலையாக மாற்றிய சிறைவாசிகள்
சிறைச்சாலையைப் பசுமைச்சோலையாக மாற்றிய சிறைவாசிகள்

சந்தைகளில் விற்கப்படும் சாமந்தியைவிட நாங்கள் 5 ரூபாய் குறைவாகவே தருகிறோம். சந்தையில் எங்கள் சாமந்திப் பூவை வாங்கு பவர்கள் முதலில் கேட்கும் கேள்வி இது எங்கிருந்து வருகிறது என்றுதான். இப்போது தினமும் சாமந்திப் பூ கிடைக்குமா என்று எங்களுக்கு நிறைய போன் அழைப்புகள் வருகின்றன. சந்தைக்கு நாங்கள் எடுத்துச் செல்வதற்கு முன் அவர்களே வந்து வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்கள். அதனால் இந்தச் சாமந்திக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது.

சிறைச்சாலையைப் பசுமைச்சோலையாக மாற்றிய சிறைவாசிகள்
சிறைச்சாலையைப் பசுமைச்சோலையாக மாற்றிய சிறைவாசிகள்

தங்களுக்கு உணவாகக் கொடுக்கப்பட்ட தயிரை, புளிக்க வைத்துச் செடியில் தெளித்தார்கள். நாங்கள் அறுவடை செய்த கத்திரிக்காயில்கூட இதுவரை பூச்சித் தாக்குதல் கிடையாது.

விளைபொருள்கள் அனைத்தும்  அரபிந்தோ சொசைட்டி மூலம் விற்பனை செய்யப்பட்டு அந்தத் தொகை சிறைவாசி களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப் படுகிறது. அன்னாசி, ஆப்பிள், கருணைக் கிழங்கு என அடுத்தடுத்து அறுவடைக்குத் தயாராக நிற்கின்றன. இதைவிட நாங்கள் செய்த மற்றுமொரு முக்கியமான விஷயம் நெல் சாகுபடி.

சிறைவாசி
சிறைவாசி

இந்த மண்ணில் நெல் விளைவதற்கான வாய்ப்புகளே இல்லை என்று பல முன்னோடி விவசாயிகள் அடித்துக் கூறினார்கள். ஆனால், எங்கள் சிறைவாசிகளின் உதவியுடன் மண்ணைப் பதப்படுத்த ஆரம்பித்தோம். கற்களுடன் கட்டாந்தரையாக இருந்த இடத்தைக் கலப்பையால் உழ முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் ‘பிகாஸா’ல் அடித்து அடித்து அந்த இடத்தைத் தயார் செய்து 20X40 அடி அளவுக்குச் சின்னப் பொன்னியைப் பயிர் செய்தோம். இப்போது அதுவும் அறுவடைக்குத் தயாராக நிற்கிறது. இந்த விதைகளைக் கொண்டு சிறை வளாகத்தில் இருக்கும் இரண்டரை ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட இருக்கிறோம். இந்த விதை நெல் யாருக்குத் தேவைப்பட்டாலும் சிறையை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல எங்கள் விவசாயப் பண்ணை யையும், பலபயிர் சாகுபடி முறையையும் நேரில் காண விரும்புபவர்கள் எப்போது வேண்டுமானாலும் சிறைத்துறையைத் தொடர்புகொள்ளலாம்” என்றார்.

சிறைச்சாலையைப் பசுமைச்சோலையாக மாற்றிய சிறைவாசிகள்
சிறைச்சாலையைப் பசுமைச்சோலையாக மாற்றிய சிறைவாசிகள்
பாஸ்கருடன் சிறைவாசிகள்
பாஸ்கருடன் சிறைவாசிகள்

ஆயுள் தண்டனை சிறைவாசிகளில் ஒருவரான மணிகண்டன், “36 ஏக்கர் இருக்கும் சிறை வளாகத்தில 10 ஏக்கர் மட்டும்தான் பயன்பாட்டில் இருக்கு. மீதி இருக்குற 26 ஏக்கர் நிலம் பயன்பாடு இல்லாம புதர் மண்டிக் கிடக்குது. அதையும் எங்களுக்கு விவசாயம் செய்ய கொடுத்தா இயற்கை விவசாயம் செய்து, மக்களுக்கு நஞ்சில்லாத காய்கறிகளைக் கொடுப்போம். அடுத்து, உழவர் சந்தையில் எங்களுக்கென்று ஓர் இடத்தை ஒதுக்கிக்கொடுத்தா, நாங்கள் விளைவிக்குற காய்கறிகளைப் பொது மக்களுக்குக் குறைந்த விலையில் கொடுப்போம். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஐயாவும், ஆளுநர் தமிழிசை அம்மாவும் இதுக்கு உதவி செய்யணும்” என்றார்.

சூரியகாந்தி சாகுபடி
சூரியகாந்தி சாகுபடி
நெல்
நெல்

20 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை சிறைவாசியான பிரேம்குமார், ‘‘காய்கறிகளோட சில அரிய வகை மூலிகைகளையும் விளைவிக்கிறோம். வாதநாராயணன் கீரை, அகத்தி, பிண்ணாக்குக் கீரை, கொல்லிமலையிலிருந்து வந்த சிவப்பு பொன்னாங்கன்னி, முடக்கத்தான், பிரண்டை, முருங்கைக்கீரை, குழந்தைப் பேற்றுக்குப் பயன்படும் அம்மான் பச்சரிசி, மணத்தக்காளி, ஆடாதோடா, இன்சுலின் செடி, வெற்றிலைக்கொடி, கீழாநெல்லி உள்ளிட்ட பல மூலிகைகள் எங்ககிட்ட இருக்கு. இது யாருக்குத் தேவைப்பட்டாலும் சிறைத்துறையை அணுகி வாங்கி வளர்க்கலாம்” என்று அழைப்பு விடுத்தார்.