Published:Updated:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கைகொடுக்கும் சேலம் தென்னை நாற்றுப்பண்ணை!

தென்னை நாற்று

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, சேலம் அரசு தென்னை நாற்றுப்பண்ணையிலிருந்து சுமார் 75 ஆயிரம் தென்னை நாற்றுகள் அனுப்பிவைக்கும் பணி நடைபெற்று வருவதோடு, புதிய நாற்றுகள் உற்பத்தியையும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

Published:Updated:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கைகொடுக்கும் சேலம் தென்னை நாற்றுப்பண்ணை!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, சேலம் அரசு தென்னை நாற்றுப்பண்ணையிலிருந்து சுமார் 75 ஆயிரம் தென்னை நாற்றுகள் அனுப்பிவைக்கும் பணி நடைபெற்று வருவதோடு, புதிய நாற்றுகள் உற்பத்தியையும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

தென்னை நாற்று

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியம் டேனிஷ்பேட்டையில், அரசு தென்னை நாற்றுப்பண்ணை செயல்பட்டுவருகிறது. இந்தப் பண்ணையிலிருந்து தரமான, வீரியம் மிக்க தென்னை நாற்றுகளைக் குறைந்த விலைக்கு வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கிவருகிறார்கள். அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் நெட்டை ரக தென்னை நாற்றுகளும், நெட்டைக் குட்டை ரக தென்னை நாற்றுகளும் உற்பத்திசெய்யப்படுகின்றன. நெட்டை ரக நாற்றுகள் 45 ரூபாயிக்கும், நெட்டைகுட்டை ரக நாற்றுகள் 65 ரூபாயிக்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இப்பண்ணையின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தென்னை நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மகேந்திரன்
மகேந்திரன்

தமிழகத்தில், கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு, பல லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. அப்பகுதிகளில் புதியதாகத் தென்னை நாற்றுகள் நடவு செய்வதற்காக, சேலம் அரசு தென்னை நாற்றுப்பண்ணையிலிருந்து தென்னை நாற்றுகள் அனுப்பிவைக்கப்படுகிறது.

இதுபற்றி சேலம் அரசு தென்னை நாற்றுப்பண்ணை நிர்வாக வேளாண்மை அலுவலர் மகேந்திரன், ``கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதியதாகத் தென்னை நாற்றுகள் நடுவதற்காக, தமிழக அரசு தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்ய உத்தரவிட்டது. அதையடுத்து, நாங்கள் தென்னை நாற்றுகளை உற்பத்திசெய்தோம். தற்போது அரசு அனுமதி பெற்று, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தென்னை நாற்றுகள் அனுப்பும் பணியை மேற்கொண்டுவருகிறோம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தட்ப வெட்பநிலைக்கு நெட்டை ரக தென்னை மரங்களே செழித்து வளரும் என்பதால், நெட்டை ரக தென்னை நாற்றுகளை அனுப்பிவைக்கிறோம். இதுவரை 60ஆயிரம் தென்னை நாற்றுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 15 ஆயிரம் தென்னை நாற்றுகளை விரைவில் அனுப்ப இருக்கிறோம்'' என்றார்.