Published:Updated:

``சிறுதானியங்கள் நம் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்!" கோவையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆளுநர் ஆர்.என்.ரவி| சிறுதானிய கருத்தரங்கம்

``சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கவை மற்றும் இயற்கைக்கு எந்த கெடுதலையும் விளைவிக்காதவை என்பதனை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. சிறுதானியங்கள், ஆரோக்கியமான தற்சார்பு எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

Published:Updated:

``சிறுதானியங்கள் நம் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்!" கோவையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

``சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கவை மற்றும் இயற்கைக்கு எந்த கெடுதலையும் விளைவிக்காதவை என்பதனை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. சிறுதானியங்கள், ஆரோக்கியமான தற்சார்பு எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி| சிறுதானிய கருத்தரங்கம்

கோவையிலுள்ள, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ``சர்வதேச சிறுதானிய கருத்தரங்கம் மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி -2023" -ன் நிறைவுவிழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கடந்த 24-ம் தேதிதொடங்கியது, இன்றுடன் முடிவடைகிறது. இறுதி நாளான இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையிட்டார்.  இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி முன்னிலை வகித்தார்.

சிறுதானிய கருத்தரங்கம்
சிறுதானிய கருத்தரங்கம்

கண்காட்சியில் பல்வேறு சிறுதானிய வகைகள், உணவு பொருட்கள், இயந்திரங்கள் இடம்பெற்றன. இக்கண்காட்சியை, பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி | சிறுதானிய கண்காட்சியில்..
ஆளுநர் ஆர்.என்.ரவி | சிறுதானிய கண்காட்சியில்..

கண்காட்சியை பார்வையிட்ட பின் கருத்தரங்கில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ``இந்த வேளாண் நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாநாட்டில் விவசாயிகள், தொழில்முனைவோர், வருங்கால வேளாண் விஞ்ஞானிகள் என இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் உள்ளனர்.

நாட்டில் விவசாயத்தில் பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது. இந்த நிகழ்வுக்கு நாடு முழுவதும் உள்ள நிபுணர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நிபுணர்களை அழைத்துள்ளனர். இந்த மாநாட்டில் அனைத்து நிபுணர்களும் தங்கள் ஆய்வுகளை பகிர்ந்து கொண்டது நமக்கு உதவியாக இருக்கும்.

1800- களிலேயே  ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு, 7 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்தோம். இப்போது டெல்டாவில் 6 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்கிறோம். உலகில் அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான், அவர்களால் கூட அந்த அளவு உற்பத்தி செய்ய முடியவில்லை. 200 வருட காலனியாதிக்கத்தில் நமது விவசாயத்தை ஆங்கிலேயர்கள் அழித்தார்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவி | சிறுதானிய கண்காட்சியில்..
ஆளுநர் ஆர்.என்.ரவி | சிறுதானிய கண்காட்சியில்..

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு முன், இந்தியா உணவு பஞ்சத்தை சந்தித்தது இல்லை. ஆங்கிலேயர்கள், நம் விவசாய முறையை அழித்தனர். அதன் விளைவாகவே, இந்தியா உணவு பஞ்சத்தை எதிர்கொண்டது. உணவு பஞ்சத்தினால் பல மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.

விவசாயப் புரட்சியின் மூலம் இப்போது நமக்கு தரமான உணவுகள் கிடைக்கின்றன. சீனப் போரின் போது நாம் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டோம். ஆனால் இப்போது போதுமான அளவைவிட உணவு அதிகமாகவே உள்ளது. உபரி உணவுள்ள நாடாக உள்ளோம்.

இது விவசாயி மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் செய்த சாதனை. இப்போதெல்லாம் நமக்கு உணவுப் பிரச்சினை இல்லை. ஆனால் உலக அளவில் உணவுக்கு பஞ்சம் இருக்கிறது. பசி இருக்கிறது. நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான். சிறுவயதில் நானும், வயலில் இறங்கி பயிரிட்டு இருக்கிறேன்.

கோதுமை களஞ்சியமாக விளங்குகிறது பஞ்சாப் மாநிலம். அங்கு சில விவசாயிகள், நெல் பயிரிடுவதில் ஆர்வம் காட்டினர். அதற்காக நிலத்தடி நீரை முழுக்க முழுக்க பயன்படுத்தினர். அதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் கடுமையான சரிவை கண்டது. நம் நிலத்தில், என்ன பயிர் பயிரிட்டால் ஏதுவாக இருக்குமோ.. அவற்றைப் பயிரிட வேண்டும். அதிக அளவிலான செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் மண் வளம் கெடுகிறது. மண் வளம் கெடுவதால், இயற்கையின் சமநிலை தவறுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி | சிறுதானிய கண்காட்சியில்..
ஆளுநர் ஆர்.என்.ரவி | சிறுதானிய கண்காட்சியில்..

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை இருந்தது. அங்கு  ஐஐடி மாணவர்கள், சிறுதானியம் மீது கவனம் செலுத்தி இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். தண்ணீர் பிரச்னை உள்ள பகுதிகளில் இப்படி விவசாயம் செய்வதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறுதானியங்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே போதும். சாப்பிடவும் நல்லது. நிலையான ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சிறுதானியங்கள் தேவை.

சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகளின் சபை, 2023 -ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்களின் ஆண்டாக அறிவித்திருக்கிறது. சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கவை மற்றும் இயற்கைக்கு எந்த கெடுதலையும் விளைவிக்காதவை என்பதனை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. சிறுதானியங்கள், ஆரோக்கியமான தற்சார்பு எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்" என்றார்.