Published:Updated:

தொழில்நுட்பம், சாகுபடி, ஏற்றுமதி... வேளாண்மையில் சாதனை படைத்த 6 விவசாயிகளுக்கு விருது!

சாதனை படைத்த விவசாயி சுசீந்தரனுக்கு விருது

``தமிழகத்தின் உணவு தானியம் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 119.97 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் 2022-23 -ல் 120.62 லட்சம் மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யப்பட்டு சாதனைபடைத்துள்ளது. இது கடந்த 2014-15 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எட்டியுள்ள சாதனை ஆகும்." - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

Published:Updated:

தொழில்நுட்பம், சாகுபடி, ஏற்றுமதி... வேளாண்மையில் சாதனை படைத்த 6 விவசாயிகளுக்கு விருது!

``தமிழகத்தின் உணவு தானியம் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 119.97 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் 2022-23 -ல் 120.62 லட்சம் மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யப்பட்டு சாதனைபடைத்துள்ளது. இது கடந்த 2014-15 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எட்டியுள்ள சாதனை ஆகும்." - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

சாதனை படைத்த விவசாயி சுசீந்தரனுக்கு விருது

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் 2021 வரை பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கையெய்திய பணியாளர்களின் 19 வாரிசுகளுக்கு உழவர் நலத்துறை அமைச்சர்,  நேற்று முன்தினம் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார்.

பணி நியமன ஆணை
பணி நியமன ஆணை

இந்நிகழ்வின் போது...

புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் புதிய இயந்திரம் வடிவமைத்து பயன்படுத்தி வரும் இரண்டு விவசாயிகளுக்கு தலா ரூபாய் ஒரு இலட்ச ரூபாயும்,

இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்து வரும் மூன்று விவசாயிகளுக்கு மொத்தமாக ரூபாய் இரண்டு இலட்சமும்,

வேளாண் பொருட்களை சாகுபடி செய்து ஏற்றுமதி செய்து வரும் விவசாயிக்கு ரூபாய் இரண்டு இலட்சம் என ஆறு விவசாயிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

சாதனை படைத்த விவசாயிக்கு விருது
சாதனை படைத்த விவசாயிக்கு விருது

இதுகுறித்து உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில்,

"வேளாண்மைக்கென மூன்று தனி நிதிநிலை அறிக்கைகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் பலனாக பல உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் உணவு தானியம் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 119.97 இலட்சம் மெட்ரிக் டன் மற்றும் 2022-23 -ல் 120.62 இலட்சம் மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யப்பட்டு சாதனைபடைத்துள்ளது.  இது கடந்த 2014-15 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அடையப்பட்டுள்ள சாதனை ஆகும்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மே 24, 2022 அன்று 19 நாட்களுக்கு முன்னரே மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும் ஆறு, கால்வாய்கள் முன்கூட்டியே தூர் வாரி தயார் நிலையில் வைத்திருந்தாலும் குறுவை தொகுப்பு திட்டம் ரூ.61 கோடிக்கு செயல்படுத்தப்பட்டதாலும் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனையாக 5.36 இலட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி அடையப்பட்டது. பாசன விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக ஒன்றரை இலட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயத்திற்காக வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்த கிராம ஊராட்சியின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், உயர் விளைச்சல் தரும் ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களின் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியது, தார்பாலின், ஜிங்க் சல்பேட், ஜிப்சம், உயிர் உரங்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்கியது, நெல் தரிசில் பயறு வகை சாகுபடி மற்றும் மாற்றுப் பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகைகளை ஊக்குவித்தது, ரூ.7858 கோடியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது போன்ற திட்டங்கள் உழவர்களின் வாழ்வில் ஒளியேற்றிவரும் திட்டங்களாகும்.

பணி நியமன ஆணை
பணி நியமன ஆணை

கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.331.81 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டது.

நடைமுறையில் உள்ள பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் மத்திய அரசால் புகுத்தப்பட்ட கொள்கை மாற்றங்களால், இத்திட்டம் தொடங்கப்பட்ட 2016-2017 ஆம் ஆண்டை விட 2021-22 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் காப்பீட்டு மானியம் 240 சதவீதம் உயர்ந்தபோதும், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை 2023-2024 ஆம் ஆண்டில் தொடர்ந்து செயல்படுத்திட காப்பீட்டு மானியமாக ரூ.2,337 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தொழில்நுட்பம், சாகுபடி, ஏற்றுமதி... வேளாண்மையில் சாதனை படைத்த 6 விவசாயிகளுக்கு விருது!

தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியால், 2020-2021 ஆம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.2,572 கோடி 12.79 இலட்சம் விவசாயிகளுக்கும், 2021-2022 ஆம் ஆண்டிற்கு 6.70 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.783 கோடியும் வழங்கியுள்ளது. மேலும், 2022-2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 29,797 சம்பா நெல் விவசாயிகளுக்கு விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் ரூ.49.66 கோடியும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனதிட்டத்தின் கீழ் 1,61,149 எக்டர் பரப்பில் ரூ.1,138.10 கோடி கோடி நிதியில் நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட சூழலில் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்க 1404 எக்டர் பரப்பளவில் பசுமைக் குடில், நிழல் வலைகுடில், நிலப் போர்வை ரூ.18.92 கோடி நிதியில் அமைக்கப்பட்டுள்ளது. அறுவடைக்குபின் செய்இழப்புகளை குறைக்க 870 சிப்பம் கட்டும் அறைகள், 2915 குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கிடங்குகள் ரூ.38.75 கோடி நிதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2693 நடமாடும் விற்பனை வண்டிகள் ரூ.328.35 லட்சம் நிதியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தரமான பந்தல் வகை காய்கறிகள் உற்பத்தி செய்வதற்கு 837.5 எக்டர் பரப்பில் ரூ.14.19 கோடி நிதியில் நிரந்தர பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமர சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, ஊக்குவிக்கும் பொருட்டு, 2022-23ம் ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.2.02 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டது.

செயல் விளக்கம்
செயல் விளக்கம்

2022 - 2023 ஆம் ஆண்டில் தேசிய வேளாண் சந்தைகளில் ரூ.1112.83 கோடி மதிப்பிலான 26.57 லட்சம் எண்கள் தேங்காய் மற்றும் 45.47 லட்சம் குவிண்டால் இதர விளைபொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டு, 3.23 இலட்சம் விவசாயிகளுக்கு மின்னணு தேசிய வேளாண் சந்தை வலைதளத்தின் வழியாக ரூ.999.07 கோடி பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்னணு தேசிய வேளாண் சந்தைகளில் 2022 2023 ஆம் ஆண்டில்,ரூ 646.04 லட்சம் மதிப்பிலான 5.37 லட்சம் எண்கள் தேங்காய் மற்றும் 24250 குவிண்டால் இதர விளைபொருட்கள பண்ணை அளவிலான வர்த்தகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்” என்றார்.

முதல் பரிசு வென்ற சுசீந்தர்...

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த சுசீந்தர் என்ற 38 வயதுள்ள இளைஞர் வேளாண் களை கருவி கண்டுபிடிப்புகான முதல் பரிசை தமிழக அரசிடம் இருந்து பெற்றுள்ளார்.  கேட்டரிங் படிப்பை முடித்த இவர் கடந்த எட்டு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.  சின்னார் 20 ரக  நெல்லை பயிரிட்டு அதில் சிவப்பு கருப்பு என இரண்டு ரகங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளார்.

சுசீந்தர்
சுசீந்தர்

வெறும் ஐம்பது ரூபாயில் களையெடுக்கும் கருவியை கண்டுபிடித்தும் சாதனை படைத்துள்ளார். நம் பசுமை விகடன் வாசகர் மற்றும் இயற்கை விவசாயியான  சுசீந்தரின் கட்டுரை இரு முறை இயற்கையில் உருவாக்கும் இனக்கலப்பு, 50 ரூபாய் செலவில் களை எடுக்கும் கருவி என்ற தலைப்பில் நம் பசுமை விகடனில்  வெளி வந்துள்ளது. தற்பொழுது வாசனை சீரக சம்பா, இலுப்பை பூ சம்பா மாதிரியான பாசுமதி RNR 15435 ரகத்தை   தமிழ்நாட்டில் முதன் முறையாக சுசீந்தர் பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளார். மேலும் பல்வேறு பயிர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவது பெருமைக்குரியது.

சுசீந்தர்
சுசீந்தர்

வேளாண் கருவி கண்டுபிடிப்புக்கான தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்ற விவசாயி சுசீந்தர் இதுகுறித்து நம்மிடம் கூறுகையில், ``தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் அறிவிப்பு வரும் போது விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.. தமிழக அரசு இதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. முதல் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தபடி சாதனை படைத்த விவசாயிகளுக்கு இப்போது விருது வழங்கி பாராட்டியுள்ளனர். மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.  என்போன்ற விவசாயிகளுக்கு இது மிகுந்த ஊக்கத்தை ஏற்படுத்தும்..

என்னுடைய கண்டுபிடிப்பை முதலில் வெளியிட்டு என்னை வெளியுலகுக்கு காட்டிய பசுமை விகடனுக்கு இந்த நேரத்தில் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்“ என்றார் மகிழ்ச்சியுடன்.