ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

கொடுத்தும் பயனில்லை... குறைவான அழுத்தத்தில் 24 மணிநேர மின்சாரம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

ர்பூசணி வயலில் அறுவடையில் முனைப்பாக இருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அப்போது அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியை அழைத்த ஏரோட்டி, “வெயில் வாட்டி எடுக்குது. தர்பூசணியைக் கொண்டுபோய் ஜுஸ் போட்டுக் குடிங்க. வெயிலுக்கு இதமா இருக்கும்’’ என்றபடி ஒரு தர்பூசணியைப் பறித்தார்.

‘‘அட... இருக்கட்டுமப்பா. இந்த வெயிலுக்குப் பயந்தா சம்சாரி பொழப்பு என்னாகுறது? இன்னும் சித்திரை மாசமே பொறக்கல... அதுக்குள்ள வறுத்தெடுக்குது வெயிலு’’ என்று எரிச்சலாகச் சொன்ன வாத்தியார், ‘‘சரி, ஆசைப்பட்டுக் கொடுக் குறதை வேணாம்னு சொல்லக் கூடாது. கொஞ்ச நேரம் பேசிட்டு போறப்ப வாங்கிட்டுப் போறேன்’’ என்றார்.

காய்கறி வியாபாரத்தை முடித்துவிட்டு, காலியான கூடையுடன் வந்து சேர்ந்த ‘காய்கறி’ கண்ணம்மா, ‘‘வாத்தியாருக்கு மட்டும்தான் தர்பூசணி கொடுப்பியா... எனக்கு இல்லையா?’’ ஏரோட்டியை வம்புக்கு இழுத்தார்.

‘‘வா... கண்ணம்மா... உனக்கு இல்லாததா? எத்தனை வேணுமோ நீயே பறிச்சுக்கோ’’ என ஏரோட்டி சிரித்தபடி சொல்லவும், உற்சாக மான காய்கறி, வயலில் இறங்கி சில தர்பூசணிகளைப் பறித்துக்கொள்ள, ஆரம்ப மானது அன்றைய மாநாடு.

‘‘வெக்கை தாங்க முடியாம மனுசங்க தர்பூசணி, இளநி, பழச்சாறுனு குடிக்குறோம். ஆனா, பயிர்கள் என்ன செய்யும்? அதுலயும் கோடையில தண்ணி வேற குறைஞ்சுபோய் பயிர்கள் வாடிப்போகுது. இதுக்கு எதுவும் வழி இருந்தா சொல்லுங்க வாத்தியாரே?’’ அக்கறையாகக் கேட்டார் காய்கறி.

‘‘ஒரு காய் 450 கிராம் எடை இருக்குதாம். ஒரு ஏக்கர் நிலத்துல 80 டன் வரைக்கும் மகசூல் கொடுக்குமாம். 60 நாள்கள்ல மகசூலுக்கு வர்ற அந்த ரகக் கத்திரி, பஜ்ஜி, வத்தலுக்குப் பயன்படுத்தலாமாம்.’’

‘‘வாடிய பயிரைப் பார்த்து வாடிய வள்ளலார் மனசும்மா உனக்கு. வாத்தியாரே இதுக்கு நான் பதில் சொல்றேன்’’ என்ற ஏரோட்டி, ‘‘கோடைக்காலத்துல தண்ணி யில்லாம பயிர்கள் வாடாம இருக்குறதுக்காகப் புதுசா ஒரு ஜெல் அறிமுகப்படுத்தி யிருக்காங்களாம். ‘பூசா ஹைட்ரோ ஜெல்’னு அதுக்கு பேரு. மணல் குருணை மாதிரி இருக்குமாம். அதுல 100 கிராம் எடுத்து மணல் கலந்து நிலத்துல தூவி விட்டா போதுமாம். நான் சொன்னது ஒரு ஏக்கருக்கான அளவு. இது நிலத்துல பாசனம் பண்ற தண்ணியை உறிஞ்சி வெச்சுக்குமாம். 15 நாள்கள் வரைக்கும் பயிர்கள் தண்ணியில்லாம தாக்குப் பிடிக்குமாம். அதுவரைக்கும் வாடாம இருக்குமாம். இதைப் பயன்படுத்துறதுனால 75 பங்கு தண்ணியையும் மிச்சம் பிடிக்கலாமாம். இது கடைகள்ல கிடைக்குதாம். இது தொடர்பா வேற சந்தேகம் இருந்தா, எங்ககிட்ட கேளுங்கன்னு வேளாண்மைத்துறை அதிகாரிங்க சொன்னாங்க’’ என்றார்.

‘‘அதெல்லாம் சரிதான்ய்யா... ஆனா, நம்ம பாட்டன் பூட்டன் காலத்துல இந்த ‘ஜெல்’ போட்டா வறட்சியைச் சமாளிச்சாங்க. மூடாக்கு மாதிரி அற்புதமான விஷயம் கைவசம் இருக்குதே. அதைப் பயன்படுத் துனாலே கோடைக்காலத்துல பயிர்களைப் பாதுகாத்திடலாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘என்ன கண்ணம்மா... யாருக்கு ஓட்டுப் போட்ட?’’ காய்கறியிடம் கேட்டார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘அதெல்லாம் அடுத்தவங்ககிட்ட சொல்ல முடியாது. ஒரு வழியா இந்தத் தேர்தல் அலப்பறை முடிஞ்சது. டிவியில ஒரு நிகழ்ச்சி பார்க்க முடியல. அந்தக் கட்சி, இந்தக் கட்சியைத் திட்டுறதும்... இந்தக் கட்சி அந்தக் கட்சியைத் திட்டுறதும்னு ஒரே தலைவலி. இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு’’ என்றார் கண்ணம்மா.

‘‘டிவியில மட்டுமா கண்ணம்மா... நியூஸ் பேப்பர்லகூட பக்கம் பக்கமா விளம்பரம் வந்திச்சே. ஓட்டு கேக்குறப்ப இருக்க ஆர்வமும் அக்கறையும் அடுத்த 5 வருஷம் காணாமப் போயிடுது. காசுகொடுத்தா ஓட்டு வாங்கிடலாம்னு வேட்பாளர்கள் நினைக் குறாங்க. ‘உங்கப்பன் வீட்டுக் காசா கொடுக் குறீங்க. கொள்ளையடிச்ச பணத்தைத்தானே கொடுக்குறீங்க’னு மக்கள் நினைக்கிறாங்க. இவங்களுக்கு மத்தியில சிக்கித் தவிக்குது ஜனநாயகம்’’ வேதனையாகச் சொன்னார் ஏரோட்டி.

‘‘தேர்தல்தான் முடிஞ்சுபோச்சே. அதை விடுங்க. வேற ஏதாவது தகவல் இருந்தா சொல்லுங்க வாத்தியாரய்யா’’ அடுத்த விஷயத்துக்குத் தாவினார் காய்கறி.

‘‘திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்துல இருக்க காய்கறி மகத்துவ மையத்துல ‘சரபோவா’ ரகக் கத்திரிக்காய்ச் சாகுபடி செய்றாங்களாம். அதோட அளவு ரொம்பப் பெருசாம். ஒரு காய் 450 கிராம் எடை இருக்குதாம். 60 நாள்கள்ல மகசூலுக்கு வர்ற அந்த ரகக் கத்திரி, பஜ்ஜி, வத்தலுக்குப் பயன்படுத்தலாமாம். ஒரு ஏக்கர் நிலத்துல 80 டன் வரைக்கும் மகசூல் கொடுக்குமாம். அந்த ரகக் கத்திரியைப் பசுமைக் குடில், திறந்தவெளி ரெண்டுலயும் சாகுபடி செய்யலாமாம். விதை தேவைப்படுறவங்க, காய்கறி மகத்துவ மையத்தை அணுகுனா, விதைகள் கொடுக்குறாங்களாம்’’ என்றார் வாத்தியார்.

கத்திரிக்காய்
கத்திரிக்காய்

‘‘என்கிட்டயும் ஒரு செய்தி இருக்கு. தமிழ்நாட்டுல பருத்தி தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லையாம். இங்க இருக்க மில்களுக்கு வருஷத்துக்கு 20 லட்சம் பேல்கள் தேவைப் படுதாம். ஆனா, உற்பத்தியாகுறது வெறும் 5 லட்சம் பேல்கள்தானாம். மீதி 15 லட்சம் பேல்கள் வெளிநாட்டுல இருந்து இறக்குமதி ஆகுதாம். அதனால, தமிழ்நாட்டுல பருத்தி உற்பத்தி அதிகப்படுத்துறதுக்காகத் தென்னிந்திய பஞ்சாலை சங்கமான ‘சைமா’ களத்துல குதிச்சிருக்காம். அதோட ஆராய்ச்சி நிலையத்துல இருந்து ஆர்கானிக் நீண்ட இழை பருத்திச் சாகுபடி செய்றதுக்காக நாமக்கல் மாவட்டம் செம்மாண்டாம் பாளையம் பகுதியில விவசாயிககிட்ட ஒப்பந்தம் போட்டிருக்காங்களாம். 500 ஏக்கர் பரப்பளவுல சாகுபடி நடக்கப் போகுதாம்’’ என்றார் ஏரோட்டி.

‘‘பரவாயில்லையே... நீயும் இப்ப தகவல் களஞ்சியம் ஆயிட்டே’’ பாராட்டினார் காய்கறி.

‘‘விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கொடுப்போம்னு முதலமைச்சர் பழனிசாமி, பிப்ரவரி மாசம் சட்டமன்றத்துல சொன்னாரு. இந்த ஏப்ரல் மாசத்துல இருந்து, மும்முனை மின்சாரம் கிடைக்குது. ஆனா, பல இடங்கள்ல மின் அழுத்தம் (வோல்ட்டேஜ்) குறைவா இருக்காம். தொடர்ச்சியா மோட்டார் ஓடும்போது, அழுத்தம் கிடைக்காம பல இடங்கள்ல மோட்டார் காயில் கருகிப்போயிடுதாம். மின்சாரம் கொடுத்திட்டோம்னு, கடமைக்குக் கொடுக்காம, முழு மின் அழுத்தத்துல (ஹை வோல்ட்டேஜ்) மின்சாரம் கொடுத்தாதான், மின்சாரத்தைப் பயன்படுத்த முடியும்னு புலம்புறாங்க விவசாயிகள். தமிழ்நாடு முழுக்கவே இந்தப் பிரச்னை இருந்துட்டு வருது’’ என்ற வாத்தியார், இறுதியாக இன்னொரு தகவலையும் சொன்னார்.

“தேர்தல் முடிஞ்ச மறுநாளே அவசர அவசரமாகத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு கே.என்.செல்வகுமார் என்பவரை புதிய துணைவேந்தரா நியமிச்சிருக்காரு ஆளுநர். புதிய அரசு அமைந்த பிறகுதான் இதுபோன்ற புதிய துணைவேந்தர்கள நியமிக்கிறது வழக்கம்.

இப்படி அவசர அவசரமா நியமிச்சிருக்குறது அரசியல் உள்நோக்கம் கொண்டதுனு சந்தேகப்படுறாங்க. ஒருவேளை, தி.மு.க ஆட்சிக்கு வந்தா இந்த விஷயம் பஞ்சாயத்தானாலும் ஆகும்னு பேசிக்கிறாங்க. சரி, வெயில் உச்சி மண்டைக்கு ஏறுது. நான் வீட்டுக்குக் கிளம்புறேன்’’ என வாத்தியார் கிளம்ப, ‘‘இருங்க நானும் வர்றேன்’’ எனக் காய்கறியும் கிளம்பினார். ‘‘முன்னாடி போங்க, நான் கொஞ்சம் வேலையை முடிச்சுட்டு வந்துடுறேன்’’ என்ற ஏகாம்பரம் அறுவடை பணியில் ஈடுபட முடிவுக்கு வந்தது மாநாடு.