Published:Updated:

பெட்ரோல், டீசல் கிடைக்கவில்லை; எந்த வேலையும் நடக்கவில்லை... பரிதவிக்கும் விவசாயிகள்!

விவசாயி துர்கேஸ்வரன்

சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைக்க காவல்துறை பல்வேறு நவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள 'பங்க்'களில், பாட்டில், கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என்று தடை விதித்துள்ளது.

Published:Updated:

பெட்ரோல், டீசல் கிடைக்கவில்லை; எந்த வேலையும் நடக்கவில்லை... பரிதவிக்கும் விவசாயிகள்!

சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைக்க காவல்துறை பல்வேறு நவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள 'பங்க்'களில், பாட்டில், கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என்று தடை விதித்துள்ளது.

விவசாயி துர்கேஸ்வரன்

நாடு முழுவதும் சமீபத்தில் நடந்த சோதனை நிகழ்வுகளும், அதைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல், செங்கல்பட்டு, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவமும் தீ வைப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

விவசாயத்தில் பவர் டில்லர்
விவசாயத்தில் பவர் டில்லர்

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைக்க காவல்துறை பல்வேறு நவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள 'பங்க்'களில், பாட்டில், கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என்று தடை விதித்துள்ளது.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் 'பங்க்'களில், பெட்ரோல் மற்றும் டீசல் தர மறுப்பதால், விவசாயம் சார்ந்த பணிகள் மூன்று, நான்கு நாட்களாக முடங்கிவிட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

விவசாயப் பணிகளுக்கு பெரும்பாலும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களைத் தான் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் கிடைக்கவில்லை;  எந்த வேலையும் நடக்கவில்லை... 
பரிதவிக்கும் விவசாயிகள்!

அதிலும்,உழவுப் பணிக்கு அதிகம் பயன்படும் டிராக்டர், டில்லர் இயக்க பெட்ரோல் அவசியமாகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் 'பங்க் சென்று, கேன்களில் டிசல் வாங்கி வந்து, வாகனங்களில் ஊற்றி வந்த நிலையில், தற்போது விவசாயிகளுக்கு கேன்களில் கொடுக்க பங்க் ஊழியர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கும், பங்க் ஊழியர்களுக்கும் இடையே ஒரு பக்கம் தகராறு ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து திண்டுக்கல் மாவட்டம் கோட்டூர் ஆவாரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி துர்கேஸ்வரன் பேசும்போது,''பவர் டில்லர் என்ற சின்னவண்டியை நான் விவசாயத்துக்கு படுத்தி வருகிறேன். இதே போல பல விவசாய கருவிகள், வாகனங்கள் பெட்ரோலில் இயங்குது. அதில் 3 லிட்டர், 5 லிட்டர், 8 லிட்டர் இப்படித்தான் பெட்ரோல் போட முடியும்..  

புல் வெட்டும் இயந்திரம்
புல் வெட்டும் இயந்திரம்

தினசரி கிடைக்கும் சின்ன வருமானத்தில் விவசாயிகள் தேவைக்கு ஏற்ப 3 அல்லது 5 லிட்டர் பெட்ரோலை சந்தைக்கு போகும் வழியில் வாங்கி வந்து இந்த வண்டிகளில் ஊற்றி வயல் வேலைகளை பார்ப்பது வழக்கம்.

இந்த நிலையில், இப்போது கேன் கொண்டு சென்று பெட்ரோல் கேட்டால், போலீஸ்காரர் வண்டியில் மட்டும் தான் நிரப்பவேண்டும், கேனில் பெட்ரோல் கொடுக்க கூடது என்று எங்களிடம் கூறிவிட்டனர். எனவே தரவே முடியாது என்று மறுத்து வருகின்றனர்.  

கிராம வயல்களில் இருந்து இந்த விவசாய வண்டிகளை  10 – 20 கி.மீ தூரம் பெட்ரோல் பங்க் வரை கொண்டு செல்வது கடினம். அப்படியே ஒட்டிட்டுபோய் 3 லிட்டர் பெட்ரோலை போட்டு வயலுக்கு வருவதற்குள் பெட்ரோல் காலியாகிவிடும்.

இதனால் மூன்று நாட்களாக எந்த விவசாய வேலையும் ஓடாமல் எங்களைப் போல விவசாய்கள் பலரும் சிரமப்பட்டு வருகிறோம்'' என்றார்.

`கேன்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டதால், விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து காவல்துறையும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.